Search This Blog

Jan 4, 2011

ஆப்கானில் இந்த வருடம் கொல்லப்பட்ட நேட்டோ ராணுவத்தினரின் எண்ணிக்கை 700


பிரிட்டீஷ் ராணுவத்தினர் உட்பட தெற்கு ஆப்கானில் இரண்டு ராணுவத்தினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இந்த ஆண்டு கொல்லப்பட்ட நேட்டோ ராணுவத்தினரின் எண்ணிக்கை 700 ஆக உயர்ந்துள்ளது.

10-வது ஆண்டை நோக்கிச் செல்லும் ஆப்கான் ஆக்கிரமிப்புப் போரில் அந்நிய ஆக்கிரமிப்பு படையினருக்கு கடுமையான பதிலடி கிடத்த ஆண்டு 2010 ஆகும்.

கடந்த ஆண்டு 504 நேட்டோ ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அதிகரித்து வரும் தாலிபான்களின் தாக்குதலை சமாளிக்க ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட படையினர் ஆப்கான் போரில் ஈடுபடுத்தப்பட்ட பிறகும் நேட்டோ ராணுவத்தினரால் எந்த இலக்கையும் அடைய முடியவில்லை.

2412 போரில் தொடர்பில்லாத அப்பாவி மக்கள் ராணுவத்தினர் மற்றும் போராளிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டது நேட்டோவின் குண்டுவீச்சில் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

No comments:

Post a Comment

المشاركات الشائعة