எகிப்தில் நேற்று மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு இடம்பெற்றது இந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு பதவி நீக்கப்பட்ட முபாரக் அரசாங்கத்தின் அரசியல் யாப்பு மீது மாற்றங்கள் , திருத்தங்கள் மற்றும் சேர்க்கைகள் , செய்யப்பட்ட பின்னர் அந்த மாற்றங்களுக்கு உள்ளான யாப்பை அரசியல் யாப்பாக அங்கீகரிப்பதா இல்லையா என்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது.
எகிப்தின் வாக்காளர்களில் பெரும் தொகையான மக்கள் கலந்து கொண்டுள்ளனர் நடை பெற்றுள்ள வாக்கெடுப் பெரும்பான்மையினர் ‘ஆம்’ என்று வாக்களித்தால் திருத்தங்களுடன் கூறிய யாப்பு நடைமுறைக்கு வரும் விரைவாக தேர்தல்கள் இடம்பெறும் ஆனால் மக்கள இல்லை என்று வாக்களித்தால் புதிய யாப்பு உருவாக்க நேரிடும் பாராளுமன்ற ,மற்றும் ஜனாதிபதி தேர்தல்கள் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்தான் தான் இடம்பெறும் என்று இராணுவம் அறிவித்துள்ளது விரிவாக
இந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் மக்களை ‘ஆம் ‘என்று வாக்களிக்குமாறு இஹ்வானுல் முஸ்லிமீன் கோரியது ஆனாலும் ஆர்பாட்டங்களில் கலந்து கொண்ட சில வாலிபர் அமைப்புகள் ‘வேண்டாம்’ என்று மக்களை வாக்களிக்குமாறு கோரியுள்ளது , எகிப்தின் பிரமுகர்களாக அறியப்பட்ட சில நபர்களான முஹமத் அல்பரடேய், அரபு லீக் பொது செயலாளர் அமர் மூஸா ஆகியோரும் புதிய அரசியல் யாப்பு வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் நடந்து முடிந்துள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் 75 வீதமான மக்கள் ஆம் என்று திருத்திய யாப்புக்கு ஆதரவாக வாக்குகளை வழங்கியுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிப்பதாக இஹ்வானுல் முஸ்லிமீன் செய்திகள் தெரிவித்துள்ளது. BBC செய்திகளின் படி முபாரக்கின் அரசியல் கட்சியான தேசிய ஜனநாயக கட்சியும் வாக்கெடுப்பில் ‘ஆம்’ என்று வாக்களிக்க கோரியதாக தெரிவித்துள்ளது. இன்று முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கபட்டுள்ளது.
No comments:
Post a Comment