Search This Blog

Mar 27, 2011

ஜாமிஆ நளீமிய்யா புதிய மாணவர்களை உள்வாங்குகின்றது


ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் – பேருவளை இஸ்லாமிய கற்கை பட்டபடிப்புக்கான 2011ம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை உள்வாங்க உள்ளது இதற்கான புதிய மாணவர் நுழைவு பரீட்சை மூன்று தினங்களில் பிரதேச வாரியாக நடைபெறவுள்ளது . இதற்கான நேர்முக மற்றும் எழுத்துப் பரீட்சைகள்ஏப்ரல் மாதம் 4ஆம், 5ஆம், 6 ஆம் திகதிகளில் காலை 08.30 மணி முதல்ஜாமிஆ நளீமிய்யா வளாகத்தில் நடைபெறவுள்ளன.
நுழைவு பரீட்சை வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 04.04.2011 ஆம் திகதி திங்கட்கிழமையும், தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 05.04.2011 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும், மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 06.04.2011 ஆம் திகதி புதன்கிழமையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
ஏக காலத்தில் மாணவர்கள் .இஸ்லாமிய கற்கைநெறியில் சிறப்புத் தேர்ச்சி, இலங்கை கல்வியியல் பட்டப்படிப்பு, தகவல் தொழில்நுட்ப டிப்ளோமா பாடநெறி ஆகியன போதிக்கப்படுவர் என்பதுடன் ஜாமிஆ நளீமிய்யா சர்வதேச இஸ்லாமிய உலகின் பல்கலைக்கழகங்களது சம்மேளனத்தில் (FUIW) அங்கத்துவத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதன் பட்டச்சான்றிதழ் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகங்களினால் அங்கீகரிக் கப்பட்டதாகும் என்பதும் குறிபிடத்தக்கது.
நுழைவுக்கான கல்வி தகமைகளாக குறைந்த பட்சம் க.பொ.த(சா.த) பரீட்சையில் சித்தியடைந்து, க.பொ.த(உ.த) பரீட்சைக்குத் தோற்றுவதற்கான குறைந்த பட்ச தகைமைகளை பெற்றிருத்தல் -இஸ்லாம், கணிதம், தமிழ் ஆகிய பாடங்களில் சித்தியடைந்திருத்தல்- என்பதுடன் தேர்வுக்கு வருபவரின் வயது 31.01.2011 இல் 17 வயதுக்கு மேற்படாதிருத்தல் வேண்டும் என்றும்
நுழைவுத்தேர்வுக்கு வருபவர்கள் பிறப்புச் சாட்சிப்பத்திரம், க.பொ.த(சா.த) பரீட்சைப் பெறுபேறு ஆகிய வற்றின் மூலப்பிரதி ஆகியவற்றுடன் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை, தேக ஆரோக்கியமுள்ளவர் என்பதை நிரூபிப்பதற்கான மருத்துவச் சான்றிதழ் என்பனவற்றை கொண்டுவருதல் வேண்டும் என்றும் மற்றும் ஏனைய ஆவணங்கள், புலமைச் சான்றிதழ்கள் என்பனவும் பரீட்சிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலதிக  தொடர்புகளுக்கு: 0342276338, 0342277112


No comments:

Post a Comment

المشاركات الشائعة