Search This Blog

Mar 27, 2011

மீள் பதவு: உள்ளூராட்சித் தேர்தல் முறை உத்தேச மாற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் அவசியமானது



‘உள்ளூராட்சித் தேர்தல் முறை உத்தேச மாற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் அவசியமானது’ என்ற S.M.அப்துல்லாஹ் எழுதிய கட்டுரை கடந்த வருடம் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி எமது lankamuslim.org தளத்தில் வெளியானது தற்போதைய தேவை கருதி மீண்டும் இன்று -27.03.2011- மீள் பதிவு செய்யப்படுகின்றது
உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தினால் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என முஸ்லிம் அமைப்புகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட்ட பல அமைப்புகள் கடந்த வருடம் 12 மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர் அந்த வழக்குகள் இருந்த நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு உட்பட்டது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பாராளுமன்றில் கடந்த வருடம் நவம்பர் 16 ஆம் திகதி சபாநாயகர் சமல் ராஜபக்ஷ் தெரிவித்தார்.
பின்னர் உள்ளூராட்சி சபை தேர்தல் திருத்தச் சட்டமூம் இந்த வருடம் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் விவாதம் ஒத்திவைக்கப்பட்டது இந்த ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் திருத்தச் சட்டமூம் மீண்டும் பாராளுமன்றத்தில் விரைவாக கொண்டுவரப்படவுள்ளது என்று தெரிகின்றது இதன் காரணமாக இது தொடர்பான கட்டுரைகள் மீள் பதிவு செய்யப்படுகின்றது.

S.M.அப்துல்லாஹ்
சிறுபான்மை அரசியல் மட்டங்களில் பெரிது விவாதிக்கப்படும் உள்ளூராட்சித் தேர்தல் முறையின் உத்தேச புதிய மாற்றங்கள் அடங்கிய சட்டமூலம் பாராளுமன்றத்தில் விரைவில் சமர்பிக்கபடவுள்ளது இது தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது இந்த கலந்துரையாடலின் முஸ்லிம் நிறுவனங்கள், இயக்கங்களின் பிரதிநிதிகளையும் ஆர்வமுள்ளவர்களையும் கலந்து கொள்ளுமாறு வேண்டியது.
ஹோட்டல் ரண்முத்துவில் நடைபெற்றது பலரும் கலந்து கொண்டனர் ஆனால் அங்கு உள்ளூராட்சித் முறையின் உத்தேச புதிய மாற்றங்களை கொண்ட உத்தேச நகல் கிடைக்காமையால் அது கொண்டுள்ள சாதக பாதக மாற்றங்கள் விவாதிக்க முடியாத நிலை காணப்பட்டது அங்கு உரையாற்றிய கொழும்பு பல்கலை கழக அரசியல் துறை விரிவாக பார்க்க விரிவுரையாளர் கலாநிதி N .S .M . அனீஸ் பெரும்பான்மை கட்சிகள் ஆட்சி அமைக்க வேண்டுமானால் சிறுபான்மை கட்சிகளில் தன்கியிருக்கவேண்டும் என்ற நிலையை மாற்றியமைக்கும் நோக்குடன் இந்த உள்ளூராட்சித் முறையின் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாகவும்
இது தொடர்பில் அரசியல் தலைமையும், புத்திஜீவிகளும் இணைந்து செயல்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் மேலும் அவர் இந்த சட்ட மூலம் பெரும்பான்மை கட்சிகள் ஆட்சி அமைக்க வேண்டுமானால் சிறுபான்மை கட்சிகளில் தன்கியிருக்கவேண்டும் என்ற நிலையை மாற்றியமைக்கும் நோக்குடன்தான் கொண்டுவரப் படுகின்றது என்பதை அண்மையில் இந்த சட்ட மூலத்தை வரைந்த பேராசிரியர் ஒருவரே என்னிடம் உறுதிப் படுத்தினார் இன்நிலையில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இது பற்றி கவனிப்பாரற்றிருப்பது கவலைக்குரியது என்றும் தெரிவித்தார் என்பதுடன் இந்த கலந்துரையாடல் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று அங்கு சுட்டிகாட்டப்பட்டது
இது பற்றி கருத்து தெரிவித்திருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் N.M.அமீன இந்த சட்ட திருத்தத்தில் சிறுபான்மை மக்களுக்கு பாதகமான விடையங்கள் இருப்தாக அறிய முடியவில்லை என்றும் உள்ளூராட்சித் மாகாண சபை அமைச்சர் அதாவுல்லாஹ் சிறுபான்மையினர் நலன்கள் தொடர்பில் அக்கறையுடன் செயல்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது என்றும் தெரிவித்திருத்தார் இந்த சட்ட மூலம் தொடர்பான விசேட கலந்துரையாடலில் இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்த அமைப்பின் தலைவர் இவ்வாறு தெரிவித்தமை இந்த கலந்துரையாடலின் அடுத்த அமர்வை உடன் கேள்விக்குள்ளாகியது அதே போன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் இந்த சட்ட மூலம் தொடர்பான இரண்டாவது கலந்துரையாடலை ஏற்பாடு செய்யவில்லை என்பது குறிபிடத்தக்கது
இதன் பின்னர் இது தொடர்பான எந்த பொது கலந்துரையாடல்களும் முஸ்லிம் தரப்பில் இடம் பெற்றதாக அறியமுடியவில்லை இந்த சட்டமூலத்தை எதிர்ப்பதாக கூறிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் இந்த சட்டமூலம் கிழக்கு மாகாண சபைக்கு வந்தபோது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை அதன் ஊடாக கிழக்கில் அந்த சட்ட மூலம் வெற்றி பெறுவதற்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளது என்றுதான் பார்க்கப்படுகின்றது
இச்சட்ட மூலத்திற்கு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாக வாக்களித்தது இச்சட்டமூலம் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் மூன்று மாகாண சபை உறுப்பினர்களும் இச்சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதாகவும் அறிவித்தது இதே நிலைப்பாட்தைத்தான் தேசிய காங்கிரசும் எடுத்திருந்தது
உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் மற்றும் உள்ளூர் அதிகார சபைகள் விசேட திருத்தச் சட்ட மூலம் ஆகிய உத்தேச சட்டமூலங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 11 முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்,தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, மாற்றுக் கொள்கைகளுக்கான அமைப்பு போன்றவற்றினால் 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன உள்ளூராட்சி தேர்தல் முறை திருத்தசட்ட மூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் உள்ளது
இதேவேளை உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு உட்பட்டது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பாராளுமன்றில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன இச் சட்ட மூலம் நடைமுறைக்கு வருமானால் சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஆபத்துக்கள் குறைவு எனும் வாதம் முன்வைக்கப்பட்டாலும் கூட வடக்குக் கிழக்குக்கு வெளியே சிதறி வாழும் சிறுபான்மை மக்களின் ஒட்டுமொத்த அரசியல் பிரதிநிதித்துவமும் இதன் மூலம் இல்லாதொழிக்கப்படுகிறது என்ற வாதம் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்
உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரச தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார் இன்று அரசுடன் இணைத்து கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த சட்ட மூலம் தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்தவேண்டும்
இந்தச் சட்டமூலத்தின் கீழ் ஓர் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்படுமானால் அங்கு தமிழ் பேசும் இனங்களின் பிரதிநிதித்துவம் என்பது குறைவடையும் அதேவேளை, பெரும்பான்மையின பிரதிநிதித்துவம் என்பது கேட்காமலேயே அதிகரிக்கக் கூடிய வாய்ப்பும் உள்ளது இதன் காரணமாக சிறுபான்மையினராக உள்ள மக்கள் ஒன்றில் பெரும்பான்மைக் கட்சிகளுடன் இணைய வேண்டும். அல்லது தமது தேவைகளுக்காகப் பெரும்பான்மை இனத்தில் தங்கியிருக்க வேண்டும்.
சுருக்கமாகக் கூறப் போனால் இதுதான் உண்மை இதனைத்தான் அரசாங்கம் எதிர்பார்க்கிறது’ என்று விமர்சிக்க படுகின்றதுஇந்த விடையங்கள் தொடர்பில் அரசியல் கட்சிகள் என்பதற்கு அப்பால் முஸ்லிம் சமூகம் பல பொது கலந்துரையாடல்களை நடாத்தவேண்டும் இந்த சாதக பாதக விளைவுகள் ஆராயப்படவேண்டும் முஸ்லிம் சமூகம் இந்த விடையத்தில் கட்சிகளின் நிலைப்பாட்டில் தங்கிருக்கமுடியாது சுயமான ஆய்வுகளை மேட்கொள்ளவேண்டும் என்பது மிகவும் அவசியமானது முஸ்லிம் சமூகம் சார்ந்து இது தொடர்பான கலந்துரையாடல்களை பார்க்கமுடியாத நிலைதான் இன்று காணப்படுகின்றது இந்த ஆரோக்கியமான நிலையாக பார்க்கமுடியாது முஸ்லிம் சமூகம் எத்தனை அமைச்சரவைகளை கொண்டுள்ளது என்பதற்கு அப்பால் எவற்றை முஸ்லிம் சமூகம் சாதிக்கமுடியும் என்பது முக்கியமானது.


No comments:

Post a Comment

المشاركات الشائعة