யெமென் நாட்டில் மக்கள் ஆர்பாட்டங்கள் உச்சம் பெற்று வருகின்றது எகிப்து மக்கள் ஆர்பாட்டங்கள் தொடங்கும்போது யெமெனிலும்தொடங்கியது எனினும் ஆரம்பத்தில் அனைத்து மக்கள் தரப்பினரும் கலந்து கொள்ளும் நிலையில் இருக்கவில்லை ஆனால் தற்போது ஆர்பாட்டங்களில் களம் இறங்காத பல தரப்புகள் ஆர்பாட்டங்களில் கடந்த நாட்களாக பங்கு பற்றி வருகின்றது நாட்டின் அனைத்து மக்கள் தரப்பினரும் கலந்து கொள்ளும் நிலை பெற்று வருகின்றது
அதேவேளை நாட்டின் முக்கிய இராணுவ தளபதிகள் சிலர் தாம் மக்களின் பக்கம் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர் இவர்களில் சிலர் இராஜினாமா செய்துள்ளனர் இன்று முக்கிய இராணுவ தளபதியான அலி முஹ்சீன் அல் அஹ்மர் என்ற இராணுவ தளபதியுடன் இன்னும் சில தளபதிகள் இராஜினாமா செய்துள்ளனர் என்று பல்வேறு செய்திகள் தெரிவிகின்றன.
இந்த மக்கள் எழுச்சியை தொடர்ந்து அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் கடந்த ஞாயிற்று கிழமை தனது அமைச்சரவையை கலைத்தார் எனினும் நாட்டின் முக்கிய கோத்திர ,சமூக தலைவர்கள் மற்றும் இமாம்கள் ஜனாதிபதி மக்களின் விருப்பத்துக்கு கட்டுப்பட்டு அமைதியான முறையில் பதவி விலகவேண்டும் என்று தெரிவித்துள்ளனர் இது வரை நடைபெற்று வரும் ஆர்பாட்டங்களில் நூறு வரையானவர்கள் கொல்லபட்டுள்ளனர்
யெமென் நாட்டின் ஜனாதிபதி அலி அப்துல் ஸலாஹ் மற்ற அரபு நாட்டு தலைவர்களை போன்று மேற்குலகின் விசுவாசியாக பார்க்கப்படுகின்றார் இவர் நாட்டை 32 ஆண்டுகளாக கையில் வைத்துள்ளார் நாட்டில் வறுமை, ஊழல் என்பன அதிகரித்துள்ளது அமெரிக்கா பல இராணுவ நடவடிக்கைகளை அங்கு மேற்கொண்டு வருகின்றது யெமென் அமெரிக்காவின் செறிவான புலனாய்வாளர்களின் கோட்டையாக விளங்கிவருகின்றது அமெரிக்கா பல தடவைகள் நடாத்திய விமான தாக்குதலை யெமென் அரசு தாம் நடத்துவதாக கூறிவந்துள்ளது இந்த தாக்குதல்களில் பல பொதுமக்கள கொல்லபட்டனர்
ஆசியாவின் நுழைவாசல் என்று கூறப்பட்டு Aden port – the “gate to Asia” அடேன் போர்ட் என்ற துறைமுக பகுதியை அமெரிக்கா தனது மறை முகமான கட்டுபாட்டின் கீழ் வைத்துள்ளது. யெமென் நாட்டின் இஸ்லாமிய பயங்கரவாதிகளை தாக்குகின்றோம் என்று கூறி பல நூறு அப்பாவி பொதுமக்களை அமெரிக்காவின் குண்டுகள் கொன்று குவித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது இங்குதான் அமெரிக்கா தேடிவரும் பொறியலாளர் இமாம் அன்வர் அல் அவ்லாகி இருப்பதாக அமெரிக்கா கூறி பொது மக்களை கொன்று வருகின்றது.
No comments:
Post a Comment