லிபியாவின் மேற்கு ஆயுத மோதல்கள் இடம்பெற்று வருவதாக் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன கடாபி லிபிய தலைநகரானதிர்போலியில் கடாபிக்கு விசுவாசமான இராணுவமும் நிலை கொண்டுள்ளது அதேவேளை கிழக்கு பகுதியில் பல ஆயுத கிடங்குகள் விமானம் மூலம் தாக்கப்பட்டுள்ளது , மேற்கு பகுதியான அஸ் சவியாஹ் என்ற திரிபோலிக்கு 50 கீ.மீ தூரத்திலுள்ள பிரதேசத்திலும் மிஸ்ரதா என்ற திரிபோலிக்கு 200 கீ.மீ தூரத்திலுள்ள பிரதேசத்திலும் கடாபிக்கு விசுவாசமான படைகளின் விமான தாக்குதல்கள் இடம்பெறுள்ளதுடன் துப்பாக்கி மோதலும் இடம்பெற்று வருகின்றது கடாபி தொடராக பல நகரங்களை இழந்தபோதும் திர்போலியை சூழவுள்ள பிரதேசங்களை தற்போதும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுள்ளதாக வேறு செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது ஏற்பட்டுவரும் கள மாற்றங்கள் பாரிய மோதல் ஒன்றுக்கு வழிசமைக்கும் என்று லிபிய மக்கள் தெரிவித்துள்ளனர் கடாபி சர்வதேச செய்தி ஊடகமான CBS க்கு வழங்கியுள்ள நேர்காணலில் கடாபியை மக்கள் விரும்புவதாகவும் தான் பதவி விலகபோவதில்லை என்றும் தனக்காக மக்கள் மரணிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் விரிவாக
உங்களை விரும்பும் மக்கள் ஏன் கிளர்ச்சியில் ஈடுபடுகின்றனர் என்று கேட்கப்பட்டபோது அது அல் காயிதா, அது அல் காயிதா- அல் கைதா – வின் வேலை அது மக்களல்ல என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கடை படை யுத்த கப்பல்கள் , மற்றும் விமானபடையின் விமானங்கள லிபியாவுக்கு அண்மையில் கொண்டு நிறுத்தபட்டுள்ளது அதேவேளை பிரிட்டன் உட்பட மேற்கு நாடுகள் கடாபியின் கையை விட்டு நழுவிய பகுதிகளுக்கு உதவிகளை விமானங்கள் மூலம் அனுப்பதயாராகிவருகின்றனவாம் ஏற்கனவே பிரான்ஸ் பென்காசியில் இரண்டு விமானங்களை மருத்துவ மற்றும் அவரச உதவிகளுடன் தரையிரக்கியுள்ளது, அமெரிக்க ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு செயலாளர் கிலாரி கிளிங்டன் கடாபி உடனடியாக பதவி விலகவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்துரைத்துள்ள அமெரிக்கா பாதுகாப்பு பெண்டகன் அதிகாரி அமெரிக்க துருப்புகள் லிபியாவுக்கு அண்மையில் நகரத்தப்பட்டுள்ளதாகவும் அதேவேளை அமெரிக்க பாதுகாப்பு தலைமையகத்தில் லிபியாவுக்கான திட்டம் தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார் இதேவேளை சர்வதேச இஸ்லாமிய இயக்கங்களான இஹ்வானுல் முஸ்லிமீன், ஹிஸ்புத் தஹ்ரீர் ஆகியன மேற்கு நாடுகளின் தலையிட்டை எதிர்த்து வருகின்றது மேற்கு நாடுகள் தலையிட்டால் லிபியாவின் நிலை மேலும் மோசமடையும் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் மேற்குலகம் லிபியாவில் எந்த மாதிரியை கையாளும் ஆப்கான்மாதிரியா ? அல்லது துனூசியா மற்றும் எகிப்தின் மாதிரியா ?
No comments:
Post a Comment