அரபு முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டு வரும் எழுச்சி தொடர்பில் இஸ்ரேல் மிகுந்த கவலையும் அச்சமும் கொண்டுள்ளது அதன் காரணமாக அதன் சதி நாசகார திட்டங்களில் தீவிரமாக இயங்கிவருகின்றது மொசாத் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருவதுடன் அதன் முக்கிய அதிகாரிகளுக்கான விடுமுறைகளை இரத்து செய்துள்ளது எகிப்தில் முபாரக் நீக்கப்பட்டதும் இஹ்வானுல் முஸ்லிமீன் பிராந்தியத்தில் சக்திமிக்க அரசியல் சக்தியாக பிராந்திய அரசியலில் இடம்பெறபோவது இஸ்ரேலின் தூக்கத்தை கலைத்து வருகின்றது
எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிமீன் ஒரு அரசியல் கட்சியாக அரசாங்கத்தில் பங்குகொள்ளவுள்ளது தொடர்பாக கருத்துரைத்துள்ள இஸ்ரேலின் துணை வெளிநாட்டு அமைச்சர் டன்னி அய்லோன் எகிப்தில் அமையபோகும் எதிர்கால அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இஹ்வானுல் முஸ்லிமீன் இருப்பதை இஸ்ரேல எதிர்க்கும் என்றும் எகிப்தின் எந்தவொரு தேர்தலிலும் இஹ்வானுல் முஸ்லிமீன் பங்குகொள்ளவதை தடை செய்ய இஸ்ரேல வேலைசெய்யும் என்றும் தெரிவித்துள்ளார் விரிவாக
தற்போது எகிப்தை நிர்வகிக்கும் இராணுவ நிர்வாகம் எகிப்தின் யாப்பை திருத்த நியமிக்கப்பட்டுள்ள 10 பேர் கொண்ட குழுவில் இஹ்வானுல் முஸ்லிமீன் பிரதிநிதி ஒருவரையும் நியமித்துள்ளதுடன் நீதிக்கும் சுதந்திரதுக்குமாகான கட்சி “Freedom and Justice party ” என்ற அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கியுள்ளது குறிபிடத்தக்கது
No comments:
Post a Comment