Search This Blog

Mar 16, 2011

இஹ்வான் சர்வதேச ஐக்கிய முஸ்லிம் முன்னணி ஒன்றை உருவாக்க போராடுகின்றது



இஹ்வானுல் முஸ்லிமீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் சர்வதேச ஐக்கிய முஸ்லிம் முன்னணி ஒன்றை உருவாக்க போராடிவருகின்றது என்று தெரிவித்துள்ளது இஹ்வானுல் முஸ்லிமீன் தெரிவித்துள்ள ஒரு தகவலில் அந்த அமைப்பு தாம் நீதியையும், சிவில் சமூகத்தையும், சுதந்திரமானதும், நீதியானதுமான அரசியல் தளத்தை கோரும் முஸ்லிம்கள் இடையில் ஒருமைப்பாட்டை நாடுவதாகவும், அதன் திட்ட வழிமுறை என்ற வகையில் ஈரான் போன்ற நாடுகளுடனும், ஹமாஸ் போன்ற அமைப்புகளுடனும் செயல்படுகின்றது என்றும் தவறினால் பிரச்சினை, பிளவும், பிரிவினை என்பனவற்றை அதிகரிக்க செய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த வகையில் இஹ்வானுல் முஸ்லிமீன் ஈரானுடன் பல வருடங்களாக உத்தியோகபற்றற்ற உறவை கொண்டுள்ளதாகவும். எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் சகிப்பு தன்மையின் செல்வாக்கின் கீழ் எகிப்தியர்கள் மற்ற அரபு நாடுகளில் உள்ள சுன்னி முஸ்லிம்களை விடவும்  விரிவாக ஷியாக்களுடன் மிகவும் இணக்கமாக நடந்துகொள்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளது அதன் விரிவான அறிக்கையின் சில வற்றை இங்கு தருகின்றோம்
ஈரான் – அதன் இஸ்ரேலுக்கும், மேற்கு நாடுகளுக்கும் எதிரான கொள்கையுடன் – இஹ்வானுல் முஸ்லிமீனுடன் நெருக்கமான உறவை வளர்ப்பது மேற்கை பயம் அடைய செய்கின்றது அதன் காரணமாக இஹ்வானின் அடையாளம் மற்றும் அதன் அரசியல் நிலைப்பாடுகள் மீதான அதன் அர்ப்பணம் தொடர்பின் மேற்கு தமது நம்பிக்கை இன்மையை வெளிப்படுத்துகின்றது
காஸா மீதான இஸ்ரேலின் போரின்போது ஈரான் ஹமாஸுக்கு ஆதரவு வழங்குவதில் முக்கிய பங்காற்றியுள்ளது இதற்கு ஹாமாசின் தலைவர் காலித் மிஷால் தனது அமைப்புக்கு ஆதரவு தெரிவித்தமைக்கு நன்றி தெரிவித்து தமது வெற்றியின் ஈரான் ஒரு பங்காளியாக தான் பார்பதாக கூறினார் இதை மார்க்க ரீதியான கூட்டு என்பதை விட சுயாட்சி பெற்றுகொள்வதற்கான ஒரு அரசியல் போராட்டமாக பார்க்க முடியும் ஆனால் மேற்கு ஈரானும் , ஹமாஸும் அனைத்து மட்டங்களிலும் ஒன்றினைந்த சக்தியாக திடமாக நம்புகின்றனர். காலனித்துவ காலம் தொடக்கம் மேற்கு முஸ்லிம் உலகை பிரித்தாள அர்ப்பணித்து நிற்கின்றது இஹ்வானுல் முஸ்லிமீன் ஷியா, சுன்னி என்பதை ஒரு பக்கம் போட்டுவிட்டு மத வகுப்புவாதத்தை எதிர்த்து போராடுகின்றது ஈரானையும் உள்ளடக்கிய ஐக்கியமுஸ்லிம் முன்னணி ஒன்றை உருவாக்க போராடிவருகின்றது என்று தெரிவித்துள்ளது இது அந்த அறிக்கையின் ஒரு பகுதி மட்டும்தான்.
அதேநேரம் அந்த அமைப்பு தான் சர்வதேச ஐக்கிய முஸ்லிம் முன்னணி ஒன்றை உருவாக்க செயலப்டும்போது அந்த அமைப்பின் முன்னாள் உறுப்பினர் டாக்டர் யூசுப் அல் கர்ழாவி ஷியா ஈரானின் ஷியா மிசநெறிகளின் நடவடிக்கைகள் தொடர்பில் குறிப்பாக எகிப்தில் ஈரான் மற்றும் ஷியா மிசநெறி நடவடிக்கைகள் தொடர்பின் ஷியாயிசத்தின் ஊடுருவல் ஈராக் போன்று எகிப்திலும் சிவில் யுத்தம் ஒன்றை ஏற்படுத்தி விடும் என்று எச்சரித்து உள்ளமையையும் அந்த அறிக்கையில் சுட்டிகாட்டியுள்ளது.


No comments:

Post a Comment

المشاركات الشائعة