துனீசிய ஜனாதிபதியாக இருந்த ஜைனுல் ஆபிதீன் பின் அலி மக்களால் விரட்டப்பட்ட பின்னர் துனிசியாவில் ஏற்படுத்தப் பட்டுள்ளஇடைக்கால தேசிய அரசாங்கத்தில் நாட்டை விட்டும் மக்களால் விரட்டப்பட்ட துனீசிய ஜனாதிபதி ஜைனுல் ஆபிதீன் பின் அலியின் நிர்வாகத்தில் இடம்பெற்ற பிரதமரான முஹம்மத் அல் -கானநொசி – Mohamed al-Ghannouchi- பிரதமாராக பதவி வகித்தார் இவருக்கு எதிரான மக்கள் ஆர்பாட்டங்கள் தொடர்ந்தன இதன் விளைவாக தான் பதவி விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்
துனீசிய ஜனாதிபதி ஜைனுல் ஆபிதீன் பின் அலி நாட்டை விட்டு தப்பி சென்றபின்னார் பிரதமர் பதவிவகித்கித்த அல் -கானநொசி நடத்தப்பட்ட அரசியல் மாநாட்டின் பின்னர் எதிர்கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் இடைக்கால அரசாங்கமாக செயல்படும், 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார் விரிவாக பார்க்க இந்த அறிவிப்பை ஆர்ப்பாட்டகாரர்கள் பலர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுடன் விரட்டப்பட்ட துனீசிய ஜனாதிபதி ஜைனுல் ஆபிதீன் பின் அலியின் கட்சியும் தேசிய இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதை எதிர்த்து ஆரப்பாடங்களில் ஈடுபட்டு வந்தனர்
இந்த நிலையில் டொக்டர் யூசுப் அல் கரழாவி அல் -கானநொசியினால் புதிய தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டதைதான் விரும்பவில்லை என்றும் அல் -கானநொசியியை பிரதமராக கொண்டடிருந்த கடந்த அரசாங்கம் பேரவலம் மிக்கது என்று தெரிவித்துடன் கடந்த அரசாங்கத்தின் எந்த உறுப்பினரையும் உள்ளடக்காத இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறும் அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பாக அவர் விடுத்திருந்த அழைப்பில் பல சிலைகளையும், சர்வாதிகாரியான பெரிய சிலையையும் வீழ்த்திய துனீசிய மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்ததுடன் கடந்த அரசாங்கத்தில் இருக்கும் அனைந்து எச்சசொச்சங்களையும் வீழ்த்திவிடுமாரும் அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது
No comments:
Post a Comment