Search This Blog

Mar 5, 2011

100 பாடசாலைகள் புனர்நிர்மாணம் முஸ்லிம் பாடசாலை எதுவும் உள்வாங்கப்படவில்லை



யாழ் குடாநாட்டில் யுத்தம் காரணமாக சேதமான 100 பாடசாலைகளை புனர்நிர்மாணம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் யாழ் நகரில் அமைந்துள்ள முஸ்லிம் பாடாசலைகள் எதுவும் பாடசாலைகள் புனர்நிர்மாணம் திட்டதிற்கு உள்வாங்கப்படவில்லை என்று யாழ்ப்பாண முஸ்லிம்கள் கவலையும் விசனமும் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாண நகர எல்லைக்குள் 5 முஸ்லிம் பாடாசலைகள் அமைந்துள்ளது இந்த பாடாசலைகள் அனைத்தும் பயங்கரவாதம் காரணமாக முற்றாகவும் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது கடந்த 1990 ஆம் ஆண்டு தொடக்கம் புலி பயங்கரவாதம் காரணமாக இந்த பாடாசலைகள் இயங்க முடியாத நிலையில் இருந்ததுடன் பலத்த சேதமும் அடைந்துள்ளது தற்போது மிகவும் மெதுவான மீள் குடியேற்றம் இடம்பெற்று வரும் இந்த வேளையில் யாழ் உஸ்மானியா கல்லூரி விரிவாக
மஸ்ரவுதீன் பாடசாலை என்பன இயங்க ஆரம்பித்துள்ளது இதில் உஸ்மானியா கல்லூரியில் கணிசமான மாணவர்கள் கற்று வருகின்றனர் இந்த நிலையில் அரசாங்கத்தின் 100 பாடசாலைகளை புனர்நிர்மாணம் செய்யும் திட்டதிற்கு யாழ் முஸ்லிம்களின் பிரதான பாடசாலையான உஸ்மானியா கல்லூரி உள்வாங்கப்படாமை மீள் குடியேறி வரும் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது என்று எமது lankamuslim.org  யாழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
யாழ் முஸ்லிம்களின் பிரதான ஆண்கள்  பாடசாலையான உஸ்மானியா கல்லூரி
யாழ் முஸ்லிம்களின் பிரதான பெண்கள்   பாடசாலையான கதிஜா பெண்கள்  கல்லூரி



No comments:

Post a Comment

المشاركات الشائعة