M.ரிஸ்னி முஹம்மட்
இன்று அரபு முஸ்லிம் பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் மக்கள் எழுச்சியை பலரும் தமக்கு சாதகமாக சித்தரித்து வருகின்றனர் மேற்கு நாடுகளின் பிரதான மிடியாக்கள் நடைபெறும் மக்கள் எழுச்சிக்கும் இஸ்லாத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சித்தரிக்கினறது.
மேற்கு நாடுகளின் பிரதான மீடியாக்களும் மற்றும் வேறு பல மீடியாக்களும் அரபு முஸ்லிம் நாடுகளில் மக்கள் எழுச்சி அடக்குமுறைகளுக்கு எதிரானதும் முற்றிலும் ஜனநாயக தாகம் கொண்டதுமாகும் இந்த எழுச்சி ஒரு வகையில் இஸ்லாத்தின் சமூக கட்டுப்பாடுகளுக்கு எதிரானது என்றும் இந்த எழுச்சிதான் மேற்குலகின் வரைவிலக்கணதுக்கு அமைவான சுதந்திரம், விடுதலை என்பதை அரபி உலகம் அனுபவிக்க வாயல்களை திறக்க போகின்றது இந்த எழுச்சி செய்யும் மக்களுடன் கலந்துள்ள இஸ்லாமிய சக்திகள் இந்த மக்கள் எழுச்சியை களவாட முயற்சிக்கின்றன அது பற்றி கவனமான நடவடிக்கைகள் வேண்டும் என்று கூறிவருகின்றது விரிவாக
உண்மையில் இந்த அரபு முஸ்லிம் பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் மக்கள் எழுச்சி இஸ்லாமிய அடித்தளங்களை கொண்டது அது உடனடியான இஸ்லாமிய அரசியல் எழுச்சியாக உடனடியாக வெளிவராவிட்டாலும் இஸ்லாமிய இயக்கங்களில் தீர்மானங்களுக்கும் அப்பால் இந்த பிராந்திய மக்களின் உள்ளங்களில் தமது ஆட்சியாளர்கள் தொடர்பான இஸ்லாந்தின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக பதிந்துள்ளது அந்த பதிவை ஏற்படுத்தியவர்கள் இந்த பிராந்தியத்தில் உழைக்கும் இஸ்லாமிய அமைப்புகள்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ஆனால் அந்த பதிவுகள் அமைப்புகளின் உறுப்புரிமைகளுக்கு அப்பால் சென்று மக்களை அல்லாஹு அக்பர் என்ற கோசத்துடனும், யாஹ் குத்ஸ் இதோ நாங்கள் உன்னை மீட்க வருகின்றோம் , அல்லாஹ்வின் எதிரி கடாபி போன்ற கோசத்துடனும் மக்களை இஸ்லாமிய சிந்தனைதான் இயக்கிவருகின்றது.
இந்த இஸ்லாமிய ஊக்க சக்தி தொடர்பான தகவல்கள் திட்டமிட்டு மூடிமறைக்கப்படுகின்றது இந்த ஆர்பாட்டங்களில் பெரியளவில் பங்கு கொண்டுள்ள இஹ்வானுல் முஸ்லிமீன் இஸ்லாத்தின் எந்த அடையாளங்களையும் வெளிப்படுத்தாமல் களத்தில் செயல்பட்டமையும் இதற்கு ஒரு காரணமாகி விட்டுள்ளது இன்று மேற்கு உலகின் இந்த ஊடக நிலைபாட்டிற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் ஒரு இஸ்லாம் இவர்களின் உந்து சக்தியாக செயல்பட்டுள்ளது என்பதை ஊடகப்படுத்துவதால் இஸ்லாமிய எழுச்சியலை மேலும் வலுவடையும் என்பதாலும் துருக்கி போன்ற நாடுகளில் இஸ்லாம் மேலும் வலுவான இடத்தை பிடித்து கொள்ளும் என்பதும் ஈரானில் அரசுக்கு எதிரான சிறியளவிலான ஆர்பாட்டங்கள் செயலற்று போகும் என்பதுடன் இந்த பிராந்திய எழுச்சியை இஸ்லாத்துக்கு எந்த தொடர்பும் இல்லாத வெறும் அடக்கு முறைகளுக்கு எதிரானது என்று மட்டும் காட்டுவதன் ஊடாக ஈரானின் கிளர்சிகளுக்கு வலுசேர்க்க முடியும் என்பதாலும் இந்த ஊடக சந்திரத்தை கையாளுகின்றது மேற்கு என்றுதான் கூறமுடியும்.
நடந்து வரும் மக்கள எழுச்சியை அவதானித்தால் இஸ்லாமிய இயக்க சக்தியின் உண்மைகளை கண்டுகொள்ளமுடியும் இது தொடர்பாக கடந்த 25 ஆம் திகதி நான் அரசியல் ஆய்வாளர் M.ஷாமில் முஹம்மட் அவர்களை நேர்காணல் செய்து ஒரு ஆக்கத்தை வழங்கியிருந்தேன் அதற்கு வலுசேர்ப்பதாக PressTv யில் வெளியான ஒரு அரசியல் ஆய்வாளர்களின் ஆவணம் ஒன்றை இங்கு பார்க்கலாம் – அரபு முஸ்லிம் பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் மக்கள் எழுச்சியின் ஊக்க சக்தி இஸ்லாம்தான் என்பதை அவர்களின் கருத்துகளில் இருந்தும் தெரிந்து கொள்வோம் இந்த ஆவணத்தில் ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பின் ஆய்வாளர்களும் பங்குகொண்டுள்ளனர்
No comments:
Post a Comment