லிபியாவில் தொடர்ந்தும் சண்டை நடைபெற்று வருகின்றது கடாபிக்கு விசுவாசமான படைகள் கிழக்கின் சில பகுதிகளிலும் மேற்கின்தலைநகர் திரிபோலிக்கு அன்மித்த பகுதியான சவியாஹ் பிரதேசத்தில் சண்டை நடைபெறுகின்றது
சவியாஹ் திரிபோலிக்கு 50 கீ.மீ தூரத்திலுள்ள பகுதியை கடாபிக்கு விசுவாசமான் படைகள் யுத்த டாங்கிகள் சகிதம் சுற்றி வளைத்து அவற்றை கடாபி எதிர்பாளர்களிடம் இருந்து கைப்பற்றும் முகமாக கடும் மோட்டார் மற்றும் துப்பாகிகள் சகிதம் தாக்குதல் நடத்தியுள்ளது விரிவாக
இந்த தாக்குதலில் 30 தொடக்கம் 50வரையான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் அதேவேளை சவியாஹ் பிரதேசத்துக்கு பொறுப்பான கடாபி எதிர்ப்பு மக்கள் படையின் தளபதி ஒருவர் கடாபி படையால் கொல்லபட்டுள்ளார். லிபியாவில் பல பிரதேசங்களில் விமான தாக்குதல்களும் இடம்பெற்று வருகின்றது
இன்று ஜும்மாஹ் தொழுகையின் பின்னர் ஆர்பாட்டங்கள் வேகம் பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது கடந்த இரு தினங்களாக கடாபிக்கு விசுவாசமான படைகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது எனினும் கடாபிக்கு எதிரான எதிர்ப்பு பலம் பெற்றுவருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன இந்த நிலையில் நிறைந்த லிபிய பணத்துடன் லிபியாவில் இருந்து புறப்பட்ட கப்பல் ஒன்று பிரிட்டன் கடற் படையால் தடுத்து நிறுத்தபட்டுள்ளது அதேவேளை தற்போது மனிதாபிமான உதவி என்றபோர்வையில் மேற்கு நாட்டு படைகள் லிபியாவில் கால்பதித்து வருகின்றமை குறிபிடத்தக்கது
No comments:
Post a Comment