Search This Blog

Mar 7, 2011

கடாபி ஹீரோவா அல்லது நீரோவா!

எஸ்.எம்.எம்.பஷீர் 


“நானே மக்கள்,! , கதிரவன் எனது கைச்சட்டைக்குள் ஒரு ரோஜா, நாளின் தீக்குதிரைகள் எனது குருதியில் பாய்ந்து செல்ல, எனது பிள்ளைகள் அடக்குமுறையாளனை தோல்வியுறச் செய்வர் எனது வழியை யார் தடுக்க முடியும்” ( அஹ்மத் புவார்ட் நிம் )- எகித்திய மக்கள் எழுச்சியின் போது பாடிய அஹ்மத் புவார்ட் நிம் எனும் வயோதிப கவிஞனின் பாடலில் ஒரு பகுதி

ரோம சக்கரவர்த்தி நீரோ ரோமாபுரி பற்றி எரியும் போது வீணை வாசித்தான் என்று சொல்லப்படுகிறது. (அதற்கும் இப்போது வரலாற்றாளர்கள் மறுப்பு வெளியிட்டாலும் அந்த வசையுடன் நீரோ இன்னமும் அறியப்படுகிறான் என்பதால் அந்த தலைப்பும் கடாபிக்கு பொருத்தமாக அமையப்போகிறதா என்ற கேள்வியுடன் இக்கட்டுரையும் எழுதப்படுகிறது. அண்மைக்கால கடாபியின் ஏகாதிபத்தியத்துடனான சமரசங்களையும் புரட்டி பார்த்துக்கொண்டே இன்றைய நிலை பற்றியும் அலச வேண்டியுள்ளது விரிவாக
ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பாவும் லிபியா மீது விதித்திருந்த பொருளாதார தடையை 2004 நீக்கி லிபியாவுடன் செய்து கொண்ட பேரம் பேசலில் அங்கு பிரித்தானியாவின் வர்த்தக நலனை மேம்படுத்தும் வகையில் சுமார் 150 கொம்பனிகள் காலூன்ற வழி செய்யப்பட்டது. லிபியாவின் பரந்துபட்ட எண்ணெய் வளங்களை சுரண்ட பிரபல பிரித்தானிய என்னை கொம்பனிகள் அது சார்ந்த தொழில் துறை கொம்பனிகள் அங்கு செயற்பட கடாபி வழிசமைத்தார். அதன் தொடர்சியாக மீண்டும் லில் டோனி பிளையார் வீ .பீ (B.P) எனும் பிரபல எண்ணெய் கம்பனியின் எண்ணெய் அகழ்வுக்கான மில்லியன் ஒப்பந்தமொன்றையும் கூட்டு முயற்சியில் ஈடுபடும் வகையில் கைசாத்திட பேரம் பேசி அமுல்படுத்தினார்.
ஆபிரிக்காவிலே அதிகூடிய எண்ணெய் வாயு உள்ளதாக அறியப்பட்ட லிபியாவில் ஷெல் கம்பனி உட்பட மேலைத்தேய கம்பனிகள் கடாபியுடன் சுமுகமான உறவை பேணும் ஆலோசனையை தத்தமது அரசுகளுக்கும் வழங்கியுள்ளன. மறுபுறம் பொருளாதாரத்தடையை நீக்கியதுடன் லிபியாவுக்கான பிரித்தானிய ஏற்றுமதி 930 மில்லியன் பவுண்ஸ்களை எட்டியது. மேலும் லிபியாவில் இரண்டு முதலீட்டு ஒப்பந்தங்களை இத்தாலி கூட செய்து கொண்டது. இந்த பின்னணியில்தான் லோகேர்பீ விமான குண்டு வெடிப்பு சம்பந்தமாக குற்றவாளியாக காணப்பட்ட அப்துல்பசெட்பல்-மேகராஹி செப்டம்பர் ல் விடுதலை செய்யப்பட்டார்.
இலண்டனிலிருந்து தற்போது துபாய்க்கு சென்றிருககும் சுமார் எண்பத்து நான்கு வயதான லிபிய பிரதம மந்திரி முஸ்தபா அஹ்மத் பென்-ஹலீம் சுகவீனமுற்றிருப்பதுடன் தனது வயது சுகவீனம் காரணமாக கேட்புலனும் பாதிக்கப்பட்டிருப்பதால் பரஸ்பரம் இருவரும் தொலைபேசியில் நேர்கண்டாலும் விளங்கி கொள்வது கடினம் என அவரின் துபாயிலுள்ள மகன் அவரின் லண்டனிலுள்ள உதவியாளருக்கு என்னிடம் சொல்ல சொல்லியுள்ளார் , அது தவிர அவர் முன்னாள் லிபிய அரசர் இத்ரீசின் ஆதரவாளர் என்பதை அறிந்து கொள்ள முடிந்ததது. மேலும் இங்கிலாந்தில் தனது அரசியல் அனுபவங்களையும் லிபியாவின் எண்ணெய் வளம் ஏற்படுத்திய மாற்றங்கள பற்றியும் அரச ஆட்சி , அரசுக்கெதிரான சதி என்பன பற்றியும் மட்டுமல்ல அண்டை நாடுகள தொடர்பில் லிபியா வகத்த பங்கு என பதின்மூன்று அத்தியாயங்களில் சரித்திரத்தின் நியாய சபையில் எனது சாட்சியம் என்ற முடிவுரையுடன் லிபியா: நம்பிக்கை ஆண்டுகள் ( The Years of Hope) என்ற பெயரில் ஆங்கில அரபு மொழிகளில் நூலாக வெளியிட்டுள்ளார்.
அந்நூலே சுதந்திர லிபியா தொடக்கம் ஆரம்பகால கடாபியின் லிபியாவரையான காலப்பகுதியை அரச ஆதரவாளரான கடாபி எதிர்ப்பாளரான ஒரு லிபிய ஆரசியல்வாதியின் வாக்கு மூலமாக மட்டுமல்ல லிபியா பற்றிய அரசியல் தேடுதலுக்கு துணை செய்கின்றதாக அந்நூல் அமைகின்றது. எவ்வாறெனினும் மேலைத்தேய நாடுகளுக்கு சவால் விட்ட கடாபியினை தமக்கு ஆதரவாளாராக மாற்றி கவிழ்ப்பதில் தீவிரமாக முனைந்திருக்கும் மேற்குலக ஏகாதிபத்தியங்கள் ஒரு இறைமையுள்ள நாட்டை இராக்கையும் ஆப்காநிஸ்தானையும் ஆக்கிரமித்து சின்னா பின்னப்படுத்தியதுபோல் லிபியாவையும் செய்ய முஸ்தீபுகளை கடாபியின் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை , அடக்குமுறைகளை சாட்டாக கொண்டு உட்புகும் நடவடிக்கைகளை ஆலோசித்து வருகிறார்கள்.
மக்கள் புரட்சி எப்போதுமே இரத்தம் சிந்தியே வெற்றி பெற்றுள்ளது என்பதை மறுதலிக்கும் வகையில் எண்பதுகளின் பிற்பகுதியில் போலாந்து (1989) ஹங்கேரி (1989) ஆகிய நாடுகளில் ஏற்பட்ட அரசியல் குத்துக்கரண மாற்றங்கள் அடக்குமுறை ஆட்சியாளர்கள் அமைதியாக ஜனநாயக ஆட்சி முறைக்கும் வந்து தம்மையும் காப்பாற்றி கொணடனர் , ரொமேனியா சர்வாதிகாரி மட்டும் சசெஸ்கூ மக்களைக் கெதிராக சவால் வீடு அடக்க முற்பட்டு தூக்கில் உயிரிழக்க வேண்டி நேரிட்டது. (1989) கிழக்கு ஐரோப்பாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சோவியத் தொடக்கிவைத்த மாற்றங்களுடன் இறுதியில் சோவியத்தும் அமைதியான மாற்றத்துக்கு உள்ளானது (1991). அதே ஆண்டில்தான் (1989) தினமன் சதுக்கத்தில் (Tiananmen Square) மாணவர் புரட்சியும் வன்முறை பிரயோக்கி பட்டு சீன அரசால் அடக்கப்பட்டது. பர்மாவிலும் சுதந்திர ஆர்ப்பாட்டம் அதற்கு முன்னைய வருடத்தில் (1988) அடக்கி ஒடுக்கப்பட்டது.
இந்த புரட்சிகள் நடைபெற்று இரு தசாப்தங்களின் பின்பு மத்திய கிழக்கிலும் வட ஆபிரிக்கா அரபு நாடுகளில் இப்போது அடுத்தடுத்து நடைபெறும் மக்கள் போராட்டங்களும் கிழக்கு ஐரோப்பாவில் அமைதியாகவும் ஆர்ப்பாட்டமாகவும் நடந்து முடிந்த மக்கள் புரட்சிகளை நினைவு கூறச் செய்கின்றன. மீண்டும் லிபியாவுக்குள் மட்டுமல்ல இன்று பொருளாதாரப் பலத்தை கொண்டுள்ள அரபு நாடுகளின் அரசியல் பலத்தை கட்டுப்படுத்த வேண்டிய மூல உபாயங்களை தீவிரமாக வகுத்துக் கொண்டிருக்கும் ஒருபுறம் மேற்குலக ஏகாதிபத்தியங்கள் தமது நலன் சார்ந்த ஆட்சி மாற்றத்தையும் பற்றி தீவிரமாக அக்கற்றை கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஏகாதிபத்தியங்களின் பகைவர்களாவிருந்து இன்று அவர்களின் நண்பர்களாக மாறியவர்களை அவ வேகாதிபத்தியங்களே பழிதீர்த்து கொள்வதை அல்லது பலி தீர்க்கப்படுவதை ஆதரித்து செயற்படுவதை அண்மைய உதாரணமாக இராக்கிலிருந்து தொடர்ந்து செல்லும் பயணத்தில் இப்போது லிபியாவில் வந்து நிற்கிறது. பஹ்ரைனில் மனித உரிமைக்காக பஹ்ரைன் அரசுக் கெதிராக தொன்னூறுகளின் முற்பகுதியில் குரல் கொடுத்த முக்கிய பிரித்தானியர் டேவிட் கிளாட்ஸ்டோன் (David Gladstone) .
இவர் பிரித்தானிய அரசு தமது சுய பொருளாதார நலனுக்காகாக பஹ்ரைனை கண்டும் காணாமல் இருக்கிறது என்று குற்றமும் சாடியவர் . அதற்கும் மேலாக இவர் இங்கையின் பிரித்தானிய தூதுவராக இருந்த போது தேர்தல் சாவடிகளுக்கு சென்று தேர்தல் முறைகேடுகள் பற்றி கருத்துரைத்தவர் என்பதற்காக அங்கிருந்து -தூ துவராக இருப்பதிலிருந்து – நீங்கி (persona non grata) செல்ல வேண்டி நேரிட்டவர். எவ்வாறாயினும் தமது காலனித்துவ மனப்பதிவுடன் உள்நாட்டு விவகாரங்களில் ஏகாதிபத்தியங்கள் தலையிடுவ தென்பதும் , அவாறான தலையீடுகளுக்கு அந்நாட்டு பிரஜைகளை உள்நாட்டில் தகுந்த சன்மானம் வழங்கி கைகூலிகளாக வைத்திருப்பதும் அல்லது அவ்வாரானவர்களுக்கு தமது நாட்டில் அகதி அந்தஸ்து வழங்கி தமது நாட்டு சமூகத்தில் உள்ளீட்டம் (Assimilation) செய்வதுமாக பல் படித்தரமான நடவடிக்கைகள் ஊடாக தமது அரசியல் மூலோபாய இலக்குகளை அடைந்து கொள்வதும் மேற்குலகின் தந்திரமாக இருந்து வருகிறது.
இதற்கான சூழலையும் துரதிஷ்டவசமாக சுதேசிய நாடுகளின் தலைவர்களின் ஜனநாயக மறுப்பு எதோச்சதிகாரம் மனித உரிமை மீறல் என்பன ஏற்படுத்திவருகின்றன. அந்த பின்னணிகளையும் கருத்தில் கொண்டு இன்றைய அரபுலக போராட்டங்கள் தமது இலக்குகளை அடைய வேண்டும் என்பதுவே மிக முக்கியமானதாகும் லிபியா மீது பல்வேறு சர்வதேச அழுத்தங்களை பிரயோகித்து அங்கு உள் நுழைய முற்படும் அமெரிக்க ஐரோப்பிய இராணுவ உட்புகுதலை -உதவியை- அம்மக்களும் விரும்பவில்லை என்பதை மிக தெளிவாக சொல்லியுள்ளார்கள். என்றாலும் கடாபி , அதற்கு வழி சமைப்பாரா என்பதும் விரைவில் தெரிந்துவிடும்.
தின்னமன் சதுக்கத்தில் சீன பலகலை கழக மாணவர் முன்னின்ற கிளர்ச்சி பற்றிய பின்னணிகள் பற்றிய பல செய்திகள் அனுமானங்கள் சென்ற வருடம் அவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட லியு சியாபூ என்ற சீனருக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு இதனை நிரூபிக்கும் அண்மைய நிகழ்வாகும். எவ்வாறெனினும் இன்று சீனா உலகின் இரண்டாவது பொருளாதரா சக்தியாக வளர்ந்திருக்கிறது. அமெரிக்காவின் அரசியல் நபுஞ்சக தனத்தை இறைமையுள்ள நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடும் , அதற்காக எந்த எளிய செயலையும் செய்யும் ஒரு கேவலமான சம்பவமாக உலகின் கேவலமான ஆட்சி அதிகாரத்தை கொண்டிருக்கும் அமரிக்காவிலிருந்து சீனா இறக்குமதி செய்த தொலைபேசி சுவிட்சுகள் சீன உத்தியோகத்தர்களின் உரைடாடல்களை இலகுவில் ஒட்டுக் கேட்கும் வகையில் இருந்ததையும் , சீன அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த விமானங்கள் சீனாவின் ஆகாயப்படை ஒன்று விமானங்களின் பதிப்பு விமானங்களில் நவீன ஒட்டுக் கேட்கும் கருவிகள் பொருத்தப் பட்டிருந்ததையும் சீன கண்டு பிடித்தது என்பதும் அமெரிக்காவின் அயோக்கியத்தனத்தை காட்டுகிறது. ஆகவே போராட்டங்கள் மக்கள் போராட்டமாக பரந்து பட்ட ரீதியில் வீரியம் கொள்ளும் போது தமது ஆபத்பாந்தவனாக அமெரிக்காவையோ அல்லது ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளையோ மக்கள் நாடினால் அல்லது அவர்களின் கைகூலிகளை தலைவர்கள் ஆக்கினால் விளைவுகள் என்னவாகவிருக்கும் என்பதையும் நாம் கண்கூடாக கண்டு கொண்டிருக்கிறோம்.
ஆப்கானிஸ்தானில் மக்களை சுட்டுக் கொல்வது வேடிக்கையானது என்றும் தனது படையணியினருக்கு அவ்வாறு கட்டளையிட்டதுடன் இராக்கினை ஆக்கிரமித்த பின்னர் “தன்னுடன் முரண்பட்டால் உங்கள் எல்லோரையும் சுட்டுதள்ளுவேன்” என்று இராக்கிய சுதேசிய மக்களை விரட்டிய ஜெனரல் ஜேம்ஸ் மாட்டிஸ் ( General James Mattis ) ஐக்கிய அமெரிக்காவின் ஆயுதப்படைகளின் மத்திய ஆணையின் உயர் பதவிக்கு பிரேரிக்கப்பட்டதையும் நான் அமெரிக்காவின் அண்மைக்கால மனித உரிமை அரசியல் கபடத்தனத்துக்கு உதாரணங்களாக கொள்ளலாம். இப்போதெல்லாம் பல விகிலீக்ஸ் தகவல் பரிமாற்றங்கள் வெளிவந்து ஏகாதிபத்திய நாடுகளின் அவர்களின் ஆதரவு நாடுகளின் முகத்திரையை சற்று நீக்கத் தொடங்கியிருக்கிறது. இன்றைய உலகின் முதிர்ந்த அரசியல் ஞானியும் இடதுசாரி கருத்தியலாளரும் பாலஸ்தீன மக்களின் நியாயபூர்வ உரிமைகள் தொடர்பிலும் இராக்கிய மக்களின் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு தொடர்பிலும் , தான் சார்ந்த சமூகமான யூதர்களின் சியோனிஸ கருத்தியல்கள் குறித்தும காரசாரமான விமர்ஷனங்களை முன்வைத்து இஸ்ரேல நாட்டு இஸ்தாபிதத்தையும் கேள்விக்குட்படுத்திய அறிஞர் எரிக் ஹோப்ச்வாம் ( Eric Hobsbawm) அமெரிக்காவின் ஆக்கிரமிப்புகளை தலையீடுகளை ” மனித உரிமைகள் ஏகாதிபத்தியம் ” (Imperialism of human rights ) என்று கூட சொல்லலாம் என்று குறிப்பிடுகிறார். இப்போது லிபியாவில் தனது மனித உரிமை ஏகாதிபத்தியத்திற்கான தலையீட்டை கடாபி ஏற்படுத்தி கொடுப்பாரா அல்லது அமைதியாக வெளியேறிவிடுவாரா அல்லது தமது எதிர்ப்புக்களை அடக்கி வெல்வாரா !! . பதிலும் வெகு தூரத்திலில்லை.
கடாபியின் லிபியாவிற்கும் இலங்கை மற்றும் மூன்றாம் உலக நாடுகள் நெல்சன் மண்டேலாவின் தென் ஆபிரிக்காவிற்குமான தொடர்புகள் குஜன ஊடக செய்திகள் ஆனால் இலங்கையின் ஆட்சியுடனான அரசியல் தொடர்புகளுக்கு அப்பால் இஸ்லாமிய சோசியலிச முன்னணி எனும் கட்சியை தோற்றுவித்த முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி பதயுதீன் கடாபியுடன் நேரடியாக தொடர்புகொள்ள வாய்ப்பு கிடைத்தவர் என்பதுடன் கடாபியும் இஸ்லாமிய சோசலிசம் -பொதுவுடைமை- கொள்கையை தனது பச்சை நூல் மூலம் பரப்பியவர். அவரின் மத வியாக்கியானங்கள் தான் சர்ச்சைக்குரியனவாக அமைந்தன. அதேவேளை எழுபதுகளில் கடாபியின் தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்பு , மூன்றாம் உலக கட்டுமான செயற்பாடுகள் காரணமாக இடதுசாரி சக்திகளும் இவரை ஆராதித்தன. அந்த வகையில் கமுனிஸ்ட் கார்த்திகேசு ஆசிரியர் . வீ. பொன்னம்பலம் போன்ற தமிழ் இடதுசாரிகளும் இவரை பற்றி சிலாகித்து பேசியுள்ளனர். உலக இஸ்லாமிய அழைப்பு சமூகம் என்று கடாபி லிபியாவில் உருவாக்கிய ஒரு நிறுவனம் எவ்வாறு இலங்கையில் செயற்பட்டது. மறைந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அஸ்ரப் , இன்றைய தலைவர் ஹக்கீம் ஆகியோரின் தொடர்புகளுடன் உள்ள சம்பவங்களுடன் மீண்டும் உங்களை சந்திக்கும் வரை….sbazeer@yahoo.co.uk

No comments:

Post a Comment

المشاركات الشائعة