லிபியாவில் கடாபி படைகளுக்கு எதிரான விமான தாக்குதல்கள் ஆரம்பித்துள்ளன பிரான்ஸ் விமானபடை கடாபியின் பல இராணுவ டாங்கிகளை தாக்கி அழித்துள்ளதாகவும், கூட்டு விமான படை 110 ஏவுகணைகளை - Tomahawk cruise missiles- எவியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது ஐநா பாதுகாப்பு சபை நேற்று லிபியாவின் மக்களை பாதுகாக்க தேவையான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது இந்த சட்ட அனுமதி மூலம் லிபியாவின் விமானப்டை மற்றும் ஏனைய படைகள் மீதும் மற்ற நாடுகள் தாக்குதல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று காலை தொடக்கம் மேற்கு நாடுகளின் தலைவர்கள் கூடி கடாபி படை மீதான தாக்குதல் முறை தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர் இதில் மேற்கு நாடுகளின் அதிபர்கள் முக்கிய பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் சவூதி, தூபாய் ஆகிய நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர் இதை தொடர்ந்து பிரான்ஸ் தனது விமான படை மூலம் தாக்குதலை ஆரம்பித்துள்ளது பிரான்ஸ் லிபியாவின் 32 வீதமான எண்ணெய்யை பெற்று வருகின்றது என்பது குறிபிடத்தக்கது.
துருக்கி இந்த இராணுவ நடவடிக்கைகளை பொருத்தமற்றது என்று தெரிவித்துள்ளது பிரதான இஸ்லாமிய அமைப்புகள் மேற்கின் லிபியா மீதான இராணுவ நடவடிக்கைகளை ஏற்றுகொள்ளவில்லை என்று ஏற்கனவே தெரிவித்துள்ளது.
நேற்று கடாபியின் இராணுவத்தை இலக்கு வைப்பதாக தெரிவித்து மேற்கு நாடுகள் தாக்குதலை ஆரம்பித்துள்ளன, அந்த தாக்குதலை பிரான்ஸ் விமானபடை முதல் தாக்குதலை நடத்தி தொடங்கி வைத்தது இது பற்றி தெரிவித்த பிரான்ஸ் கடாபியின் பல இராணுவ டாங்கிகளை தாக்கி அழித்துள்ளதாக தெரிவித்தது. பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய மேற்கு நாடுகளின் தலைமயிலான கூட்டு படை 110 ஏவுகணைகளை – Tomahawk cruise missiles- 20 இலக்குகள் மீது எவியுள்ளதாக தெரிவித்துள்ளது.
கடாபியின் விமான எதிர்ப்பு சக்தி பெரிதும் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது ஐநா பாதுகாப்பு சபை நேற்று முன்தினம் லிபியாவின் மக்களை பாதுகாக்க தேவையான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது இந்த சட்ட அனுமதி மூலம் லிபியாவின் விமானப்டை மற்றும் ஏனைய படைகள் மீதும் மற்ற நாடுகள் தாக்குதல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்கள் எதுவரை எவ்வளவு காலத்துக்கு என்பது பற்றி அறிவிக்கப்படவில்லை எனினும் அரசியல் ஆய்வாளர்கள் இந்த மேற்குலகின் நடவடிக்கை மக்களை பாதுகாக்க தேவையான இராணுவ நடவடிக்கை என்று தெரிவிக்கப்பட்டாலும் கடாபியை பதவியில் இருந்து அகற்றும் நோக்கம் கொண்டது என்று தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment