M.ரிஸ்னி முஹம்மட்
லிபியாவின் நிலை மேலும் மோசமடைந்து வருகின்றது லிபியாவின் கடாபி எதிர்பாளர்களின் கையில் இருந்து எண்ணெய் வளம்கொண்ட கிழக்கு பிரதேசத்தை மீட்கும் நோக்கில் கடாபிக்கு விசுவாசமான படை விமான குண்டு தாக்குதல்களையும் நேரடி இராணுவ தாக்குதல்களையும் ஆரம்பித்து நேற்று கிழக்கின் சில பகுதிகளுக்குள் புகுந்தது எனினும் மக்களையும் , மக்கள் ஆர்பாட்டங்களுக்கு ஆதரவான இராணுவத்தையும் இன்னும் பல அறியப்படாத ஆயுத குழுக்களையும் கொண்ட படையால் கடாபிக்கு விசுவாசமான படை ஆயுத தாக்குதல் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளது.
இன்று கடாபியின் விமானப் படையின் தாக்குதல் பல இடம்பெற்றுள்ளது குறிப்பாக கடாபி தனது கட்டுப்பாட்டை இழந்துள்ள கிழக்கு பகுதியில் எண்ணெய் கிணறுகளை கொண்ட பிரதேசமான பெரியிகா மீது இன்று விமான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது விரிவாக
இந்த நிலையில் கடாபிக்கு எதிரான மக்கள் படை அதை எதிர்ந்து போராடிவருகின்றது கடாபி தொடர்ந்தும் இழப்புகளையும் , அழுத்தங்களையும் , தடைகளையும் சந்தித்தும் பிடிவாதமாக போராடிவருகின்றார் அதேவேளை இன்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்- ICC- லிபியாவில் கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் நடந்து வரும் பொதுமக்கள் மீதான படுகொலைகள் தொடர்பாக கடாபி மற்றும் அவரின் சில புதல்வர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராகவும் கடாபிக்கு எதிரானவர்கள் மீதும் விசாரணைகளை ஆரம்பிக்க தயாராகிவருகின்றது.
லிபிய ஐநா , அரபு லீக் போன்ற பல அமைப்புகளின் உறுப்புரிமையை இழந்துள்ளது அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் இராணுவத்தை லிபியாவுக்கு அனுப்புவது தொடர்பில் தீவிரமாகவும் அதற்கு சாதகமாகவும் நகர்வுகளை செய்து வருகின்றது ஏற்கனவே பல மேற்கு நாட்டு இராணுவம் கிழக்கு பகுதியில் மனிதாபி மான உதவிகளை செய்கின்றோம் என்ற தோரணையில் உள்நுழைந்துள்ளது நெதர்லாந்த் நாட்டு மூன்று இராணுவ சிப்பாய்கள் கடாபியின் படையால் பிடிக்கப்பட்டுள்ளனர் என்பதை அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இரண்டு பாரிய யுத்த கப்பல்கள் சுவிஸ் கால்வாயை – Suez Canal- கடந்து லிபியாவுக்கு மிகவும் அண்மையில் நிறுத்தபட்டுள்ளது அரசியல் ஆய்வாளர்களின் கருத்துகளின் பிரகாரம் மேற்குலகின் இராணுவ தலையீடு தொடர்பான நகர்வுகள் மிகவும் வேகமாக நடந்து வருவதாக தெரிகின்றது இதேவேளை துருக்கி ,ஈரான் ஆகிய நாடுகளும் , அரபு லீக் லிபியாவில் மேற்குலகின் இராணுவ தலையீட்டை தாம் வரவேற்கவில்லை என்று தெரிவித்துள்ளது அதேபோன்று லிபியாவின் பல பகுதிகளிலும் வெளிநாட்டு இராணுவம் வேண்டாம் எமது பிரச்சினையை நாமே தீர்ப்போம் என்ற வாசகங்கள் கொண்ட போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியில் பலம் கொண்ட இஸ்லாமிய அரசியல் இயக்கங்கள் மேற்குலகம் லிபியாவுக்கு இராணுவத்தை அனுப்பக் கூடாது என்று தெரிவித்து வருகின்றது இதேவேளை வெளிசுலா அதிபர் ஒரு பேச்சுக்கான பொதி ஒன்றை முன்வைத்துள்ளார் இதை கடாபி ஏற்று கொண்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது எனினும் லிபியாவின் எதிர் தரப்பினர் இதை நிராகரித்துள்ளனர் அமெரிக்கா இராணுவத்தை உள்நுழைக்க தேவையான நாடகங்கள் பலவற்றை ஏற்கனவே செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
அமெரிக்கா ஐநா வின் அனுமதி இன்றியே லிபியாவில் நுழைந்து தாக்குதல் ஒன்றை நடத்தி கடாபிக்கு முடிவு கட்ட முயன்று வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிகின்றனர் இதற்கு பிரதான காரணங்களாக மேற்கு நாடுகளின் கையில் இருக்கும் எண்ணெய் வயல்களை பாதுகாப்பது , கடாபியின் கையில் இருக்கும் இரசாயன ஆயுதங்களை கைப்பற்றுதல் அடுத்து பிரதானமாக லிபியா இஸ்லாமியவாதிகளின் கைக்கு சென்ருவிடாது தடுத்தல் என்ற இலக்குடன் அமெரிக்காவின் படைகள் திடீர் பாய்ச்சல் ஒன்றை செய்யலாம் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
எகிப்து, துனூசியா போன்று லிபியாவில் அமெரிக்கா உட்பட மேற்குலகு சார்பா வலுவான நிறுவங்கள் இல்லை எகிப்து, துனூசியா நாடுகளில் தலைவர்கள் பதவி விலகிய பின்னரும் எஞ்சியிருந்த அரசாங்கம் , பிரதமமந்திரி, துணை ஜனாதிபதி, பாராளுமன்றம் , இராணுவம் போன்ற மேற்கு சார்பான எந்த நிறுவனங்களும் லிபியாவில் இல்லாத நிலையிலும் லிபியா இராணுவவும் சிதைந்துவரும் நிலையில் மேற்கு உலகம் தான் கால்பதிக்க ஆக்கிரமிப்பு , மற்றும் பலமான உளவு கட்டமைப்பு என்ற தெரிவுகளில் விரைவில் இரண்டில் ஒன்றை தெரிவு செய்யும் தற்போது கள நிலவரங்களை பார்க்கும்போது நேரடி இராணுவ முனைப்புக்கான வாய்ப்புகள் கூடுதலாக காணபடுகின்றது
அமெரிக்காவின் இரண்டு பாரிய யுத்த கப்பல்கள் சுவிஸ் கால்வாயை – Suez Canal- கடந்து லிபியாவுக்கு மிகவும் அண்மையில் நிறுத்தபட்டுள்ளது – Suez Canal-
No comments:
Post a Comment