Search This Blog

Mar 25, 2011

லிபியா மீதான மேற்கின் போர் சிலுவை யுத்தமா ?


M.ஷாமில் முஹம்மட்
 நேட்டோ லிபியா மீதான ஐநாவின் ‘விமான பறப்பு தடையை’ அமுல்படுத்தும் நடவடிக்கைக்கு தலைமை வகிக்க இணங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது. நேட்டோ லிபியா மீதான நடவடிக்கைகளை வழிநடத்தவேண்டும் என்று இத்தாலி, ஜேர்மன், பிரிட்டன், உட்பட பல நாடுகள் வலியுறுத்தி வந்தன பிரான்ஸ் மற்றும் சில நாடுகள் அதை விரும்ப வில்லை என்று செய்திகள் தெரிவித்தன இந்த நிலையில் நேட்டோ பொது செயலாளர் அண்டெர்ஸ் ரஸ்முசென் ‘விமான பறப்பு தடையை’ அமுல்படுத்தும் பொறுப்பை நேட்டோ ஏற்றுகொள்கின்றது என்பதுடன் தற்பாதுகாப்பு கருதிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் மற்ற நடவடிக்கைகள் மேற்கு கூட்டு படையின் கைகளில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார் ஆனாலும் இன்னும் நேட்டோ பொறுப்பு ஏற்கவில்லை இன்று அல்லது நாளை பொறுப்பு ஏற்றுகொள்ளும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது

நேட்டோ பொது செயலாளரின் அறிவிப்பில் இரண்டு நடவடிக்கைகள் பற்றி குறிபிடப்பட்டுள்ளதுடன் இரண்டு தலைமைகள் பற்றியும் தெரிவிக்கப்ட்டுள்ளது ஒன்று ‘விமான பறப்பு தடையை’ அமுல்படுத்தும் பொறுப்பை நேட்டோ கையில் எடுக்க , மற்ற நடவடிக்கைகளான ‘ பொது மக்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும்’   விரிவாக என்ற ஐநா அனுமதியின் கீழ் லிபியா படைகள் மீது வழிந்த தாக்குதல் , தரைப்படை லிபியாவினுள் உள்நுழைந்து தாக்குதல் என்ற பரந்த பொருள் கொண்ட’ பொது மக்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும்’ என்ற ஐநா அனுமதியை மேற்கு கூட்டு படைகள் மேற்கொள்ளும் என்று விளங்கிக்கொள்ளபடுகின்றது
நேட்டோ உறுப்புநாடான துருக்கி இந்த நேட்டோ நடவடிக்கையாக தரை படையை நேட்டோ அனுப்ப கூடாது என்ற நிபந்தனை உள்ளடங்களாக சில இறுக்கமான நிபந்தனைகளை முன்வைத்துள்ளது அதற்கு சாதகமான நிலைபாட்டை ஜெர்மணியும் எடுத்துள்ளது என்பதால் இரட்டை தலைமை என்ற முடிவுக்கு மேற்கு கூட்டு தலைமை வந்திருக்கலாம். இங்கு மேற்கு நாடுகளுக்கு ஐநாவின் அனுமதி என்பது உலகை ஏமாற்ற இன்று தேவைப்படுவதாக தெரிகின்றது ஆனால் ஈராக்கை தாக்கி ஆக்கிரமிக்கும்போதும் , ஆப்கானை தாக்கி ஆக்கிரமிக்கும்போதும் மேற்கு கூட்டு பயங்கரவாதத்திற்கு இந்த ஐநா அனுமதி அன்று தேவைப்படவில்லை என்பது குறிபிடத்தக்கது.
கடந்த ஆறு இரவுகளாக மேற்கு நாட்டு கூட்டு படைகள் அமெரிக்காவின் வழிகாட்டலில் லிபியா மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றது இந்த இராணுவ நடவடிக்கைக்கு 350 யுத்த விமானங்களும் , 38 யுத்த கப்பல்களும் பயன்படுத்த படுகின்றது யுத்த விமானங்களில் அரைவாசி விமானங்களும் 12 யுத்த கப்பல்களும் அமெரிக்காவுக்கு சொந்தமானது இது வரை ஏவப்பட்ட 170 வரையான ஏவுகணைகளில் பெரும்பாலானவை அமெரிக்காவுக்கு சொந்தமானது தற்போது வரைக்கும் மேற்கொள்ள படும் நடவடிகைகளுக்கு அமெரிக்கா தலைமை வகிக்கின்றது எனினும் அமெரிக்கா இந்த தாக்குதல் நடவடிக்கைகளில் தான் பிரதான வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் நடவடிகைகளுக்கு தேவையான உதவிகளை செய்யவதாகவும் தெரிவித்துள்ளது இந்த நிலையில் தரை படை லிபியாவுக்குள் யாரின் தலைமையில் நுழைவது என்று விவாதங்கள் நடைபெற்று வருகின்றது
லிபியாவின் பல இராணுவ இலக்குகள் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது இந்த தாக்குதல்கள் உள்நாட்டில் மக்கள் மத்தியில் கடாபிக்கு அனுதாப பிரிவு ஒன்றை உருவாக்கும் என்றும் மேற்கு , கிழக்கு என்ற சிவில் யுத்த நிலைக்கு வழிவகுக்கும் என்றும் லிபியா என்ற நாடு இரண்டாக பிரிய வழிவகுக்கும் என்று எண்ணுவது தவறாகாது இந்த நிலையில் மேற்கு கூட்டு படைகள் உள்நுழைந்து தாக்குமா? அல்லது கடாபியையும் மட்டுபடுத்தப்பட்ட அதிகாரத்துடன் வைத்துகொண்டு லிபியாவை இரண்டாக பிரித்து வைத்து எண்ணெய் வளமிக்க கிழக்கில் உருவாக்கப்பட்டுள்ள நிர்வாகத்தை முழுமையாக மேற்கு மீது சார்திருக்க செய்யவதன் ஊடாக ஈராக் , ஆப்கான் போன்ற ஒரு நிலையை ஆபிரிக்காவிலும் தோன்ற செய்யுமா என்பது விரைவில் தெரியவரும்
கிழக்கு லிபியாவில் உருவாக்க பட்டு வரும் நிர்வாகம் முழுமையாக மேற்கின் தயாரிப்பாகும் அதன் போராளிகள் சிறு கோத்திரங்களாகவும் தனிநபர்களாகவும் மேற்கு உருவாக்கியுள்ள தலைமையின் கீழ் தற்போது ஒன்று பட்டுள்ளனர் இந்த போராளிகள் , இந்தமக்கள் பக்குவம், அனுபவும், தூர நோக்கு கொண்ட சர்வதேச இஸ்லாமிய இயக்கங்களால் எந்த வகையிலும் பயிற்றப்படாதவர்கள் அங்கு குறிப்பிட்ட இஸ்லாமிய இயக்கங்கள் இருந்தாலும் அவர்களின் செல்வாக்கு பாரிய மக்கள் சமூகத்தை ஒரு திசை நோக்கி வழிகாட்ட போதுமானதாக இல்லை என்றுதான் அறிய முடிகின்றது ஆகவே போராட்டம், ஜிஹாத் என்று திரண்டு நிற்கும் அந்த மக்கள் போராளிகள் மேற்கின் தயாரிப்பான தலைவர்களின் கீழ்தான் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இவர்களை யாரும் இலகுவில் ஏமாற்ற முடியும் தமது அரசியல் தேவைகளை நிறைவேற்ற அல்குர்ஆன், அல்ஹதீஸ் ஆகியவற்றை பயன்படுத்திக் கூட இவர்களை விரும்பிய வடிவத்துக்கு வார்த்துகொள்ள முடியும் என்பது மேற்கின் சூழ்ச்சி முறையிலான நடவடிக்கைகளுக்கு களம் இலகுவாக இருப்பதை காட்டுகின்றது. இந்த மாதிரியான இரகசிய நடவடிக்கைகளை ஆப்கானிலும் , பாகிஸ்தானிலும் மேற்கு உலகம் வெற்றிகரமாக செய்துவருகின்றது என்பது நோக்கத்தக்கது
மறுபுறம் கடாபி சிலுவை யுத்தம் லிபியா மீது தொடுக்கப்பட்டுள்ளது சுவர்கத்தின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது இளம் சமுகமே திரண்டு வா தொழுது முடித்து விட்டாயா ? எடுகையில் ஆயுதத்தை கிறிஸ்தவ சிலுவை யுத்தம் உன் நாட்டின் மீது திணிக்கப்பட்டுள்ளது என்று கூவி போர் பறை கொட்டுகின்றார் மறுபக்கம் கடாபி தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் இராணுவம் கடாபிக்கு கட்டுப்படுவதை உடடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து தாக்குதல் நடத்தப் படுகின்றது இந்த தாக்குதல் எதுவரை ? எவ்வளவு காலத்துக்கு ?, தற்போது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் கடாபியை பலவீனப் படுத்துகின்றதா? என்ற விடை தெரியாத கேள்விகள் எமக்கு இருந்தாலும் மேற்கு கூட்டு படைகளுக்கு அதற்கான தெளிவான விடை இருக்கிறது.
விடையாக முடிவாக மேற்கு கூட்டு தரை படை உள்நுழைந்து தாக்குதல் நடத்தலாம் லிபியாவை ஆக்கிரமிக்கலாம் ஒரு பொம்மை நிர்வாகத்தை ஏற்படுத்தலாம் ஒரு ஈராக்காக ஒரு ஆப்கானாக லிபியாவையும் வைத்துகொள்ளலாம், இறுதியில் இழப்பு முஸ்லிம் உம்மாவுக்கு தான் என்ற கணக்குதான் இங்கும் போடப்படுமா ? என்ற கேள்விகள் இன்னும் கேள்விகளாக மட்டும் இருக்கபோவதில்லை.
2004ஆம் ஆண்டு அமெரிக்க ஜோர்ச் புஷ் நிர்வாகம் லிபியாவுக்கு எதிரான பொருளாதார தடைகளை அறிவித்தது இதை தொடர்ந்து கடாபி அணுவாயுத உற்பத்திக்கான முயற்சிகளை கைவிடுவதாகவும் War on Terror நடவடிக்கையில் அமெரிக்காவுடன் முழுமையாக ஒத்துழைப்தாகவும் அறிவித்தார் அதுவரையும் அமெரிக்காவுக்கு கம்யூனிஸ ரஷ்யாவின் ஜோசப் ஸ்டாலினாக தெரிந்த கடாபி அதன் பின்னர் கடாபி மேற்கு நாடுகளுக்கு மைக்கல் கோர்பசேவ்வாக தெரிய தொடங்கினார்.
அத்துடன் கடாபி ஒரு சோஷலிச இடதுசாரி சிந்தை கொண்டவர் எப்போதும் மேற் கு உலகிற்கு எதிரானவர் என்ற தோற்றம் அடிபட்டு போய்விட்டது அதன் பின்னர் மேற்கு உலகம் கடாபியுடன் அனைத்திலும் கைகோர்த்தது முதலாளித்துவ சக்திகளுக்கும் சோஷலிச சக்திகளுக்கும் இடையான போர் லிபியாவில் 2004 ஆம் ஆண்டுடன் முற்று பெற்று விட்டது.
அதை தொடர்ந்து அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளில் எண்ணெய் மற்றும் ஆயுத வர்த்தக கம்பனிகள் லிபியா மீது படையெடுத்தன ஆனால் இதற்கு முன்னரும் லிபியாவுக்கு மிகவும் நெருக்கமான நாடாக இத்தாலி பார்க்கபடுகின்றது இத்தாலியின் எண்ணெய் நிறுவனங்கள் 50 வருடங்களுக்கு மேலாக லிபியாவில் இயங்கிவருவதாக தெரிவிக்கபடுகின்றது இத்தாலியின் பொருளாதார வெற்றிக்கு பின்னால் லிபியாவுடனான உறவு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இத்தாலி லிபியாவின் எண்ணெய் உற்பத்தியில் 38 வீதத்தை ஒபந்த அடிப்படையில் கொள்வனவு செய்கின்றது, லிபியா ஒரு நாளைக்கு 1.45 மில்லியன் பெறல் எண்ணெய்யை உற்பத்தி செய்கின்றது அவற்றை மேற்கு உலகம் தடை இன்றி அனுபவித்து வருகின்றது என்பதும் வெளிப்படையான உண்மை.
இந்த வளங்களை பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் தாம் பெற்றுக்கொள்ள முயல்வதாக இத்தாலி அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் எனினும் மேற்கு மேலாதிக்கம் லிபியாவில் வளங்களை கொள்ளையடித்து தமக்குள் பங்கீடு செய்வது என்பதை விடவும் எழுச்சி பெற்றுவரும் இஸ்லாமிய அரசியல் எழுச்சி அலைகளை முறியடிக்கவும் ஆப்கான் , பாகிஸ்தான் போன்ற ஒரு நாட்டை சோமாலியாவுக்கு அடுத்ததாக ஆபிரிக்காவில் உருவாக்கும் தமது நீண்டகால அடிப்படையான திட்டத்துடன்தான் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது துனுசியாவிலும், எகிப்திலும் வெற்றிபெற்றுள்ள மக்கள் ஆர்பாட்டங்கள் மேற்கை அதிர்வடைய செய்துள்ளது அந்த அமைதியான ஆட்சி மாற்றங்கள் மேற்கின் நலன்களுக்கு எதிர்காலத்தில் முற்றுபுள்ளி வைக்கும் என்று மேற்கின் கணக்கு சரியாக இருந்தால் லிபியா கண்டிப்பாக ஆப்கானாக மாறவேண்டும் என்பது அவர்களுக்கு தவிர்கமுடியாத முடிவு.
லிபியாவின் வளங்களை மேற்கு நாடுகள் மட்டுமல்ல சீனாவும், ரஷியாவும் கூட பெற்றுவருகின்றது சீனாவும், ரஷியாவும் பல பில்லியன் பெறுமதியான ஒப்பந்தங்களை செய்துள்ளது சீனாவும் லிபியாவின் எண்ணெய்யை கொள்வனவு செய்கின்றது, ரஷியா 4 பில்லியன் பெறுமதியான வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது சீனா லிபியாவின் எண்ணெயில் 5 வீதம் தொடக்கம் 7 வீதமான எண்ணெய்யை கொள்வனவு செய்கின்றது இது அமெரிக்கா லிபியாவில் இருந்து பெற்று கொள்ளும் எண்ணெக்கு நிகரானது ஆகவே தாக்குதல் படையெடுப்பு ஆகியவற்றின் நோக்கம் வெறும் வளங்கள் மீதான வேட்டையல்ல அதற்கும் மேலாக எதிர்காலத்தில் இஸ்லாம் பிராந்தியத்தில் செல்வாக்கு மிக்க சக்தியாக வளர்ந்து வருவதை தடுக்கும் இரகசிய நோக்கம் கொண்டது இது ஆழமான தெளிவான இலக்கு மற்றும் திட்ட அடிப்படைகளை கொண்டது என்றுதான் விளங்கிக்கொள்ள முடிகின்றது .
லிபியாவின் வளங்கள் சவூதியை விடவும் மலிவாக கிடைக்கும்போது அதை ஆக்கிரமிப்பது பெற்றுகொள்ளவேண்டிய தேவைகள் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது காலம் எமக்கு இவற்றை தெளிவு படுத்தும்- லிபியா மீதான மேற்கின் போர் சிலுவை யுத்தமா ? காலம் பதில் சொல்லும்.
குறிப்பு
இங்கு இன்னொரு விடயம் சுட்டிகாட்டப் படவேண்டும் டாக்டர் யூசுப் அல் கர்ழாவி லிபியா மீது மேற்கு நாடுகளின் கூட்டு தாக்குதல் சர்வாதிகாரி கடாபி தெரிவித்தது போன்று சிலுவை யுத்தம் அல்ல என்று தெரிவித்துள்ளமை மேற்கு நாடுகளின் ஆரம்ப குண்டு வீச்சுகளின் போது சொன்னவை என்பது குறிபிடத்தக்கது சர்வாதிகாரி கடாபி மக்களை படுபயங்கரமான முறையில் ஒடுக்க படைகளை ஏவி இருந்தார் பெங்காசியில் ஒவ்வொரு வீடு வீடாக எனது படை வரும் இறக்கம் காட்டாது கடுமையாக நடந்து கொள்ளும் என்று கொக்கரித்தார்.
அந்த வேளையில் மக்கள் அதிர்ந்து போய் இருந்தனர் என்பதும் ஐநா வின் மக்களை பாதுகாக்க அணைத்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதியை வழங்கியது அதன்போது லிபியாவின் மக்கள் வீதிக்கு இறங்கி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள் என்பது குறிபிடதக்கது எனது கட்டுடையை பெரும் மதிப்புக்குரிய அறிஞ்ஞர் டாக்டர் யூசுப் அல் கர்ழாவியின் கருத்துடன் முரண்படுவதாக எடுத்து கொள்ளவேண்டாம்

No comments:

Post a Comment

المشاركات الشائعة