Search This Blog

Mar 7, 2011

இஹ்வான்களுடன் பேசுமாறு அவுஸ்ரேலியா வெளிநாட்டமைச்சர் கெவின் ருட் அழைப்பு !




எகிப்தின் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்புடன் சர்வதேச நாடுகள் கண்டிப்பாக பேசவேண்டும் என்று அவுஸ்ரேலியா வெளிநாட்டமைச்ச ர்கெவின் ருட் தெரிவித்துள்ளார் அவர் தெரிவித்துள்ள செய்தியில் எகிப்தில் அரசியல் சக்தியான இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு பேச்சுகளில் உள்வாங்க படவேண்டும் ‘நாங்கள் அதில் ஈடுபடவேண்டும் அது என்ன விளைவை தருகின்றது என்று பார்ப்போம் நான் நினைகின்றேன் வெளிப்டையாகவும் ஆனால் எச்சரிக்கையுடன் நாங்கள் அதை செய்யவேண்டும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்
அதேவேளை பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமெரோன் நான் எகிப்தின் அனைத்து எதிர்த்தரப்புடன் பேசுவேன் ஆனால் இஹ்வானுல் முஸ்லிமீன் அரசியல் அமைப்புடன் பேசமாட்டேன் என்ற அவரின் பிடிவாதமான நிலைபாட்டை தான் நேரடியாக எதிர்பதாகவும் கெவின் ருட் தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி பிரிட்டன் பிரதமர் டேவிட் கமெரோன் எந்த முன்னறிவிப்பும் இன்றி எகிப்து சென்று இராணுவ நிர்வாகத்தின் தலைவர் தந்தாவி மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஆர்பாட்டங்களில் ஈடுபட்ட எதிர் தரப்பு மற்றும் அரசியல் கட்சிகளை சந்தித்து பேசிய அவர் இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பை சந்திக்க வில்லை என்பது குறிபிடத்தக்கது
அதேவேளை இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான டாக்டர் முஹமத் பெல்டஜி ஐரோபிய பாராளுமன்றத்தின் முன்னாள் தலைவரை சந்தித்து வரும் காலங்களில் மேற்குலகுடன் இஹ்வானுல் முஸ்லிமூன் தொடர்புகளை ஏற்படுத்துவது தொடர்பான எண்ணத்தை வெளிப்படுத்தவுள்ளார் என்று இஹ்வான் செய்திகள் தெரிவிக்கின்றன இதேவேளை எகிப்தில் முபாரக் சர்வாதிகார அரசால் மூடப்பட்ட 50 வர்த்தக நிறுவனங்களை மீண்டும் இயக்க இஹ்வானுல் முஸ்லிமூன் தீர்மானித்துள்ளது.

No comments:

Post a Comment

المشاركات الشائعة