Search This Blog

Mar 22, 2011

அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் லிபியாவை தாக்குவதன் நோக்கம் என்ன?




அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் லிபியா பிரச்சனையில் தலையிட்டு அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதன் நோக்கம் எண்ணெய் வளமும், ஏகாதிபத்தியத்திற்கெதிரான மக்கள் எழுச்சிப் போராட்டத்தை தடுப்பதுமாகும் என கருதப்படுகிறது.
வரலாற்றில் சிரெனைக்கா என அறியப்படும் (Cyrenaica) லிபியாவின் வடமேற்கு பிரதேசங்களிலிருந்து வெடித்துக் கிளம்பிய மக்கள் புரட்சி இறுதியில் தங்களுக்கு வினையாக மாறிவிடும் என அமெரிக்காவும், கூட்டணி நாடுகளும் கருதுகின்றன.
ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்காக போராடும் வெளிநாட்டுப் போராளிகளில் பெரும்பாலோர் சிரெனைக்காவைச் சார்ந்தவர்களாவர். மேலும் மக்கள் எழுச்சியை தலைமையேற்று நடத்துபவர்களில் முக்கியமானவர்கள் இஸ்லாமிஸ்டுகளாவர்.
தர்னா நகரத்தில் எதிர்ப்பு போராட்டத்தின் தலைவர் சுஃபியான் பின்குமு ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் போரை சந்தித்தவராவார்.
எதிர்தரப்பினர் கொள்கைரீதியாக மாறுபட்டு பிரிந்து விடுவார்கள், பின்னர் கத்தாஃபியின் ராணுவத் தளபதிகள் சிலரை கைப்பொம்மைகளாக வைத்து லிபியாவை ஆளலாம் என அமெரிக்க திட்டம் தீட்டியுள்ளதாக கருதப்படுகிறது. ஆனால், எதிர்ப்பாளர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் உருவாகவில்லை.
இஸ்லாமியவாதிகளும், மதசார்பற்றவாதிகளும் இணைந்த ஒரு கவுன்சில்தான் போராட்டத்திற்கு தலைமைத் தாங்குகிறது. முஅம்மர் கத்தாஃபி அரசின் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்த முஸ்தஃபா அப்துல் ஜலீல் சுயமாக கவுன்சிலின் தலைவராக தன்னை அறிவித்த போதிலும் எதிர்ப்பை தொடர்ந்து அவர் அப்பதவியிலிருந்து விலகிவிட்டார்.
அமெரிக்க ராணுவம் தங்களின் மண்ணில் கால் வைத்தால் தங்களின் அரசியல் லட்சியங்கள் முறியடிக்கப்படும் என்ற கவலை எதிர்ப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கத்தாஃபிக்கெதிரான போராட்டத்தை நிறுத்திவிட்டு அமெரிக்காவிற்கெதிரான போரை துவக்குவோம் என முன்பு சாடில் போருக்கு தலைமை வகித்த போராளி ஒருவர் கூறுகிறார்.
கத்தாஃபியை ராணுவ நடவடிக்கை மூலம் வெளியேற்றுவது எளிதல்ல எனவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
விமானம் பறப்பதற்கு தடைச் செய்யப்பட்ட பகுதியை பாதுகாக்க நூற்றுக்கும் அதிகமான ஃபைட்டர் விமானங்கள் தேவை. அவற்றிற்கிடையேயான தகவல் தொடர்பு மிக முக்கியமானதாகும்.
லிபியாவின் விமானப் படையின் வசம் 100க்கும் அதிகமான மிக்ரா-25 எஸ் விமானங்களும், 15 மிராஸ் எஃப்-1 விமானங்களும் உள்ளன.
ஸல்ஃபரின் அளவு குறைவாகயிருப்பதால் ஸ்வீட் ஆயில் என அழைக்கப்படும் லிபியாவின் கச்சா எண்ணெயைத்தான் ஐரோப்பிய ரிஃபனரிகளில் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கத்திய சக்திகள் லிபியாவின் எண்ணெய் வளத்தின் மீது நோட்டமிட இதுதான் காரணமாகும்.
Courtesy: தூது

No comments:

Post a Comment

المشاركات الشائعة