ஏ.அப்துல்லாஹ்: இலங்கையில் முப்பதாண்டு கால பயங்கரவாத போர் முடிவுற்ற மூன்றாவது ஆண்டு நிறைவு நாள் இம்மாதம் 19ஆம் திகதியாகும். அதனை முன்னிட்டு பாதுகாப்புச் செயலாளர் Business Today ஆங்கில இதழின் உதேனி அமரசிங்கவுக்கு அளித்த பேட்டியில் ஒருபகுதி
பேட்டி: இன்று குறித்த சிலர் சமூகங்கள் மத்தியில் பிளவுகளை தூண்டி விடுகின்றனர் .அத்தகைய நடவடிக்கைகள் அவசியமற்றவை. நாம் எந்த இனம் ,மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாம் கண்டிப்பாக நினைவில் கொள்ளவேண்டியது 30 ஆண்டுகால யுத்தத்தை அனுபவித்திருக்கிறோம் அதேபோன்று ஒன்று மீண்டும் ஏற்பட நாங்கள் சந்தர்ப்பம் வழங்கக் கூடாது என்பதுதான் .
இது மிகவும் முக்கியமானது . மக்கள் வதந்திகளை நம்பக் கூடாது. இன்று வதந்திகள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த தேவையுள்ளவர்களினால் உருவாக்கப்படுகிறது. அவற்றை மக்கள் நம்பக் கூடாது மக்கள் அவ்வாறான சந்தர்பங்கள் ஏற்படுவதற்கு அனுமதிக்கக் கூடாது .
இந்த நாட்டில் நீ ஒரு முஸ்லிமாக ,தமிழனாக , பேகராக ,சிங்களவனாக இருந்தாலும் நீ ஒரு இலங்கையன். இதுதான் மிக பிரதான விடயம். நீங்கள் அனாவசியமான பிரச்சினைகளில் ஈடுபடக் கூடாது .இனம் , மதம் அது முக்கியமானது அல்ல .நீ ஒரு இலங்கையன் என்பதுதான் முக்கியமானது .
இன்று நாங்கள் அதற்கான சந்தர்பத்தை பெற்றுள்ளோம் அதற்கான சந்தர்பம் அனைவருக்கும் இருக்கிறது . அது உண்மை இல்லை என்று யாரும் கூறமுடியாது கொழும்பை அல்லது நாட்டின் ஏனைய பகுதிகளை எடுத்துப் பாருங்கள் அங்கு அதிகமான முன்னணி தமிழ் வர்த்தகர்களை காணலாம் , அதேபோன்று தமிழ்தொழில்சார் நிபுணர்கள் , மருத்துவர்கள் , பொறியலாளர்கள் ,சட்டத்தரணிகள் , கட்டடநிர்மாணிகள் என்பவர்களை காணலாம். யாருக்காவது சொல்லமுடியுமா அவர்களுக்கு சந்தர்ப்பம் வாய்ப்பு வழங்கப் படவில்லை என்று ? – அவர்களுக்கு காணிகளை எங்குவேண்டுமானாலும் வாங்க முடியும் வாங்குவதற்கு எந்த தடைகளும் இல்லை. அவர்கள் -தமிழர்கள் – நாட்டின் முழு பகுதியிலும் வாழுகிறார்கள் .
முஸ்லிம் சமூகத்தை பார்த்தாலும் அவர்கள் வர்த்தகம் செய்ய சுதந்திரமாக விடப் பட்டுள்ளார்கள் . இந்த நாட்டில் அதிகமான முன்னணி முஸ்லிம் வர்த்தகர்கள் இருகின்றார்கள் என்ற உண்மை. அவர்களுக்கு எந்த தடையும் இல்லை என்பதற்கு ஆதாரம் என்று தெரிவித்துள்ளார் .
அந்த பேட்டியின் முழுமையான ஆங்கில வடிவத்தை பார்க்க
No comments:
Post a Comment