Search This Blog

Mar 25, 2011

லிபியா மீதான தாக்குதல்களுக்கு இரட்டை தலைமை ?


நேட்டோ லிபியா மீதான ஐநாவின் ‘விமான பறப்பு தடையை’ அமுல்படுத்தும் நடவடிக்கைக்கு தலைமை வகிக்க இணங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள்  தெரிவிக்கின்றது. நேட்டோ லிபியா மீதான நடவடிக்கைகளை வழிநடத்தவேண்டும் என்று இத்தாலி , பிரிட்டன், உட்பட பல நாடுகள் வலியுறுத்தி வந்தன பிரான்ஸ் மற்றும் சில நாடுகள் அதை விரும்ப வில்லை என்று செய்திகள் தெரிவித்தன இந்த நிலையில் நேட்டோ பொது செயலாளர் அண்டெர்ஸ் ரஸ்முசென் ‘விமான பறப்பு தடையை’ அமுல்படுத்தும் பொறுப்பை நேட்டோ ஏற்றுகொள்கின்றது என்பதுடன் தற்பாதுகாப்பு கருதிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் மற்ற நடவடிக்கைகள் மேற்கு கூட்டு படையின் கைகளில் இருக்கும் என்றும்  தெரிவித்துள்ளார்.
அதாவது இரண்டு தலைமைகள்,  ஒன்று ‘விமான பறப்பு தடையை’ அமுல்படுத்தும் பொறுப்பை நேட்டோ கையில் எடுக்க , மற்ற நடவடிக்கைகளான ‘ பொது மக்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ‘ என்ற ஐநா அனுமதியின் கீழ் லிபியா படைகள் மீது வழிந்த தாக்குதல் , தரைப்படை லிபியாவினுள் உள்நுழைந்து தாக்குதல் என்ற பரந்த பொருள் கொண்ட ‘ பொது மக்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ‘ என்ற தீர்மானத்தை மேற்கு கூட்டு படைகள் மேற்கொள்ளும் என்று விளங்கிக்கொள்ளபடுகின்றது விரிவாக
நேட்டோ உறுப்புநாடான துருக்கி இந்த நேட்டோ நடவடிக்கையாக  தரை படை யை நேட்டோ அனுப்ப கூடாது என்ற நிபந்தனை உள்ளடங்களாக சில இறுக்கமான    நிபந்தனைகளை  முன்வைத்துள்ளது என்பதால் இரட்டை தலைமை என்ற முடிவுக்கு மேற்கு கூட்டு தலைமை வந்திருக்கலாம்.
கடந்த ஆறு இரவுகளாக மேற்கு நாட்டு கூட்டு படைகள் லிபியா மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றது இந்த இராணுவ நடவடிக்கைக்கு 350 யுத்த விமானங்களும் , 38 யுத்த கப்பல்களும் பயன்படுத்த படுகின்றது யுத்த விமானங்களில் அரைவாசி விமானங்களும் 12 யுத்த கப்பல்களும் அமெரிக்காவுக்கு சொந்தமானது எனினும் அமெரிக்கா இந்த தாக்குதல் நடவடிக்கைகளில் தான் பிரதான வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் நடவடிகைகளுக்கு தேவையான உதவிகளை செய்யவதாகவும் தெரிவித்துள்ளது
இந்த நிலையில் நேற்று பிரான்ஸ்  பறந்து இறங்கிய லிபிய விமானம் ஒன்றை தாக்கி அழித்துள்ளது அது அல்லாமல் லிபியாவின் பல இராணுவ இலக்குகள் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது இந்த தாக்குதல்கள் உள்நாட்டில் மக்கள் மத்தியில் கடாபிக்கு அனுதாப பிரிவு ஒன்றை உருவாக்கும் என்றும்  மேற்கு , கிழக்கு என்ற சிவில் யுத்த நிலைக்கு வழிவகுக்கும் என்றும் லிபியா என்ற நாடு இரண்டாக பிரிய வழிவகுக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
கடாபி தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் இராணுவம் கடாபிக்கு கட்டுப்படுவதை உடடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து தாக்குதல் நடத்தப் படுகின்றது இந்த தாக்குதல் எதுவரை ? எவ்வளவு காலத்துக்கு ?, தற்போது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் கடாபியை பலவீனப் படுத்துகின்றதா?  என்ற விடை தெரியாத கேள்வி எமக்கு இருந்தாலும் மேற்கு கூட்டு படைகளுக்கு அதற்கான தெளிவான விடை இருக்கிறது என்று தான் சொல்லவேண்டும் விடையாக முடிவாக மேற்கு கூட்டு தரை படை உள்நுழைந்து தாக்குதல் நடத்தலாம் லிபியாவை ஆக்கிரமிக்கலாம் ஒரு பொம்மை நிர்வாகத்தை ஏற்படுத்தலாம் ஒரு ஈராக்காக ஒரு ஆப்கானாக லிபியாவையும் வைத்துகொள்ளலாம், இறுதியில் இழப்பு முஸ்லிம் உம்மாவுக்கு தான் என்ற கணக்குதான் இங்கும் போடப்படுமா ?

No comments:

Post a Comment

المشاركات الشائعة