Search This Blog

Mar 13, 2011

ஜோடானில் எதிர் பார்க்கப்படும் மாற்றங்கள்: இஹ்வான் தடை தாண்டுமா ?


M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: ஜோடான் மக்கள் ஆர்பாட்டங்களை தொடர்ந்து ஜோடான் மன்னர் அப்துல்லாஹ் II வின் நிர்வாகம் அரசியல் யாப்பு மறு சீரமைப்பு ஏற்படுத்தும்நிலைக்கு வந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிகின்றன இந்த அரசியல் யாப்பு மறு சீரமைப்பு ஜோடானிலும் அரபு இஸ்ரேல் பிராந்தியத்திலும் பாரிய மாற்றங்களுக்கு உட்படும் என்று அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிகாட்டுகின்றனர் ஜோடானில் எகிப்தை போன்று வலுவான அரசியல் எதிர் கட்சியாக அதிலும் ஒரே எதிர் கட்சியாக இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் அரசியல் கட்சியான இஸ்லாமிய நடவடிக்கை முன்னணி-Islamic Action Front (IAF) மட்டும்தான் இருக்கிறது.
அரசியல் யாப்பு மறு சீரமைப்பு இடம்பெற்று தேர்தல் நடத்தப்படுமாக இருந்தால் இந்த இஸ்லாமிய கட்சியின் பலம் மேலும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அரசியல் பிரிவு 2005ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டவாக்க சபைக்கான தேர்தலில் 84ஆசனங்களில் 20 ஆசனங்களை கைப்பற்றி ஏக எதிர் கட்சியாக உள்ளது இவர்கள் ஜோர்டான் இஸ்ரேலுடன் விரிவாக செய்துள்ள உடன்படிக்கையை நீதியற்றது என்று தெரிவித்து வருகின்றனர் இஸ்ரேலுக்கு வலதும் இடதுமான நாடுகளான எகிப்து ஜோர்டான்  ஆகியவற்றில் ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றம் இஸ்ரேல் உருவாக்கியுள்ள பாதுகாப்பு சமநிலையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த போகின்றது இஸ்ரேல் அரசியல் பாதுகாப்பு சமநிலையில் பாதிக்காது இருக்க மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது அதேவேளை ஆயுத பலத்தின் உச்ச நிலையை உயர்த்தவும் அமெரிக்காவுடன் பேசிவருகின்றது.
பிராந்திய பாதுகாப்பு சமநிலையில் பாரிய மாற்றங்களுக்கான தோற்றப்பாடுகள் ஏற்பட்டு வரும் நிலையில் இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உளவு அமைப்புகள் இரவு பகலாக கடுமையாக உழைத்து வருகின்றது அரபு முஸ்லிம் பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் மாற்றம் இஸ்ரேலுக்கு எந்தவகைளும் நண்மையாக அமையாது என்பது அதன் எதிர்பார்பாக உள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் இஹ்வானுல் முஸ்லிமீன் பிராந்தியத்தில் சக்திமிக்க அரசியல் சக்தியாக பிராந்திய அரசியலில் இடம்பெறபோவது இஸ்ரேலின் தூக்கத்தை கலைத்து வருகின்றது இஸ்ரேலின் துணை வெளிநாட்டு அமைச்சர் டன்னி அய்லோன் எகிப்தின் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இஹ்வானுல் முஸ்லிமீன் இருப்பதை இஸ்ரேல் எதிர்க்கும் என்றும் எகிப்தின் எந்தவொரு தேர்தலிலும் அந்த அமைப்பு பங்குகொள்ளவதை தடுக்க தேவையான வகையில் இஸ்ரேல் செயல்படும் என்றும் தெரிவித்திருந்தார்
இதேவேளை இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகள் மொசாடின் தலைவராக இருந்து இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஓய்வு பெற்ற தலைவரான மெய்ர் டொகான் Meir Dagan- இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அரபு முஸ்லிம் உலகின் செல்வாக்கு பெற்றிருக்கும் டாக்டர் யூசுப் அல் கர்ழாவிவயுடன் பேசவேண்டும் என்று தெரிவித்திருந்தார் என்பதும் குறிபிடத்தக்கது துனீசியா, எகிப்து , லிபியா, ஜோர்டான் , அல்ஜீரீயா, யெமன், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் ஏற்பட்டு வரும் மாற்றத்தை இஸ்ரேல் மிகவும் வெறுப்புடனும் அச்சத்துடனும் நோக்குகின்றது
இந்த வகையில் ஜோர்டானும் எகிப்துக்கு அடுத்தபடியான பெரும் அச்சத்தை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தி வருகின்றது ஜோடான் நாடு எகிப்து , சிரியா , பாலஸ்தீன் , இஸ்ரேல், ஈராக் போன்ற நாடுகளால் சூழப்பட்ட ஒரு சிறிய நாடு எகிப்துக்கு அயல் நாடு ஜோடான் மன்னர் அப்துல்லாஹ் II மிகவும் அதிகாரம் கூடியவராக உள்ளபோதும் அங்கு பிரதமர் பாராளுமன்றம் என்ற மட்டுபடுத்தப் பட்ட மக்கள் அதிகார நிறுவனங்கள் உள்ளது சில மாதங்களாக ஜோடனில் பிரதமர் சமீர் ரிபாய் பதவி விலக வேண்டும் என்றும் ஊழல், வேலை இல்லாமை , அதிகரிக்கும் வாழ்க்கை செலவு, பிரதமரை தெரிவு செய்யும் மக்கள் உரிமை போன்றவற்றை மக்கள் பிரச்சினைகளாக முன்வைத்து ஆர்பாட்டங்கள் நடைபெற்றது இதை தொடர்ந்து கடந்த பெப்ரவரி 2 ஆம் திகதி மன்னர் அப்துல்லாஹ் II பிரதமரை பதவி நீக்கி புதிய பிரதமர் மஹ்ரூப் பாஹித் என்பவரை நியமித்து உண்மையான மறு சீரமைப்பு ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
ஆனால் அந்த அறிவிப்பை ஜோடான் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் அரசியல் கட்சியான இஸ்லாமிய நடவடிக்கை முன்னணி-Islamic Action Front (IAF) அமைப்பின் பொதுச் செயலாளர் ஹம்சா மன்சூர் நிராகரித்து தேர்தலின் மூலமான புதிய பிரதமரை தெரிவு செய்யும் அதிகாரம் மக்களுக்கு வழங்கப்படவேண்டும் அந்த அதிகாரத்தை மன்னர் வைத்திருக்க முடியாது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்பட்டங்களை வழிநடத்தும் முக்கியமான சக்தியாக விளங்கினார் இதை தொடர்ந்து ஜோர்டானில் எதிர்பார்க்க பட்ட மாற்றங்கள் வரும் காலம் அன்மிதுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் இந்த மாற்றங்களின் பிரதான சக்தியாக இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பே பார்க்கப்படுகின்றது
1989ஆம் ஆண்டு வரை எந்த காட்சிகளும் இயக்கங்களும் உருவாக மன்னர் அனுமதிக்கவில்லை 1989 இல் கொண்டுவரப்பட்ட அரசியல் சட்ட திருத்தங்களின் ஊடாக 30அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் உருவாக வழிவகுத்தது ,பல கட்சிகள் உருவாக்கப் பட்டாலும் Islamic Action Front (IAF) மட்டும் சட்டவாக்க சபையில் பிரதான பங்காற்றியுள்ளது Islamic Action Front (IAF) என்பது 1992 ஆம் ஆண்டு ஜோடானில் உருவாக்கப்பட்ட இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அரசியல் பிரிவு இந்த அமைப்பு 2005ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டவாக்க சபைக்கான தேர்தலில் 84ஆசனங்களில் 20 ஆசனங்களை கைப்பற்றியது அந்த தேர்தலில் வேறு எந்த அரசியல் கட்சியும் எந்தவொரு ஆசனத்தையும் பெறவில்லை ஏனைய 64 ஆசனங்களும் கட்சி சாராதவர்களினால் வெற்றிகொள்ளப்பட்டது
இந்த இஸ்லாமிய சக்தியின் அரசியல் அதிகாரத்தை இஸ்ரேல் ஜனநாயக வழிகளால் வந்து கொண்டிருக்கும் சர்வதேச பயங்கரவாதம் என்று உலகிற்கு போதிக்க தேவையான எல்லா முயற்சிகளையும் ஆரபித்து செய்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிகின்றனர்
அதேவேளை இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்புடன் சர்வதேச நாடுகள் கண்டிப்பாக பேசவேண்டும் என்று அவுஸ்ரேலியா வெளிநாட்டமைச்சர் கெவின் ருட் தெரிவித்துள்ளார்  பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமெரோன் நான் எகிப்தின் அனைத்து எதிர்த்தரப்புடன் பேசுவேன் ஆனால் இஹ்வானுல் முஸ்லிமீன் அரசியல் அமைப்புடன் பேசமாட்டேன் என்ற அவரின் பிடிவாதமான நிலைபாட்டை தான் நேரடியாக எதிர்பதாகவும் கெவின் ருட் தெரிவித்துள்ளார் .
மறுதரப்பில் இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான டாக்டர் முஹமத் பெல்டஜி ஐரோபிய பாராளுமன்றத்தின் முன்னாள் தலைவரை சந்தித்து வரும் காலங்களில் மேற்குலகுடன் இஹ்வானுல் முஸ்லிமூன் தொடர்புகளை ஏற்படுத்துவது தொடர்பான எண்ணத்தை வெளிப்படுத்தவுள்ளார் என்று தகவகள் தெரிவித்தன
இந்த சாவல்களை முறியடிக்க இஹ்வானுல் முஸ்லிமீன் எந்த ராஜதந்திரத்தை கையாளுகின்றது என்பதுதான் அதன் தடைகள் தாண்டிய முனேற்றத்தை உறுதிப்படுத்தும் என்பதாக நோக்கபடுகின்றது.
இது தொடர்பான எமது முந்திய கட்டுரை அரசியல் ஆய்வாளர்- M.ஷாமில் முஹம்மட்

ஜோடான் மன்னர் அரசு அறிவித்துள்ளது அரசியல் பொறியா அல்லது உண்மையான மறு சீரமைப்பா ?


No comments:

Post a Comment

المشاركات الشائعة