லிபியாவின் கடாபி எதிர்பாளர்களின் கையில் இருந்து எண்ணெய் வளம் கொண்ட கிழக்கு பிரதேசத்தை மீட்கும் நோக்கில் கடாபிக்கு விசுவாசமான படை விமான குண்டு தாக்குதல்களையும் நேரடி இராணுவ தாக்குதல்களையும் ஆரம்பித்து நடத்தி வருகின்றது இந்த நிலையில் கடாபிக்கு எதிரான மக்கள் படை அதை எதிர்ந்து போராடிவருகின்றது இது வரை 2000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது லிபியாவின் எண்ணெய் வளம் கொண்ட கிழக்கு பிரதேசம் நோக்கிய கடாபியின் நகர்வுகள் அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளால் அவதானமாக பார்க்கப்படுகின்றது
ஏற்கனவே அமெரிக்காவின் கடற் படை யுத்த கப்பல்கள் , மற்றும் விமானபடையின் விமானங்கள லிபியாவுக்கு அண்மையில் கொண்டு நிறுத்தபட்டுள்ளது அதேவேளை பிரிட்டன் உட்பட மேற்கு நாடுகள் கடாபியின் கையை விட்டு நழுவிய பகுதிகளுக்கு உதவிகளை விமானங்கள் மூலம் அனுப்பியுள்ளது அமெரிக்க ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு செயலாளர் கிலாரி கிளிங்டன் கடாபி உடனடியாக பதவி விலகவேண்டும் என்று தெரிவித்துள்ளனர் விரிவாக
இந்த நிலையில் கடாபி அமெரிக்காவின் உளவு விமானங்கள் ஊடாக குண்டு வீசி கொலை செய்யப்படலாம் அல்லது லிபியாவின் இராணுவம் ஊடாக கடாபியை சுட்டு கொலைசெய்ய அமெரிக்கா தனது உளவு பிரிவின் உதவியுடன் முயற்சிக்கலாம் என்று ஒரு சாராரும் அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் லிபியாவின் மனிதாபிமான உதவி என்ற பெயரில் படை இறக்கம் செய்யலாம் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர்
No comments:
Post a Comment