இஸ்ரேலின் ஜெருசலம் ஆக்கிரமிப்பு நகர நிர்வாகம் புதிதாக 37 பலஸ்தீனர்களில் வீடுகளை உடைத்து தகர்க்க போவதாவும் வீடுகளை விட்டு வெளியேறுமாறும் இந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு அறிவித்தல் வழங்கியுள்ளது கடந்த சில வருடங்களில் பலஸ்தீனர்களின் 20 ஆயிரம் வீடுகள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அதிகார சபையினால் உடைத்து தகர்க்கப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது என்று பலஸ்தீன தகவல் மையம் இன்று தெரிவித்துள்ளது
பலஸ்தீனர்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்கள் தமது புதிய வீடுகளைதகர்க்கும் அறிவித்தலை அப்பாஸிய்யா மாவட்ட 37 வீடுகளின் உரிமையாளர்களுக்கு வழங்கியுள்ளனர் இது தவிர ஜெருசலத்தின் வடக்கு மாவட்டமான பேய்த் ஹனினா என்ற பிரதேசம் புதிதாக பல வீடுகள் உடைக்கப்படும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது
அப்பாஸிய்யா மாவட்டத்தில் 22 வீடுகளை கொண்ட உமமரா தொடர்மாடி, 15 வீடுகளை கொண்ட அல்ரசீத் தொடர்மாடி ஆகியவற்றுக்கு இந்த அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளது இது தவிர 180 சிறிய நிர்மாணங்களின் உரிமையாளர்களுக்கு அவற்றை விட்டும் உடனடியாக வெளியேறுமாறு குறுங்கால அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அதிகாரசபை கிழக்கு ஜெருசலம் பிரதேசத்தில் 86 வீதமான நிலப் பகுதியை சுவீகரித்துள்ளதாவும் தற்போது வெறும் எழுத்தில் மட்டும் நடைமுறையில் இருக்கும் சமாதான உடன்படிக்கை இந்த நில சுவீகரிப்பை தடுத்து நிறுத்த எதுவும் செய்யாத வகையில் fait accompli- ‘ஏற்கனவே முடிந்து விட்ட விடையமா’ பார்க்கப் படுவதாகவும் பலஸ்தீனிய ஜிஹாட் அபூ தாவில என்ற ஆய்வாளர் – 5.01.2011 – அன்று வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவித்திருந்தார் என்பது சுட்டிக்காட்ட தக்கது
அதேவேளை ‘Peace Now movement’ என்ற இயக்கம் 70 வரையான இஸ்ரேலிய யூத குடியிருப்புகளை பாதுகாக்க அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் இராணுவ சாவடிகள் பலஸ்தீன தனியாரின் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் 16 வீதமான கிழக்கு கரை நிலம் இஸ்ரேல் -ஆக்கிரமிப்பு -அரசுக்கு சொந்தமானதாக பிரகடனப்படுத்தப் பட்டு யூத குடியிருப்பு தொகுதிகளை நிர்மாணிக்க பயன்படுத்தப் படுவதாக தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment