கைதிகளுக்கும் மனித உரிமைகளுக்குமான மண்டேலா அமைப்பு என்ற ஆபிரிக்காவை தளமாக கொன்று இயங்கும் சர்வதேச அமைப்பு இஸ்ரேலின் சிறைகளில் பலஸ்தீன மக்கள் மிகவும் மோசமாக நடத்தப்படுவதாக தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது அந்த அறிக்கையில் இஸ்ரேல் சிறைகளில் மிகவும் மோசமாக மனித உரிமை மீறப்படுவதாக தெரிவித்துள்ளது கடந்த மாதம் கைதான சம்ஹா ஹிஜாஸ் என்ற பெண் கைதி பற்றியும் அந்த அறிக்கையில் குறிபிடப்பட்டுள்ளது .
சம்ஹா ஹிஜாஸ் என்ற பலஸ்தீன பெண் இஸ்ரேலின் சிறையில் வைக்கப்பட்டுள்ள தனது சகோதர் ஒருவரை இஸ்ரேல் அஸ்கலான் வதை முகாம் சென்று பார்க்க சென்றபோது அவர் கையடக்க தொலைபேசி கொண்டு சென்றார் என்று தெரிவித்து இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை அவரையும் கைது செய்து சிறையில் தள்ளியுள்ளது
இந்த பெண் சிறையில் இஸ்ரேலின் யூத கொலைகார கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறை அறையில் வைக்கப்டிருந்தார் பின்னர் அவரை தல்முந்த் என்ற சிறையில் அடைத்துவைத்துள்ளது இவரின் இரு சகோதர்கள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு வதை முகாமில் வதைக்கப்படுகின்றனர் இவரின் ஹிஸாம் என்ற சகோதரர் 10 ஆயுள் தண்டனைகளையும் இவரின் யாசீர் என்ற மற்றொரு சகோதரர் ஆயுள் தண்டனையையும் அனுபவித்து வருகின்றனர் என்று பலஸ்தீன் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த பெண்ணும் கடந்த மாதம் 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் – இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முகாம்களில் 350 க்கும் அதிகமா பலஸ்தீன பெண்கள் வதைக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிபிடத்தக்கது.
No comments:
Post a Comment