21/02/201
இஸ்லாமிய பொருளாதாரத் துறையைக் குறித்த செய்திகளும், சிறப்புகளும் அடங்கிய உலகின் முதல் மின்னணு பத்திரிகை வெளியாகியுள்ளது.
உலகின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பத்திரிகையாளர்கள் ‘தி இஸ்லாமிக் க்ளோப்’ என்ற இணையதள பத்திரிகையின் பின்னணியில் செயல்படுகின்றனர்.
வாரந்தோறும் வெளிவரும் இஸ்லாமி க்ளோப் மின்னணு பத்திரிகை ஐபாட், ஐஃபோன், ப்ளாக்பெர்ரி, கின்டில் ஆகியவற்றிலும் பார்க்கலாம். உயர்ந்த தரமும், சுதந்திரமான செய்திகளும், கட்டுரைகளும் தி இஸ்லாமிக் க்ளோப் அளிக்கும் என அதன் ஸ்தாபகர்கள் தெரிவிக்கின்றனர்.
1950 ஆம் ஆண்டு பத்திரிகைகளை நினைவுக்கூறும் விதமாக இப்பத்திரிகை வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
தற்போது இத்துறையில் செயல்படுபவர்கள் விளம்பரத்தை அடிப்படையாகக் கொண்டு செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஆனால் தி இஸ்லாமிக் குளோப் பத்திரிகை பாரபட்சமற்ற உண்மையான செய்திகளை வெளியிடும் என தி இஸ்லாமிக் க்ளோப் பத்திரிகையின் ஸ்தாபகரும், எடிட்டருமான Paul McNamara பால் மக்னமாரா தெரிவித்தார்.
ஈகிள் மவுண்ட் மீடியா வெளியிடும் இப்பத்திரிகை http://www.theislamicglobe.com/ என்ற இணையதளத்திலிருந்து தர இறக்கம் (Download) செய்யலாம்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
No comments:
Post a Comment