இலங்கையின் பல பகுதிகளில் இருந்து மிகவும் மந்தகதியில் மீள் குடியேறிவரும் யாழ்ப்பான முஸ்லிம்களில் ஒரு தொகுதியினர் யாழ் புதிய சோனகதெரு பகுதியில் தமது வீடுகள் இருத்த காணிகளில் கொட்டில்களை அமைத்து வசித்து வருகின்றனர் இவர்களுக்கு மீள் குடியேற்றத்தை ஊக்கிவிக்கும் அமைப்புகளாலும் அரசாங்கத்தினாலும் அவர்களின் அடிப்படையான வசதிகளை செய்து தருவதாக வாக்குறுதி வழங்கப்பட்ட நிலையில் இதுவரையும் எந்த நடவடிகையையும் அரசு செய்து தரவில்லை என்று தெரிவித்து அடிப்படையான தேவைகளை உடனடியாக செய்து தருமாறு கோரி சத்தியா கிரக போராட்டத்தை நேற்று ஆரம்பித்துள்ளனர்
இந்த பகுதியில் உள்ள 40 வரையான குடும்பங்கள் இதில் கலந்து கொண்டுள்ளன இவர்களை யாழ் அரச அதிபர் இமல்டா சுகுமார் சந்தித்து அடிப்படையான தேவைகளை செய்து தருவதாக வாக்குறுதி அளிந்துள்ளார் இதற்கு முன்னரும் சில மாதங்களுக்கு விரிவாக முன்னர் சென்ற யாழ் அரச அதிபர் இமல்டா சுகுமார் இதேபோன்ற வாக்குறுதியை வழங்கி சென்றார் என்று அந்த மக்கள் தெரிவிகின்றனர் தற்போது அந்த மக்கள் சத்தியா கிரக போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளனர் என்று எமது lankamuslim.org யாழ்செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பத்தாயிரத்தி 200 முஸ்லிம் குடும்பங்கள் தற்போது நாட்டின் பல பகுதிகளில் வாழ்ந்து வரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் 500 க்கு உட்டபட்ட வரிய குடும்பங்கள்தான் மீள் குடியேறி வாழ்ந்து வருகின்றது என்பது குறிபிடத்தக்கது இவர்களின் மீள் குடியேற்றத்தை முஸ்லிம் பிரதேச அடிப்படையான கட்டமைப்புகள் சிதைந்து இருப்பதும் அரசாங்கத்திடம் முஸ்லிம் மீள் குடியேற்றம் தொடர்பான தனியான அணுகுமுறை இல்லாமையும், அரசாங்கமும் , அரசசார்பற்ற அமைப்புகளும் அண்மையில் நடந்த யுத்தத்தால் பாதிக்க பட்ட தமிழ் மக்களை மட்டும் இடம் பெயர்ந்தவர்களாக கருதும் பொறுத்த மற்ற கொள்கையும் முஸ்லிம்கள் மீள் குடியேற்றத்தை தடுத்து நிற்கின்றது.
மீள் குடியேறிவரும் தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் எந்த பிரதான உதவிகளும் மீள் குடியேறி வரும் முஸ்லிம்களுக்கு வழங்கப்படுவதை என்பதுடன் யாழ் குடாநாட்டில் யுத்தம் காரணமாக சேதமான 100 பாடசாலைகளை புனர்நிர்மாணம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் யாழ் நகரில் அமைந்துள்ள முஸ்லிம் பாடாசலைகள் எதுவும் பாடசாலைகள் புனர்நிர்மாணம் திட்டதிற்கு உள்வாங்கப்படவில்லை என்பதும் குறிபிடத்தக்கது.
முஸ்லிம் மீள் குடியேற்றம் ஓர் ஆய்வு: M. ஷாமில் முஹம்மட்
1990 இல் வட மாகாணத்தின் பூர்விக குடிகளில் ஒன்றான முஸ்லிம்கள் புலி பயங்கர வாதத்தால் வெளியேற்றபட்டனர் அவர்களின் அனைத்து அசையும் அசையாத சொத்துகளும் புலி பயங்கரவாதத்தால் கொள்ளையிடப்பட்டது கோடிகணக்கான சொத்துகளின் சொந்தகாரர்கள் சில மணித்தியால அவகாசத்தில் அணைத்தையும் இழந்த அகதிகளாக ஆக்கப்பட்டனர் அன்றில் இருந்து இன்றுவரை வடமாகாண முஸ்லிம்களில் அகதி வாழ்கை இருபது வருடயங்களை எட்டியும் விடிவு இன்றி தொடர்கின்றது.
வடக்கில் இருந்து அன்று வட மாகான முஸ்லிம்கள் ஒரு இலச்சதுக்கும் அதிகமான மக்கள் பலவந்தாமாக வெளியேற்ற பட்டனர் இன்று அவர்களின் தொகை இரு மடங்குகளால் அதிகரித்துள்ளது ஒரு கும்பமாக வந்தவர்கள் இன்று மூன்று குடும்பங்களாக , நான்கு குடும்பங்களாக பெருகியுள்ளார்கள் 20 வருடங்களில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது ஆகவே மீள் குடியேற்றம் என்பது அவர்களின் இடங்களை அவர்களுக்கு பெற்று கொடுபதுடன் , அவர்களின் மஸ்ஜித்துகளையும், பாடசாலைகளையும் மீள கூரை போட்டு, சுவர்களுக்கு வர்ணம் பூசி கொடுப்பதுடன் முடிந்து விடாது.
வட மாகான முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தனித்துவமாக அணுகப்படவேண்டும் , தமிழ் மக்களின் மணிக் பாம் போன்ற தமிழ் மக்களின் முகாம்களுடன் ஒபிட்டு முஸ்லிம்களின் பிரச்சனையை அணுகமுடியாது அப்படியான அணுகு முறைகள் முற்றிலும் தவறானதாகதான் இருக்கம் தமிழ் மக்களின் பிரச்சனை தனியானது அவர்கள் இறுதி யுத்தத்தின் போது புலிகளால் பலவந்தமாக அல்லது விரும்பி புலிகளுடன் சென்றார்கள் ஒரு கும்பமாக சென்றவர்கள் உறுபினர்களை இழந்து தொகை குறைத்து அல்லது வந்த அதே தொகையினர் மீள் குடியேற்றம் செய்யபடுகின்றார்கள் இது ஒரு குறுகிய கால இடைவெளியில் நடைபெற்றவை ஆகவே தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் என்பது வேறு , முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம் என்பது முற்றிலும் வேறானது ஆனால் நடைமுறையில் இரண்டு தரப்பினரும் ஒன்றாக பார்க்க படுகின்ற மிகவும் தவறான அணுகு முறைதான் பின்பற்றபடுகின்றது.
இப்போது இருக்கும் மொத்த வட மாகான முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கும் தீர்வு கிடைக்க கூடிய அரச கொள்கை ஒன்று வேண்டும் 20வருடங்களுக்கு முன்னர் ஒரு வீட்டையும் ஒரு கடையையும் இழந்த ஒருவரின் குடும்பம் இன்று மூன்று குடும்பமாக இருக்கும் போது இரு இரு தரப்புக்கும் ஒரு விதமான மீள் குடியேற்ற முறை முற்றிலும் தவறானது முஸ்லிம்கள் , சிங்களவர்கள் மீள் குடியேற்றம் பற்றிய அரச கொள்கை ஒன்று உருவாக்கபட வேண்டும் அந்த கொள்கையின் அடிப்படையில் மீள் குடியேற்றம் இடம் பெற வேண்டும் அதுவரை வட மாகான முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் என்பது அரசியல் வசனங்களாக மட்டுமாகத்தான் இருக்க போகின்றது நான்கு குடும்பமாக இருக்கும் மக்களிடம் ஒரு உடைந்து தகர்ந்து கிடக்கும் ஒரு சிறிய இடத்தை காட்டி இங்கு நீங்கள் வந்து குடியேறுங்கள் உங்களுக்கு 100 வீத பாதுகாப்பை நாங்கள் தருகிறோம் என்றால் அது மீள் குடியேற்றத்தை செய்வதற்கு போதுமாகாது 20 வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம்கள் இருந்த இடங்களிலும் அதற்கு சுற்று புறங்களிலும் காணிகள் தெரிவு செய்ப்பட்டு புதிய குடியிருப்புகள் உருவாக்கபடவேண்டும் புதிதாக உருவாகியுள்ள குடும்பங்களுக்கும் , வீடு இல்லாதவர்களுக்கும் அங்கு வீடுகள் கட்டி கொடுக்க படவேண்டும் , தொழில் வசதிகள் செய்து கொடுக்க படவேண்டும் இவை மட்டும்தான் முஸ்லிம் மீள் குடியேற்றம் என்பதை சரியாக உருவகப் படுத்த முடியும்
No comments:
Post a Comment