லிபியாவின் கிழக்கு பகுதி பெங்காசியில் பிரிட்டன் நாட்டு ஒரு இராஜதந்திரி அவருடன் வந்த அதி விசேட விமான அதிரடி படையை சேர்ந்த8 பேர் லிபியாவின் மக்கள் படைகளால் பிடித்து அடைக்கப்பட்டுள்ளனர் இவர்கள் பிரிட்டனில் இருந்து இரகசியமாக லிபியாவின் கிழக்கு பிரதேசத்துக்கு ராஜதந்திரிகளுடன் அனுப்பப்பட்டுள்ளனர் .
இந்த இராஜதந்திரிகள் கடாபிக்கு எதிரான குழுக்களை சந்திக்க வந்ததாக நம்பப்படுகின்றது எனினும் ஆயுத குழுக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக இவர்கள் பிடித்து அடைக்கப்பட்டுள்ளனர் எனினும் இவர்கள் நல்ல முறையில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்படுகின்றது
அதேவேளை பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸ் பெங்காசியில் பிரிட்டன் நாட்டு ராஜதந்திர குழுவொன்று சென்று இருப்பதாகவும் அவர்களுடன் தாம் தொடர்பில் இருப்பதாகவும் இது தொடர்பாக மேலதிக தகவல் தருவது தனக்கு பொருத்தமானது இல்லை என்று தெரிவித்துள்ளார் என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது இதேவேளை சிலதினங்களுக்கு நெதர்லாந்து நாட்டு மூன்று இராணுவ வீரர்களை கடாபியின் இராணுவம் பிடிதுள்ளதாக நெதர்லாந்து அரசு தெரிவித்தமையும் குறிபிடத்தக்கது
No comments:
Post a Comment