Search This Blog

Mar 7, 2011

லிபியாவில் மக்கள் போராட்டம் யுத்தமாக உருப்பெருகின்றது !




லியியாவில் ஆர்பாட்டங்கள், தெரு சண்டைகள் என்ற நிலை மாறி சிறிய யுத்தமாக மாறிவருகின்றது லிபியாவின் கிழக்கு பிரதேசம் முழுவதும் கடாபிக்கு எதிரான மக்கள் குழுக்களை கொண்ட ஆயுத குழுக்களின்  கட்டுப்பாட்டிலும்  மேற்கின் சில பகுதிகள் தவிர்ந்த மேற்கின் தலைநகர் உட்பட பிரதான பகுதிகள் கடாபியின் கட்டுபாட்டிலும்  உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் திகதி தொடங்கிய  மக்கள் ஆர்பாட்டங்கள்  இரு வாரங்களில் பின்னர் தெரு துப்பாக்கி சண்டைகளாக மாறியது கடந்த ஒரு வாரமாக ஒரு முழு அளவிலான யுத்த பரிமாணத்தின்  தொடக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒரு குட்டி யுத்தமாக  மாறியுள்ளது ஆர்ப்பாட்டம் தொடங்கிய நாட்களில் இருந்து மக்களிடம் பிரதேசங்கள் வீழ்ந்து வந்தது தற்போது அந்த நிலை மாறி முன்னேறி வந்த மக்கள் படைகள் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கடாபியில் கட்டுபாட்டு பிரதேசங்களை சூழ   பாதுகாப்பு அரண்களை அமைத்து அமர்ந்துள்ளது அதேவேளை  தலைநகர் மீது பாரிய தாக்குதல் ஒன்றை நடத்த அவர்கள் தயாராகி வருவதாக போராளி குழுக்கள் தெரிவித்துள்ளது 
லிபியாவின் பெரும்பாலனா எண்ணெய் கிணறுகள் உள்ள பகுதிகள் மக்கள படைகளின் கட்டுபாட்டின் கீழ் இருப்பதுடன் அவைகளை சூழ மக்கள் பட்டைகள் பாதுகாப்பு அரண்களை அமைத்து வருகின்றது இந்த நிலையில் நேற்று வட மேற்கு பிரதேசத்தில் அமைந்துள்ள அஸ் சவியாஹ்  நகரில்  கடும் சண்டை நடைபெற்றுள்ளது.
இரண்டு தடவைகள் கடாபியின் இராணுவம் மக்கள் படைகளின் அரண்களை உடைத்துகொண்டு உள்நுழைந்து தாக்குதல் நடத்தியதுடன் பல மணி நேரம் தமது கட்டு பாட்டின் கீழ் வைத்திருந்தது எனினும் மக்கள் படைகளின் தாக்குதல் ஒன்றில் மீண்டும் கடாபியின் இராணுவ பின்வாங்கியுள்ளது பின்வாங்கிய இராணுவம் மீண்டும் செறிவான தாக்குதல்   ஒன்றை நடத்தி மீண்டும் மக்கள் படைகளை பின்வாங்க செய்து பல மணி நேரம் தமது கட்டு பாட்டின் கீழ் வைத்திருந்தது ஆனாலும் மீண்டும் பலமான தாக்குதல்ளை மேற்கொண்ட மக்கள் படைகள் தமது பழைய நிலையை தக்கவைதுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதில் 30 பேர் கொல்லப்டுள்ளனர் 200 க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்துள்ளனர் கடாபியின் இராணுவத்தின் தரப்பிலும் 6 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக    சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன  கடாபியின் படை எண்ணெய் வளம் கொண்ட பகுதிகளை இழந்துள்ளது தற்போது அவற்றை மீட்கும் நோக்குடன் தாக்குதல்களை நடத்தி வருகின்றபோதும் எந்த முனேற்றமும் இன்றி முடங்கிவருகின்றது என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன     கடாபியின் படையில் உள்ள இராணுவ வீரர்கள் பலர் ஆயுதங்களுடன் மக்கள் படைகளின் கட்டுபாட்டு பகுதிக்குள் ஒடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்
அமெரிக்காவும் மேற்று நாடுகளும் மனிதாபிமான உதவி என்று கூறிக்கொண்டு பலரும் உள்நுழைந்துள்ளனர் என்ற நிலையில் கடாபியின் நிர்வாகத்தில் நீதி அமைச்சர் , மற்றும் உள்ளநாட்டு அமைச்சர் ஆகியோர் பதவிகளை இராஜினாமா செய்தபின்னர் தாம் மக்களுடன் போராடுவதாக கூறிவருகின்றனர் குறிப்பாக நீதி அமைச்சர் தலைமையில் பல இரகசிய கூட்டங்கள் இடம்பெற்று வருகின்றது என்பது குறிபிடத்தக்கது



No comments:

Post a Comment

المشاركات الشائعة