Search This Blog

Jan 23, 2011

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அரசியலிலும் களமிறங்குகின்றது !



இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி எதிர்வரும் உள்ளூராச்சி சபைகளுக்கான தேர்தலில் முதல் முறையாக அரசியல் களம் இறங்க தீர்மானித்துள்ளது இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 50ஆண்டு கால வரலாற்றில் இந்த தீர்மானம் ஒரு புதிய பாதையில் பயணிக்க தயாராகியுள்ளதை காட்டுவதாக அமைந்துள்ளது மட்டுமல்லாது இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் ஒரு இஸ்லாமிய இயக்கம் அரசியலில் குதிப்பது இதுதான் முதற்தடவையாகும்.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டம் கிண்ணியா நகர சபைக்கான தேர்தல் களத்தில் சுயேச்சை குழுவாக குதிக்க முடிவு செய்துள்ளது  திருகோணமலை மாவட்டம் இலங்கைக்கு மட்டுமின்றி சர்வதேசத்தின் 
கண்களுக்கும் பிரதான பிரதேசமாக விளங்கும் பகுதி, திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்களின் தொகை 15,1692 (45.4%) ஆகவும் தமிழ் மக்கள்தொகை 95,652 – (28.6%) ஆகவும் சிங்கள மக்கள்தொகை 84,766 -(25.4%) ஆகவும் பதிவாகியுள்ளது.

கிழக்கு இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரமாக கிண்ணியா அமைத்துள்ளது . மாவட்டத்தின் பிரதான நகரமான திருகோணமலைப் நகரில் இருந்து சுமார் 20 கி.மி தூரத்திலும்  தலைநகரான கொழும்பில் இருந்து சுமார் 240 கி.மி தொலைவிலும் இந்த நகரம் அமைத்துள்ளது.
நகரத்தின் 35,000 சனத் தொகையில் பெரும்பாண்மையினராக முஸ்லீம் இனத்தவரும் குறைந்தளவில் தமிழர்களும், சிங்களவரும் வசித்து வருகின்றனர். இலங்கையின் அதிக நீளமான மேம் பாலம் இந்த நகரத்திலேயே கடந்த வருடம் நிர்மாணிக்கபட்டுள்ளது இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அடுத்த அரசியல் களம் புத்தளமா? என்று வினா எழுப்பப்பட்டுள்ளது.
News: Lankamuslim

No comments:

Post a Comment

المشاركات الشائعة