கடாபி ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் குழுவினர் லிபியாவில் தேசிய கவுன்சில் அமைத்தனர்.
ஒட்டு மொத்த நாட்டிற்கும் பிரதி நிதித்துவ அமைப்பாக இந்த தேசிய கவுன்சில் இருக்கும் என போராட்டக்காரர்கள் அறிவித்தனர். போராட்டக்காரர்களின் தேசிய கவுன்சிலை பிரான்ஸ் வரவேற்று உள்ளது.
போராட்டக்காரர்களின் தேசியக் கவுன்வில் சனிக்கிழமையன்று பெங்காசியில் கூடி தனது அறிவிப்பை வெளியிட்டது. லிபியாவில் கடந்த 41 ஆண்டுகளாக கடாபியின் சர்வாதிகார ஆட்சியில் மக்கள் கொந்தழித்துள்ளனர். இதனால் அங்கு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
லிபியா போராட்டக்காரர்களின் தேசியக் கவுன்சில் தனது இலக்கை அடைய ஆதரவு அளிப்பதாக பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் பெர்னார்டு வாலரோ கூறினார் போராட்டக்காரர்கள் ஒன்று கூடி கவுன்சில் அமைத்து இருப்பதை வரவேற்பதுடன் இலக்கை அடைவதையும் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் அலியன் ஜீபே கூறுகையில் கடாபியின் கிரிமினல் குற்ற நடவடிக்கைகளுக்கு ஐரோப்பா மற்றும் பிரான்ஸ் அனுமதிக்காது என்றார். இந்த நிலையில் லிபியா பெங்காசி நகரில் பிரிட்டனின் ராஜிய குழுவினர் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை அழைத்து வருவது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறோம் என பாதுகாப்புத் துறை செயலாளர் லியாம பாக்ஸ் கூறியிருந்தார். பிரிட்டன் குழு தேவை இல்லாமல் வந்துள்ளது என போராட்டக்காரர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment