நாடு முழுவதிலுமுள்ள அனைத்து பாடசாலைகளும் பிற்பகல் 3.00 மணி வரை தொடர்ந்து நடத்தும் தீர்மானங்கள் எதனையும் அரசாங்கம் எடுக்கவில்லை என்று ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார் நாடு முழுவதிலுமுள்ள 1000 பாடசாலைகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் வரும் பாடசாலைகள் மாத்திரம் வேண்டுமாயின் பிற்பல் 3.00 மணி வரை தொடர்ந்தும் நடத்தப்படலாம்.
அதுவும் சம்பந்தப்பட்டவர்களின் பூரண இணக்கப்பாட்டுடன். எனினும், இவ்வாறான நேர நீடிப்பு மேற்படி திட்டத்தின் கீழுள்ள புதிய பாடசாலைகளுக்கே அனுமதிக்கப்படலாம். என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெளிவாக கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் விரிவாக
புதிய திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கால நீடிப்பு மாணவர்கள், பெற்றோர்கள், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய நலன்விரும்பிகளின் பூரண விருப்பத்தின் பேரிலேயே மேற்கொள்ளப்படுமே தவிர, கட்டாயமில்லை என்றும் தற்பொழுது நாடு முழுவதிலும் சுமார் 9,800 பாடசாலைகள் உள்ளன. இவற்றில் 350 தேசிய பாடசாலைகள் உள்ளன.
இந்நிலை 45 பிரபலமான பாடசாலைகளே காணப்படுகின்றது. எனவே ஒவ்வொரு வருடமும் பாடசாலைக்கு மாணவர்களை அனுமதிக்கும் போது பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுக்க நேர்கிறது. 45 பிரபல பாடசாலைகளாக உள்ளதை ஆயிரமாக அதிகரிப்பதே ஜனாதிபதியினதும், அரசாங்கத்தினதும் நோக்கமாகும் என்றும் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment