கடந்த நான்காம் திகதி ஆங்கிய பத்திரிகை ஒன்றுக்கு கட்டுரை ஒன்றை எழுதியுள்ள முஸ்லிம் எழுத்தாளரும், மனிதவுரிகளுக்கான மற்றும் முஸ்லிம் சமூக செயல்பாட்டாளருமான எம்.ஐ.எம்.மொஹிதீன் இலங்கை முஸ்லிம்கள் அரபி மொழியை கற்றுகொண்டு தமது பிரதான மொழியாகவும் வீடுகளிலும் பேசும் மொழியாக மாற்றிக்கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளார் இவரின் இந்த கட்டுரை ஊடங்களின் கவனத்தை பெற்றுள்ளது இவர் எழுதிய ஆங்கில கட்டுரை எமது ஆங்கில இணையதளமான lankamuslim.com இல் கடந்த 4 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டுள்ளது
அந்த கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ள சில முக்கிய விடயங்களை இங்கு தருகின்றோம் – அரபு மொழியினுடனான தொடர்பு எதிர்கால முஸ்லிம்களின் நலனுக்கு இன்றியமையாதது பெரும்பாலும் முஸ்லிம் தமிழ் மொழியை உபயோகித்து வருகின்றனர் இன்று ஆங்கிலத்தையும், சிங்களத்தை, தமிழையும் தமது வீடுகளில் பேசும் மொழியாக கொண்டவர்கள் உருவாகியுள்ளனர் இன்னும் மலேயர் தமது வீடுகளில் மலே மொழியையும் பொராஸ் குஜராத்டி மொழியையும் , மேமன் பிரிவினர் கொச்சி அல்லது உருது மொழியை பேசுகின்றனர்.
இவைகளை உடனடியான தாகத்தை தராவிட்டாலும் இன்னும் 25 வருடங்களில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் , சிங்களம் பேசும் முஸ்லிம்கள் , ஆங்கிலம் பேசும் முஸ்லிம்கள் என்று முஸ்லிம் சமுகத்தை பிரித்து நிற்கும் இது மொழி என்ற அடிப்டையில் மட்டும் நில்லாது கலாச்சாரம் என்று மேலும் சென்று கலாச்சார பிரிவாகவும் உருபெறும் முஸ்லிம்கள் மத்தியில் மொழிகள் அதன் காலாச்சார தாகங்களை வெளிப்படுத்தி நிற்கும் அனைவரும் அறிந்தது போன்று மொழி என்பது கலாச்சார தத்துவங்களை சுமக்கும் வாகனம் சிங்கள மொழி பெளத்த கலாச்சாரத்தையும், தமிழ் மொழி ஹிந்து கலாச்சாரத்தையும், ஆங்கிலம் கிருஸ்தவ கலாச்சாரத்தையும் அதேபோன்று அரபு இஸ்லாமிய கலாச்சாரத்தையும் சுமந்துள்ளது எதிர்காலத்தில் முஸ்லிம்கள் மூன்று பிரிவாக பிளவு படுவதை தடுக்க குர்ஆனிய கலாச்சார மொழியான அரபு மொழியை எடுத்து கொள்ளவேண்டும் அவ்வாறு நான் கூறுவதை குறும்பார்வை கொண்டவர்கள் சிலர் கடினமானதாக கருதலாம் ஆனால் அறிவியல் ஆய்வுகளின் ஊடாக அது கடினமானது இல்லை என்பதை காணமுடியும் என்று தெரிவித்துள்ளார்.
ஆனாலும் இலங்கையில் அரபு மொழி 10 வருடங்களுக்கு முன்பிருந்த நிலையுடன் ஒப்பிடும்போது பன்மடங்கு முஸ்லிம் சமூகத்தினுள் ஆழ ஊடுருவி பல மட்டங்களிலும் தாக்கம் செலுத்தி வருகின்றது என்பதுடன் அல் குர்ஆனை வாசித்து விளங்கிக்கொள்ளும் கணிசமான தொகை முஸ்லிம்கள் ஏற்கனவே உருவாகியுள்ளனர் என்பதும் சுட்டிகாட்டதக்கது
No comments:
Post a Comment