Search This Blog

Mar 4, 2011

கருப்பு ஒக்டோபர் ஆவணம் மீண்டும் வளமான குரலுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது



கருப்பு ஒக்டோபர் தொடர்பான ஆவணம் மீண்டும் புதிய மாற்றங்களுடன் கருப்பு ஒக்டோபர் என்ற பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த ஆவணம் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தயாரிக்கப்பட்ட நிலையில் சில விடயங்களை கருத்தில் கொண்டு நீக்கப்பட்டது இது தொடர்பாக பலரும் மீண்டும் பதிவு செய்யுமாறு வேண்டிகொண்டனர் தற்போது அந்த ஆவணம் M. முக்தாரின் வளமான குரல் வளத்துடன் மீண்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் பாசிச புலிகளினால் பல பரிமாணங்களை கொண்ட அடக்குமுறைகளை அனுபவித்தனர் இந்த அடக்கு முறை 20 அண்டுகள் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளபட்டது இருபது ஆண்டுகளில் முஸ்லிம்கள் பல ஆயிரம் உயிர்களை இழந்தனர் பல நூறு பேர் கடத்தப்பட்டு காணாமல் போயினர், மஸ்ஜிதுகள், வீடுகள் என்றும் சிறுவர்கள் , சிறுமியர் என்றும் எதையும் எவரையும் பாசிச புலிகள் விட்டுவைக்கவில்லை திட்டமிட்ட புலிகளின் இராணுவ தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளபட்டது 
பல கிராமங்கள அழிந்தன பல நூறு கோடி ரூபாய்களை முஸ்லிம்கள் புலிகளிடம் இழந்தனர் முஸ்லிம்களின் சொத்துக்கள் கொள்ளையிடபட்டது, 1990 ஆம் ஆண்டு வடமாகாணத்தில் 5 மாவட்ட முஸ்லிம்கள் அவர்களின் அசையும் அசையாத சொத்துகள் கொள்ளையிடப்பட்ட நிலையில் வடக்கில் இருந்து புலிபயங்கரவாதிகளினால் விரட்டப்பட்டனர் சுமார் 20 வருடங்களாக புலிகள் முஸ்லிம்கள் மீதான இனச் சுத்திகரிப்பை மேற்கொண்டுள்ளனர் இந்த பாசிச புலிகள் மேற்கொண்ட இனச் சுத்திகரிப்பின் ஒரு பரிமாணம்தான் வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றம் வடமாகாண முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வடமாகாணத்தின் யாழப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களிலிருந்தும் சும்மார் ஒரு இலட்சம் வரையான முஸ்லிம்கள் அவர்களின் பாரம்பரிய பிரதேசங்களிலிருந்து புலிகளால் முஸ்லிம்கள் ஆயுத பலத்தை பயன்படுத்தி விரட்டி அடிக்கப்பட்டனர்.
புலிகள் அழிக்கப்படும் வரை முஸ்லிம்கள் நிம்மதியாக வாழவில்லை இந்த ஒக்டோபர் நிகழ்வை முஸ்லிம்கள் கருப்பு ஒக்டோபராக ஒவ்வொரு வருடமும் நினைவு கூர்ந்து வருகின்றனர்

No comments:

Post a Comment

المشاركات الشائعة