Search This Blog

Mar 10, 2011

இரு முக்கிய நகரங்களில் இருந்து கடாபியின் படை விரட்டப்பட்டுள்ளது



கிழக்கின் எண்ணெய் நகர்களான ரஸ் லணுப் பகுதி மற்றும் பின் ஜவாத் ஆகிய பிரதேசங்களில் இருந்து கடாபிக்கு விசுவாசமான படைகள்விரட்டபட்டுள்ளதாக ரோய்டர் இன்று தெரிவித்துள்ளது லிபியாவில் கடுமையான தொடர் சண்டை நடந்து வருகின்றது லிபியாவின் முக்கிய எண்ணெய் கிணறுகளை கொண்ட கிழக்கின் எண்ணெய் நகர்களான ரஸ் லணுப் பகுதி மற்றும் பின் ஜவாத் ஆகிய பிரதேசங்களில் கடுமையான சண்டை நடைபெற்று இந்த கடும் சண்டையில் கடாபிக்கு விசுவாசமான படைகள் பின்வாங்கியுள்ளது.
லிபியாவின் பல பிரதேசங்களில் கடுமையான சண்டை இடம்பெற்று வருகின்றது திரிபோலிக்கு 50 கீ.மீ தூரத்திலுள்ள பகுதியான அஸ் சவியாஹ் பிரதேசம் கடாபியின் முற்றுகைக்கு உள்ளாகியுள்ளது அதை  லிபிய படைகள் தாம் கைப்பற்றியுள்ளதாக தொலைகாட்சி தெரிவித்தபோதும் போராளிகள் அந்த நகரையும் தாம் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர் அதேபோன்று மிசுரத் மற்றும் பின் ஜவாத் ஆகிய நகரங்களிலும் தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகின்றது


இதேவேளை மனிதாபிமான உதவி கப்பல் என்று தெரிவிக்கப்படும் சர்வதேச நாடுகளின் கப்பல் ஒன்று இன்று 52 கெண்டைன்னர்களுடன் பென்காசி துறைமுகத்தை அடைந்துள்ளது இவற்றுக்கும் போராளிகள் பாதுகாப்பு வழங்கிவருவதாக அந்த செய்தி தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment

المشاركات الشائعة