மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் உள்ள புகையிரத நிலையத்துக்கு அருகில் நீர்க்குமிழிகள் தோன்றுவது தொடர்பில் யாரும் அச்சம்கொள்ள தேவையில்லையென மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்று முதல் ஏறாவூர் புகையிரத நிலையம் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள நிலங்களில் நீர் வெளியேறிவருவது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரி ஏ.எம்.எம்.ஹசீரை தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சந்திரன் பூமியை நெருங்கிவந்தபோது வாயு மண்டலத்தில் ஏற்பட்ட அமுக்க நிலைமை காரணமாக நிலத்தின் கீழ் உள்ள நீர் மட்டத்தில் ஏற்பட்ட உயர்வு காரணமாகவே இந்த நிலையேற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏறாவூர் புகையிரத நிலையம் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள நிலங்களில் நீர் வெளியேறிவருவதுடன் அப்பகுதியில் உள்ள கிணறுகளின் நீர் மட்டமும் உயர்ந்துவருகின்றது.
எனினும் இந்த நிலைமை காரணமாக எதுவித இயற்கை அனர்த்தங்களும் ஏற்படாதெனவும் இது தொடர்பில் கொழும்பு நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஹசீர் தெரிவித்தார்.
thanks: ada derana
No comments:
Post a Comment