எகிப்தில் மக்கள் புரட்சி பற்றி யூசுப் இஸ்லாம் ஒரு பாடலை எழுதியுள்ளார் அந்த பாடல் தற்போது அவரின் லண்டன் ஸ்டுடியோவில் பாடலாக தயாரிக்கப்பட்டுவருகின்றது “My People” என்ற பெயரில் அந்த பாடல் தயாராகின்றது என்று அவரின் இணையத்தளம் தெரிவித்துள்ளது அதன் தகவலில் எகிப்திய மக்களின் அடக்குமுறைக்கு எதிரான விடுதலை மற்றும் சுதந்திர தாகத்தால் உந்தப்பட்ட பாடகர் யூசுப் இஸ்லாம் “My People” என்ற பாடலை தயாரித்து எகிப்திய மக்கள் எழுச்சிக்கு அதை சமர்பிக்கவுள்ளார் அந்த பாடல் தயாரானவுடன் அவரின் இணையத்தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்யமுடியும் என்று அறிவித்துள்ளது
யூசுப் இஸ்லாம் 1978 ஆம் ஆண்டு இஸ்லாத்தை தழுவிகொண்ட ஒரு ஆங்கில பாடகர், எழுத்தாளர் இவர் Cat Stevens என்ற பெயரால் நன்கு அறியப்பட்டவர் 1970 தொடக்கம் 1978 வரை பிரபல்யமான பாடகராக அறியப்பட்டவர் பல அல்பங்களை உருவாக்கியுள்ளார் இவர் மொரோகோ சென்றபோது இஸ்லாத்தை அறியும் ஆர்வம் ஏற்பட்டு 1978 ஆம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுகொண்டார் விரிவாகஅதன் பின்னார் தனது இசை துறை நடவடிக்கைகளை நிறுத்தி கொண்ட இவர் பின்னர் 1990 களில் இருந்து மீண்டும் பாடிவருகின்றார் ஆரம்பத்தில் இசை கருவிகள் இன்றி பாடிவந்தார் தற்போது இசை கருவிகளை பயன்படுத்தி பாடிவருகின்றார் தற்போது உருவாக்கப்படும் எகிப்து பாடல் இசையுடனா இல்லையா என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை இங்கு கிளிக் செய்து அவரின் இணையத்தளத்துக்கு சென்று அந்த பாடல் தயாரானவுடன் பதிவிறக்கம் செய்யமுடியும்
No comments:
Post a Comment