கடந்த 25 திகதி தொடக்கம் எகிப்து நாடு முழுவதும் மிக பாரிய ஆர்பாட்டம் தொடங்கி நடைபெற்றுவருகின்றது. போலீஸ் காவல் நிலையங்கள் தீவைக்கப்பட்டுள்ளது தொடரும் ஆர்பாட்டம் நாடு முழுவதிலுமுள்ள சிறிய, பெரிய நகரங்கள் என்ற வித்தியாசமின்றி நடைபெற்றுள்ளதுடன் இரவு வேலைகளிலும் பல நகரங்களில் தொடர்ந்தும் மக்கள் ஆர்பாட்டயங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று வெளிக் கிழமை ஜும்மாஹ் தொழுகையின் பின்னர் மிக பாரிய ஆர்பாட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்டுள்ளது தொடந்து நடைபெற்று ஆர்பாட்டங்களை கலைக்க ஹுஸ்னி முபாரக் அரசு சுவாசத்தடுப்பு புகை குண்டு, ரப்பர் துப்பாக்கி குண்டுகள் , குண்டான் தடிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தியும் அளவற்ற கைதுகளை செய்தும் வருகின்றது.
இந்த ஆர்ப்பாட்டங்களில் தாக்குதல்களில் ஒரு போலீஸ் சிப்பாய் உட்டபட ஐந்து பேர் கொல்லபட்டுள்ளனர். இதேவேளை எகிப்து ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் அரசியல் வாரிசாகக் கருதப்படும் அவரது மகன் கமால் முபாரக் குடும்பத்துடன் பிரிட்டனுக்குச் சென்றிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன ஆனால் அவர் நாட்டில் இருப்பதாக வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment