Search This Blog

Mar 3, 2011

சிலர் பாகிஸ்தான் கிரிக்கட் விளையாட்டு அணிக்கு ஆதரவளித்ததன் எதிரொலி !!



பாகிஸ்தான் அணியை இலங்கையர்கள் ஆதரிப்பது கவலைக்குரியது: திலங்க-இலங்கையர்கள் அனைவரும் ஒற்றுமையை வெளிப்படுத்துமாறும் இவ்வருட உலகக்கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணிக்கு ஆதரவு வழங்குமாறும் இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால கூறியுள்ளார்.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டியின்போது இலங்கையர்கள் சிலர் பாகிஸ்தான் அணியை ஆதரித்தமை கவலைக்குரியது எனவும் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் கூறினார் விரிவாக
தேசிய நிகழ்வுகள் நடைபெறும்போது அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி பறக்கவிடப்பட வேண்டும் எனக் கூறிய அவர், அரச வீடமைப்புத் திட்டங்களில் வசிப்போரும் இப்போட்டியின்போது பாகிஸ்தான் அணியை ஆதரித்தமை கவலைக்குரியது என்றார். தமிழ் மிரர் (யொஹான் பெரேரா)
அதேவேளை டெய்லி மிரர் ஆங்கில இணையத்தளம் இந்த செய்தியை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளதுடன் அதன் இன்றைய படங்கள்- images- பகுதியின் முன்பகுதியில் ஆப்கானிஸ்தானில் 1997 ஆம் ஆண்டு பாமியான் புத்தர் சிலை தாலிபான்களால் உடைக்கப்பட்ட காட்சி மற்றும் குண்டுகள் மூலம்  உடைக்கப்பட முன்னர் இருந்த புத்தர் சிலையையும் படங்களாக பதிவு செய்துள்ளது இதற்கு பலர் பலவிதான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தானுக்கும் இலங்கைக்குமான கிரிகட் போட்டியின்போது  முஸ்லிம்கள் சிலர் பாகிஸ்தானுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது இந்த போட்டி இடம்பெறமுன்னார் அகில இலங்கை ஜம்மிஇயத்துல் உலாமா முஸ்லிம்களில் உள்ள பாகிஸ்தான் அணியின் ஆதரவாளர்களுக்கு  பாகிஸ்தான் அணியை ஆதரிப்பதை தவிர்க்குமாறு வேண்டு கோள் ஒன்றை விடுத்திருந்தமை குறிபிடத்தக்கது -



No comments:

Post a Comment

المشاركات الشائعة