Search This Blog

Jan 10, 2011

பொருளாதார நெருக்கடி:பாதுகாப்பு பட்ஜெட்டை வெட்டிக் குறைக்கும் அமெரிக்கா

Dollar Mushroom by GrapefruitTea
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அமெரிக்கா பாதுகாப்பு பட்ஜெட்டை பெருமளவில் குறைக்கிறது.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 7800 கோடி டாலர் குறைக்க தீர்மானித்ததாக பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. தரைப்படை, கப்பற்படை ஆகியவற்றில் படைவீரர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் கோடிக்கணக்கான டாலரை செலவுச் செய்த அமெரிக்கா கடந்த 10 ஆண்டுகளுக்கிடையே முதன்முறையாக பாதுகாப்புச் செலவை வெட்டிக் குறைத்துள்ளது.

எல்லாத் துறைகளிலும் செலவை குறைக்கும் ஒரு பகுதியாகத்தான் பாதுகாப்புத்துறையிலும் செலவு குறைக்கப்பட்டுள்ளது என பாதுகாப்புத்துறை செயலர் ராபர்ட் கேட்ஸ் தெரிவிக்கிறார்.

மிக அத்தியாவசியமான காரியங்களில் மட்டும் பாதுகாப்புச் செலவை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால், சர்வதேச அளவில் அமெரிக்கா நடத்தும் ராணுவ நடவடிக்கைகள் தொடரும் என ராப்டர்கேட்ஸ் தெரிவிக்கிறார்.

2015 ஆம் ஆண்டு தரைப்படை, கப்பற்படை வீரர்களில் 45 ஆயிரம் பேரை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 600 கோடி டாலர் மிச்சமாகும். அதேவேளையில், விமானப்படையில் 3400 கோடி டாலர் செலவுக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் இரண்டாக செயல்படும் ஏர் ஆபரேசன் மையங்கள் ஒன்றாக்கப்படும். அடுத்த ஐந்து வருடங்களில் தரைப்படையில் 2900 கோடி டாலரும், கப்பற்படையில் 3500 கோடி டாலரும் செலவுக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

المشاركات الشائعة