அமெரிக்க அரசு முஸ்லிம் என்ற பெயரை கண்டாலோ அல்லது இஸ்லாமிய உடையுடன், தாடியுடன் யாரையும் கண்டாலோ அவர்களைஇஸ்லாமிய பயங்கரவாதிகள் என்று கூறும் பார்க்கும் போக்கு அதிகரித்து வருகின்றது அமெரிக்காவும் மஸ்ஜிதுகள் , கல்வி நிலையங்கள் பொதுவாக முஸ்லிம்கள் கூடும் இடங்கள் அனைத்திலும் முஸ்லிம்களை கண்காணிக்கும் உளவாளிகளும், கமராக்களும் இல்லாது இருபதில்லை
கடந்த மாதம் கலிபோனியாவில் The Council on American Islamic Relations -CAIR- என்ற அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் அமெரிக்க முஸ்லிம்களின் நிறுவனம் கலிபோனியாவில் நிதிசேகரிக்கும் நடவடிக்கையின் போது அமெரிக்காவில் இயங்கும் முஸ்லிம் விரோத அமைப்புகளின் முஸ்லிம் எதிர்ப்பு ஆர்பாட்டத்தை எதிர்கொண்டுள்ளது விரிவாக
CAIR- என்ற நிறுவனம் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் மாதிரிகளை கொண்ட ஒரு நிறுவனமாகும் இந்த அமைப்பு பல ஆண்டுகளாக அமெரிக்காவில் இயங்கிவருகின்றது கடந்த வருடம் இந்த நிறுவனம் FBI உளவாளிகளின் முற்றுகைக்கு இலக்கானது.
இஸ்லாத்தை ஏற்று கொண்டவரை போல் நடித்த ஒருவர் இந்த நிறுவனத்தில் உயர் மட்டம் வரையுன் நுழைந்து அந்த அமைப்பின் இலக்கு , திட்டம் என்பன உள்ளடங்கிய ஆவணங்களை உளவு பார்த்து CAIR- நிறுவனம் ஒரு இஸ்லாமிய பங்கரவாத அமைப்பு என்பதாக சித்தரிக்க முற்பட்டபோதும் அந்த அமைப்பின் இலக்கு , திட்டம் என்பன அமெரிக்காவின் சட்டத்துக்கு முரனானது இல்லை என்பதால் சோடிக்க முயன்ற குற்ற சாட்டுக்களை FBI யால் நிருபிக்கமுடியாது போனது.
The Council on American Islamic Relations -CAIR-முஸ்லிம்கள் எதிர் கொண்ட ஆர்பாட்ட பதிவுகளை கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளது அந்த வீடியோவை அல் ஜஸீரா வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment