லிபியாவில் கடுமையான சண்டை நடந்து வருகின்றது லிபியாவின் கிழக்கு பிரதேசம் முழுமையாக லிபியாவின் மக்கள் படைகளின் கையில் இருக்கும்நிலையில் லிபியாவின் மேற்கு மற்றும் வடமேற்கு பிரதேசங்களில் கடுமையான சண்டைகள் நடைபெற்றவண்ணம் உள்ளது எனினும் முக்கிய எண்ணெய் கிணறுகளை கொண்ட கிழக்கின் எண்ணெய் நகர்களான ரஸ் லணுப் பகுதியில் கடுமையான சண்டை நடைபெற்று வருகின்றது.
திரிபோலிக்கு 50 கீ.மீ தூரத்திலுள்ள பகுதியான அஸ் சவியாஹ் பிரதேசம் கடாபியின் முற்றுகைக்கு உள்ளாகியுள்ளது அதேபோன்று மிசுரத் மற்றும் பின் ஜவாத் ஆகிய நகரங்களிலும் தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகின்றது இந்த சண்டைகளில் கடாபி தரப்பு கனரக ஆயுதங்களுடன் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது சில நகர பகுதிகளில் அந்த பிரதேச மக்களை மனித கேடையமாக கடாபி படைகள் பயன்படுத்துவதால் மக்களின் நலன்கருதி தாம் சற்று பின் நகர்ந்துள்ளதாக கடாபிக்கு எதிரான மக்கள் படைகள் தெரிவித்துள்ளது விரிவாக
ஆனாலும் தொடரான சண்டை நடைபெறுகின்றது கடாபி 72 மணித்தியாலத்தில் பதவி விலக வேண்டும் என்று கடாபிக்கு எதிரான மக்கள் படைகளின் கூட்டமைப்பான லிபிய தேசிய காங்கிரஸ் அறிவித்துள்ளது என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன கடாபி திரிபோலியில் உள்ள சட்டதரணிகள் ஊடா லிபிய தேசிய காங்கிரசுடன் பேச முயன்றதாக தெரிவிக்கபடுகின்றது இதேவேளை ஐநா லிபியாவை விமானம் பறக்க தடை விதிக்கப்பட்ட பிராந்தியமாக பிரகடனம் செய்யுமாறு லிபிய மக்கள் மற்றும் அரபு முஸ்லிம் நாடுகள் கோரியுள்ளது இது தொடர்பாக அமெரிக்காவும், பிரிட்டனும் அவரசமாக பேசிவருகின்றது லிபியாவை அண்மித்த பகுதிகளில் அமெரிக்கா , பிரிட்டன் , பிரான்ஸ் ஆகிய நாடுகள் தமது படைகளை அனுப்பியுள்ளது.
இந்த நாடுகள் லிபியாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து லிபியாவின் நடவடிக்ளைகளை அவதானித்து வருகின்றது இந்த நாடுகள் இராணுவத்தை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டாலும் லிபியா மக்கள் மற்றும் அரபு முஸ்லிம் நாடுகள் இராணுவ அனுப்பபடுவதை ஏற்றுக்கொள்ளவில்லை ஆனாலும் இந்த நாடுகளின் படைகள் ஏற்கனவே கிழக்கு லிபியாவில் இரகசியமாக கால்பதித்துள்ளது கடந்த நாட்களில் மேற்கு நாடு ராஜதந்திகள் உட்பட பல வெளிநாட்டு இராணுவத்தினர் மக்கள் படைகளிடம் சிக்கிமை குறிபிடத்தக்கது.
கடாபி 72 மணித்தியாலத்தில் பதவி விலக வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட பின்னர் லிபிய தேசிய தொலைக் காட்சியில் தோன்றியுள்ள கடாபி இந்த சண்டைகளுக்கும் கிளர்ச்சிக்கும் ஆப்கானிஸ்தான், எகிப்து, அல்ஜிரியா போன்ற நாடுகளில் இருந்து வந்துள்ள வெளிநாட்டவர்கள் தான் பொறுப்பு என்று தெரிவித்துள்ளார் கடாபி தற்போது சற்று உற்சாகம் அடைந்து வருவதாக தெரிவிக்கபடுகின்றது ஆனாலும் கடாபியின் இறுதி நாட்கள் எண்ணபடுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்
No comments:
Post a Comment