Search This Blog

Mar 14, 2011

இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் முதல் செய்மதி தொலைகாட்சி ஏப்ரல் மதம் இயக்கம் பெரும்




இஹ்வானுல் முஸ்லிமீன் தனது முதலாவது செய்மதி தொலைகாட்சி அலைவரிசை ஒன்றை எகிப்தை தளமாக கொண்டு இயக்கமுடிவு செய்துள்ளது ஹுஸ்னி முபாரக் அரசாங்கம் எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பை தடை செய்து வைத்திருந்ததுடன் அதன் மீது அனைத்து வகையான ஊடக கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தது என்பது குறிபிடத்தக்கது.
இந்த அமைப்பின் குரல் வலையை திருகி வைத்திருந்த முபாரக் அந்த அமைப்புக்கு சொந்தமான 50 வர்த்தக கம்பனிகளையும் இயக்க தடை விதித்து முடக்கி வைத்திருந்தார் தற்போது சர்வாதிகாரி முபாரக் கவிழ்க்கப் பட்ட பின்னர் இஹ்வானுல் முஸ்லிமீன்  சுதந்திரமாக தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது முபாரக்கின் அரசாங்கத்தில் சுயேச்சையாக தேர்தலில் போட்டியிட்ட இந்த அமைப்பு தற்போது நீதிக்கும் சுதந்திரதுக்குமாகான கட்சி “Freedom and Justice party ” என்ற அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கியுள்ளது இந்த நிலையில் இந்த சர்வதேச அமைப்பு தனது முதல் செய்மதி தொலைகாட்சி சேவையை ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது.
இது தொடர்பாக அறிவித்துள்ள அப்துல் ரஹ்மான் அல்பர் என்ற இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் முக்கிய உறுப்பினர் இந்த செய்மதி தொலைகாட்சி சேவை ஏப்ரல் மாதம் பரிச்சாத்தமாக ஒளிபரப்பப்படும் என்றும் மே மாதம் முதலாம் திகதி அதன் முழுஅளவிலான சேவையை தொடரும் என்றும் இந்த தொலைகாட்சி சேவை அல் ஜஸீரா செய்தி சேவையின் நிபுணர்களின் உதவி பெற்றுக்கொள்ளும் என்றும் இஹ்வானுல் முஸ்லிமீன் இணையத்தள ஊழியர்கள் சிலரையும் இதற்கு பயன்படுத்தும் என்றும் அந்த தொலைகாட்சி சேவை அரசியல் , சமூகவியல் , மார்க்க விடையங்கள் தொடர்பான நிகழ்சிகளை ஒளிபரப்பாகும் என்று தெரிவித்துள்ளார்
இந்த  செய்மதி தொலைகாட்சி அலைவரிசைக்கு  புரட்சியை நினைவு கூறும் வகையில் ‘தஹ்ரீர்’-  விடுதலை என்று அல்லது அந்த அமைப்பின் பெயரான இஹ்வானுல் முஸ்லிமீன் என்ற பெயரை சூட்டுவதா என்று ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த  செய்மதி தொலைகாட்சி அலைவரிசை நைல்செட்  என்ற செய்மதி   மூலம் ஒளிபரப்பாகவுள்ளது, அதன் மொழி தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கவில்லை

No comments:

Post a Comment

المشاركات الشائعة