Search This Blog

Mar 15, 2011

ஜப்பானில் 3,4 வது அணு உலைகள் வெடிப்பினால் அணு கதிர் வீச்சு ஏற்படும் ஆபத்து




ஜப்பானில் பூகம்பம், சுனாமி ஆகியவற்றின் தாக்குதலை ‌தொடர்ந்து புகுஷிமா மாகாணத்தில் இன்று செவ்வாய் கிழமை அணு மின் நிலையத்தில் மூன்றாவது, நான்காவது அணு உலைகளும் வெடித்துள்ளது இந்த  வெடிப்புகள் உயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அளவு அணு கதிர் கசிவு ஏற்படும் என்று அச்சம் தெரிவிக்கபடுகின்றது .
இந்த மூன்றாவது வெடிப்பு அணு உலையின் பாதுகாப்பு கவசத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது இதேவேளை ஐப்பான் பிரதமர் அணு உலை வெடிப்பு பகுதில் இருந்து 30 கி.மீ சுற்று வட்டார பகுதியில் இருப்பவர்கள் தமது வீடுகளை விட்டும் வெளியேறவேண்டாம் என்று அந்த மக்களுக்கு அரசு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார் அணு உலை வெடிப்பு பகுதில் இருந்து 20 கி.மீ சுற்று வட்டார பகுதியில் இருந்த 6 இலட்சம் வரையான மக்கள் ஏற்கனவே வெளியேற்றபட்டுள்ளனர், 20 கி.மீ  சுற்று வட்டார பகுதியில் இருந்து 30 கி.மீ சுற்று வட்டார பகுதியில் உள்ளவர்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று இன்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர் இந்த அறிவிப்பை சர்வதேச அணு ஆய்வு நிபுணர்கள் இது மிகவும் ஆபத்தான நிலையை காட்டுவதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் அதன் பாதிப்புகள் உறுதிப்படுத்தப்படவில்லை இந்த அணு கதிர் கசிவு ஜப்பான் தலைநகரான டோக்கியோவை குறைந்த அளவில் காற்றின் ஊடாக அடைய முடியும் என்று சர்வதேச செய்திகள் தெரிவிகின்றனர் மிகவும் பயங்கரமான கடந்த வெள்ளிகிழமை ஏற்பட்ட பூகம்பம் அதை தொடர்ந்து மிகவும் பாரிய சுனாமி அதை தொடர்ந்து மூன்று அணு உலை வெடிப்புகள் என்று மிகவும் பயங்கர சோதனைகளை ஜப்பான் மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் மேலும் ஒரு அணு உலை வெடிக்கும் நிலையில் இருப்பதாக நிபுணர்கள் அறிவித்துள்ளனர் இது வரை 10000 க்கும் அதிகமான மக்கள் கொல்லபட்டுள்ளனர் 3000 பேர் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளனர் அனால் அவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்று அறிவிக்கபட்டுள்ளது நேற்று கடற்கரை பகுதி ஒன்றில் 2000 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கபட்டுள்ளது என்பது குறிபிடதக்கது.

No comments:

Post a Comment

المشاركات الشائعة