Search This Blog

Mar 20, 2011

முஸ்லிம் பிரதேச தேர்தல் வெற்றி தொடர்பான மூன்று அவதானங்கள்




M.ஷாமில் முஹம்மட்
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் முஸ்லிம் பிரதேசங்களில் மூன்று வகையான வெற்றி நிலைகள் அவதானிக்கப் படக் கூடியதாகவுள்ளது சில சபைகளில் வெற்றி பெற்றுள்ள கட்சிகள் அதி கூடிய பெரும்பான்மையை பெற்றுகொண்டு வெற்றி பெற்றுள்ளன அங்கு வெற்றி பெற்றுள்ள கட்சி எதிர் கட்சிகளுக்கு பெரிதாக வாக்குகளை விட்டு வைக்காமல் தட்டி சென்றுள்ளன.

இன்னும் சில சபைகளில் வெற்றி பெற்ற கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளை விடவும் எதிர் தரப்பு கட்சிகளின் வாக்குகளை கூட்டினால் எதிர் கட்சிகளின் மொத்த வாக்குகள் வெற்றி பெற்ற கட்சியின் மொத்த வாக்குகளை விடவும் அதிகமாக உள்ளதை காணமுடியும் இங்கு பெரும் பான்மை வாக்காளர்கள் ஒரு புறம் இருக்க வேறு ஒரு கட்சி கூடிய வாக்குகளை பெற்று கொண்டுள்ளது விரிவாக
மூன்றாவது விடையம் புதிதாக குறுகிய கால அவகாசத்துடன் பலமான அரசியல் பின்புலம் இன்றி வந்த சில சுயேச்சை குழுக்கள் கணிசமான வாக்குகளை பெற்று மற்ற பிரதான கட்சிகளுக்கு சவாலாக வந்துள்ளமை இந்த மூன்று விடையங்களும் நடந்து முடிந்த தேர்தலில் முஸ்லிம் பிரதேசங்களில் காணக் கூடியதாகவுள்ளது.
அவற்றில் முதல் வகையான அதி கூடிய பெரும்பான்மையை பெற்றுகொண்டு வெற்றி பெற்றுள்ளமை அம்பாறை மாவட்டத்தில் அதிகம் வெளிப்பட்டுள்ளது இந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் அக்கரைபற்று நகரசபை முடிவுகளின் படி அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் 11821 வாக்குகளை பெற்று 77.15% வீதமான ஆதரவை பெற்றுள்ளது அங்கு போட்டியிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2,819 வாக்குகளை பெற்று 18.40% வீதமான ஆதரவை பெற்றுள்ளது இங்கு போட்டியிட்ட எதிர் கட்சிகளின் மொத்த வாக்குகள் 3499 என்ற குறைந்த எண்ணிகையில் உள்ளது. இந்த வகையில் அக்கரைபற்று நகர சபை தேர்தலில்  தேசிய காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.
அதேபோன்று அம்பாறை மாவட்டத்தின் அட்டாளச்சேனை பிரதேச சபை முடிவுகளின் படி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 12,512 வாக்குகளை பெற்று 68.41% வீதமான ஆதரவை பெற்றுள்ளது இங்கு போட்டியிட்ட ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4,991 வாக்குகளை பெற்று 27.29% வீதமான ஆதரவை பெற்றுள்ளது இங்கு போட்டியிட்ட எதிர் கட்சிகளின் மொத்த வாக்குகள் 5770 என்ற குறைந்த எண்ணிகையில் உள்ளது இந்த வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கு அமோக வெற்றி பெற்றுள்ளது.
அதேபோன்று அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேச சபை  தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 10,355 வாக்குகளை பெற்று 77.90% வீதமான ஆதரவை பெற்றுள்ளது அங்கு போட்டியிட்ட ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2,468 வாக்குகளை பெற்று 18.57% வீதமான ஆதரவை பெற்றுள்ளது அங்கு போட்டியிட எதிர் கட்சிகளின் மொத்த வாக்குகள் 2938 என்ற குறைந்த எண்ணிகையில் உள்ளது இந்த வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கும் அமோக வெற்றி பெற்றுள்ளது இதை ஒத்த வெற்றிகள் இன்னும் சில முஸ்லிம் பிரதேசங்களில் பெறப்பட்டுள்ளது .
இடண்டாவது வகை வெற்றி பெற்ற கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளை விடவும் எதிர் தரப்பு கட்சிகளின்  மொத்த வாக்குகள் வெற்றி பெற்ற கட்சியின் மொத்த வாக்குகளை விடவும் அதிகமாக உள்ளதை காணமுடியும் இந்த வகையை மன்னார் மாவட்டம் மாந்தை பிரதேச சபையின் தமிழ் அரசு கட்சி 3,898 வாக்குகளை பெற்று 46.18% வீதமான ஆதரவை பெற்றுள்ளது ஆனால் இங்கு போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர  முன்னணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய எதிர் தரப்புக்கு தெரிவான கட்சிகளின் மொத்த வாக்குகள் 4539 என்ற கூறிய எண்ணிக்கையில் உள்ளது இங்கு  பெரும் பான்மையான வாக்காளர்கள் வெற்றி பெற்ற கட்சியை தெரிவு செய்யவில்லை ஆனால் கட்சிகளில் கூறிய வாக்குகளை பெற்ற கட்சி என்ற வகையில் தமிழ் அரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாந்தையில் தனித்து போட்டி இட்டமையும் ஒரு காரணம் மாந்தையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இனைந்து தேர்தலில் களம் இறங்கியிருந்தால் மாந்தை முஸ்லிம்களின் கையில் இருந்திருக்கும் என்பது வேறு ஒரு விடையம்.
அதேபோன்று புத்தளம் மாவட்டம் புத்தளம் நகர சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 6,766 வாக்குகளை பெற்று 44.44% வீதமான ஆதரவை பெற்றுள்ளது ஆனால் அங்கு போட்டியிட்ட பிரதான சுயேச்சை குழு ,ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய எதிர் தரப்புக்கு தெரிவான கட்சிகளின் மொத்த வாக்குகள் 8,458 என்ற கூடிய எண்ணிக்கையில் உள்ளது இங்கு பெரும் பான்மையான வாக்காளர்கள் வெற்றி பெற்ற கட்சியை தெரிவு செய்யவில்லை ஆனால் கட்சிகளில் கூடிய வாக்களை பெற்ற கட்சி என்ற வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றுள்ளது.
அங்கு பெரும்பான்மை வாக்காளர்களின் விருப்பு ஒன்று வெற்றி வேறொன்று அதேநேரம் புத்தள நகர சபை தேர்தலில் முன்னாள் பிரதியமைச்சர் ஒருவர் தேர்தலில் போட்டியிட்டமை நகர சபையை தொடர்ந்தும் முஸ்லிம்களின் கையில் வைத்துகொள்ள காரணமாக அமைந்துள்ளது என்ற வாதத்தில் நிறைய நியாயங்கள் உண்டு என்பதும் நோக்கத்தக்கது மேற்சொன்ன இரண்டு பிரதேசங்களான மாந்தை , மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்களில் வெற்றி பெற்ற கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளை விடவும் எதிர் தரப்பு கட்சிகளின் மொத்த வாக்குகள் அதிகமாக உள்ளதை காணமுடியும் அந்த பிரதேச பெரும்பான்மையான வாக்காளர்கள் வெற்றி பெற்றுள்ள கட்சியை தெரிவு செய்யவில்லை என்பது குறிபிடத்தக்கது.
மூன்றாவது அவதானிக்கப் பட்டுள்ள விடையம் திருகோணமலை மாவட்டடம் கிண்ணியா நகர சபை தேர்தலில் முதல் முறையாக களம் இறங்கிய ஜமாஅதே இஸ்லாமி உறுபினர்களை கொண்ட சுயேச்சை குழு மற்றும் மட்டகளப்பு மாவட்டம் காத்தான்குடி நகர சபை தேர்தலில் முதல் முறையாக களம் இறங்கிய நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஆகிய அணிகள் மிகவும் பலமான சக்திகளை எதிர்த்து கணிசமான வாக்குகளை பெற்றுள்ளனர் குறிப்பாக அப்துல் ரஹ்மான் தலைமயிலான நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் பிரதி அமைச்சர் ஒருவரின் கோட்டையாக விளங்கும் காத்தான்குடியில் அவர் பல வேலைதிட்டங்களை செயல்படுத்தி கொண்டு இருக்கும்நிலையிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி ஆகிய பலமான கட்சிகளை பின்னுக்கு தள்ளி ஆளும் தரப்பு பிரதி அமைச்சரின் இரண்டாயிரம் வரையான வாக்குகளையும் கைப்பற்றி இரண்டாம் நிலையை பெற்றுள்ளமையும்,
கிண்ணியா நகர சபா தேர்தலில் களம் இறங்கிய ஜமாஅதே இஸ்லாமி உறுபினர்களை கொண்ட சுயேச்சை குழு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்ற வாக்குகளின் அரைவாசிக்கு நிகரான வாக்குகளை பெற்றிருப்பதும் இந்த சுயேச்சை அணிகளுக்கு கிடைத்த ஒரு பெரும் வெற்றியாக பார்க்கப்படமுடியும் அதிலும் கிண்ணியாவில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களிக்க தவறினால் ஒதுக்கப்படுவோம் இலங்கையின் பிரதான கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசிய கட்சிக்கு கடந்த முறை நகரசபையை வழங்கியும் எதையும் பெற்றுகொள்ளமுடியவில்லை என்ற நிலையில் எந்த அதிகார பின்புலமும் இல்லாதவர்களுக்கு வாக்களித்தால் நான்கு வருடங்களுக்கு நகரில் எந்த அபிவிருத்தியும் இருக்காது என்ற கனமான பிரசாரத்தின் மத்தியிலும் இவர்களுக்கு கிடைத்த அந்த 3,727 வாக்குகள் மிகவும் சக்தி வாய்ந்தது என்றுதான் கூறவேண்டும்
இந்த தேர்தல்களில் காத்தான்குடியில் களம் இறங்கிய நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் 6,809 வாக்குகளை பெற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 10,357 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது அதேபோல் கிண்ணியாவில் களம் இறங்கிய ஜமாஅதே இஸ்லாமி உறுபினர்களை கொண்ட சுயேச்சை குழு 3,727 வாக்குகளை பெற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 6,876 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது.
இங்கு இந்த இரண்டு அமைப்புகளும் உண்மையா இஸ்லாமிய மற்றும் பொது நோக்கிலான அரசியல் ஆளுமைகளை கொண்டிருந்தாக பார்க்கப்பட்டாலும் அந்த பிரதேச மக்கள அரசியல் ஆளுமை என்று கருதும் விடயத்தில் முக்கிய கவனம் செலுத்துவதுடன் இஸ்லாமிய அரசியலை ஒரு ஒழுங்கு படுத்தப்பட்ட முறையில் முன்வைக்கவேண்டும் அரசியலில் மக்கள் வெறும் நல்லவர்களை மட்டும் தெரிவு செய்யவதில்லை அவ்வாராயின் மோசடி, ஊழல், ஏமாற்று, துரோகம், என்ற பாவங்கள் முழுமையாக சமூகத்தில் நிறைந்து விட்ட பின்னர்தான் இவர்கள் பக்கம் மக்கள் திரும்பி பார்க்கும் நிலை ஏற்படும் இஸ்லாமிய அரசியல் என்று வரும்போது மற்ற வேட்பாளர்களின் மோசடி, ஊழல், ஏமாற்று, துரோகம் ஆகியவற்றை இஸ்லாமிய அரசியல் சக்திகள் தமக்கான ஒரு முதலிடாக கருதி செயல்படமுடியாது சமூகத்துக்கு இஸ்லாமிய அரசியல் சித்தாந்தம் ஒரு முறையான வடிவில் முன்வைக்கப்படவேண்டும் அப்போதுதான் ஒரு நீதியான கொள்கைக்கும் மற்ற கொள்கை , நடைமுறைகளுக்கும் இடையான வித்தியாசத்தை மக்கள் தெளிவாக தெரிந்து கொள்வார்கள்.
உலகில் ஆயிரகணக்கான ஆண்டுகள் இஸ்லாமிய அரசியல் நடத்தை என்ற வடிவில்தான் இருந்து வந்துள்ளது அது ஒரு எண்ணக்கருவாக ஒரு கற்கையாக தற்போது உருபெற்றுள்ளது இந்த நிலையில் அவை முன்வைக்கப்படும்போது அதன் சரியான தாக்கத்தை இன்ஷாஅல்லாஹ் வெளிப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

No comments:

Post a Comment

المشاركات الشائعة