Search This Blog

Feb 24, 2011

வடமாகாணத்தில் உறங்கும் முஸ்லிம் வாக்காளர் தொகை அதிகரிக்கும் ஆபத்து !



வடமாகாண முஸ்லிம் வாக்களர்கள் தமது வாக்குரிமையை உரிய முறையில் பயன்படுத்துவார்களா ? என்பது கேள்வியாகியுள்ளது காரணம் இந்த முறை உள்லூராச்சி தேர்தல்களில் கொத்தணி வாக்கு சாவடிகள் ஏற்படுத்தப் படமாட்டாது என்று தெரிகின்றது இதன்காரணமாக கடந்த தேர்தல்கள் போன்று  இந்த முறை ஏனைய பிரதேசங்களில் வாழும்  வடமாகாண  மக்கள்    200 தொடக்கம் 400 கி மீ பிரயாணம் செய்து இயல்பாக வாக்குரிமையை பயன்படுத்துவார்களா ? என்பதும் தொடர்ந்தும் இவர்களின் ஒரு சாராரின் வாக்கு பலம் பயன்படுதபடாமல் போகும் ஆபத்தான நிலையும் தோன்றியுள்ளது இன்றைய நிலையில் வடமாகாண முஸ்லிம்களின் வாக்கு வங்கி மூன்று பிரிவாக உடைந்துள்ளது என்பது பற்றி இந்த கட்டுரையில் ஆராய்வோம்
வடமாகணத்தில் இருந்து 1990 ஆம் ஆண்டு புலிகளினால் வெளியேற்றபட்ட முஸ்லிம்கள்  இலங்கையின் பல பகுதிகள் சிதறியும்  புத்தளத்தில் செறிவாகவும் கடந்த இருபது ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர் இவர்கள் வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் இவர்கள் வடமாகணதுக்கு வெளியே 5 பாராளுமன்ற தேர்தல்களை சந்திதுள்ளர்கள் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேத்தலில் வடமாகாண முஸ்லிம்களுக்கு முதல் முறையாக கொத்தணி  வாக்கு சாவடிகளை அரசாங்கம் ஏற்பாடு செய்து கொடுத்தது இந்த கொத்தணி வாக்கு சாவடிகளை பயன்படுத்தி வடமாகாண முஸ்லிம் இரண்டு பாராளுமன்ற ஆசனங்களை வென்றார்கள் இதில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் இல்யாஸ் யாழ்ப்பாண முஸ்லிம்களால் தெரிவு செய்யப்பட்டார்  இவர் புத்தளத்தை சேர்ந்தவர் என்பது குறிபிடத்தக்கது அதேபோன்று வன்னி மாவட்டத்தில்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.எஸ்.எம். அபூபக்கர் வன்னி மாவட்ட முஸ்லிம்களால் தெரிவு செய்யபட்டார் இவர் வன்னி மாவட்டத்தில் பிறந்த தமிழ் இனத்தை சேர்ந்தவர் என்பதும் பின்னர் இஸ்லாத்தை ஏற்றுகொண்டதுடன்  இவர் முஸ்லிம்களின் பாராளுமன்ற பிரதிநிதியாக முஸ்லிம்களால் தெரிவு செய்யபட்டார்  என்பதும்  குறிபிடத்தக்கது .
அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற  நான்கு பாராளுமன்ற  தேர்தல்களிலும் , மற்றும் உள்ளுராச்சி , மாகாண சபைகள் தேர்தல்களிலும் வடமாகாண முஸ்லிம்கள்   கொத்தணி  வாக்கு சாவடிகளை பயன்படுத்து பிரதிநிதிகளை தெரிவு செய்து வந்துள்ளனர்  கடைசியாக கடந்த வருடம் 2010 ஆம் ஆண்டு  இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் கொத்தணி சாவடி  முறை நடைமுறையில் இருந்தது என்பதுடன் வன்னி மாவட்ட முஸ்லிம்கள் மூன்று முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளை பெற்றுகொண்டார்கள் ஆனால் தற்போது இடம்பெற்றுவரும் மாற்றங்கள வடமாகாண முஸ்லிம்களின் தேர்தல்கள் மூலம் பெறப்படும் பிரதிநிதுவதுக்கு பெரும் சவாலாக வளர்ந்து வருகின்றது
இலங்கையில் இனி நடைபெறபோகும் எந்த தேர்தல்களிலும் கொத்தணி வாக்கு சாவடிகள் இடம்பெறாது என்பது தெரிகின்றது அப்படி எதிர் வரும் உள்ளுராச்சி தேர்தல்களில் அவை இடம்பெற்றாலும் அது தற்காலிகமானது இந்த  முறை மட்டும்தான் அவை இடம்பெறபோகின்றது,   சில மாதங்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையாளர் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தம்மை  தமது நிரந்தர இடங்களில் பதிவு செய்துகொள்ளவேண்டும் அதாவது தமது சொந்த பிரதேசத்தில் அல்லது தாம் வசித்து வரும் பிரதேசத்தில் தம்தை அந்த பிரதேச வாக்காளராக பதிந்து கொள்ளவேண்டும்  தவறினால்  வாக்குரிமையை இலங்கும் நிலை ஏற்படலாம் என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு ஏற்ப புத்தளம் , நீர் கொழும்பு , கொழும்பு , கண்டி , மாத்தளை போன்ற பகுதிகளில் வாழ்ந்து வரும் அதிகமான வடமாகாண முஸ்லிம்கள்  தம்மை தாம்  வாழும் பிரதேசதங்களில் பதிவு செய்துள்ளனர் இந்த அறிவிப்புக்கு முன்பும் பல குடும்பங்கள தாம்  வாழும் பிரதேசத்தில் பதிவுகளை செய்துள்ளனர்  இன்னும் பலர் தமது சொந்த பிரதேசங்களுக்கு சென்று பதிவுகளை மேற்கொண்டுள்ளனர் எனினும் தமது சொந்த பிரதேசங்களுக்கு திரும்பி சென்றவர்களில் அதிகமானவர்கள் போதுமான மீள் குடியேற்ற ஏற்பாடுகள் இல்லாமையால் பதிவுகளை மேற்கொண்ட பின்னர் திரும்பி சென்றுள்ளனர் இந்த தேர்தல் பதிவு நிலை தேர்தல்களில் வடமாகாண முஸ்லிம்களை  மூன்று   பிரிவுகளாக பிரித்து  விட்டுள்ளது  ஒன்று தம்மை தாம் கடந்த 20 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பிரதேசங்களின வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டவர்கள் இவர்கள் இனி அந்தபிரதேசங்களின் வாக்காளர்களாக மட்டும் பார்க்கப்படுவர் இதில் குறிப்பாக புத்தளம் பிரதேசத்தில் வாழந்து வரும் முஸ்லிம்கள்  புத்தள மாவட்ட வாகாளர்களாக தம்மை பதவு செய்துள்ளனர் இந்த நிலை வடமாகாணம் என்ற பார்வையில் வடமாகாண முஸ்லிம் வாக்கு வங்கிக்கு பாதிப்புக்களை  ஏற்படுத்தினாலும் புத்தளம் முஸ்லிம் வாக்கு வங்கி பலம் பெறுகின்றது இது இன்னும் பல அனுகூலங்களை தரக்கூடியது என்பதுடன் இந்த விடையம்  தனியாக ஆராயப்படவேண்டியது,
இரண்டாவது பிரிவினர் வடமாகாணத்தின் தமது சொந்த பிரதேசகளில் சென்று மீள் குடியேறியுள்ளவர்கள் இவர்கள் வடமாகணத்தில் வசிப்பதுடன் வடமாகாண தேர்தல் பதிவுகளையும் செய்துள்ளனர்  இவர்கள் மற்றைய  இரண்டு பிரிவினருடன் ஒப்பிடும்போது சிறிய தொகையினர் இவர்கள்தான் வடமாகான முஸ்லிம்களின் சமூக கட்டமைப்புகளை பாதுகாத்து வருபவர்கள்   மூன்றாவது பிரிவினர் வடமாகணத்தில்  மீள் குடியேறும் நோக்குடன் சென்றபோதும் போதுமான வசதிகள்இல்லாமையால்  தேர்தல்  பதிவுகளை அங்கு மேற்கொண்ட பின்னர் மீள் குடியேற முடியாது மீண்டும் திரும்பி வந்தவர்கள் என்று மூன்று பிரிவாக வடமாகாண முஸ்லிம்களின் வாக்கு வங்கி பிரிந்துள்ளது   தற்போது நடைபெறபோகும் தேர்தல்களில் தாம் வாழும் பிரதேசங்களில் தம்மை பதிவு செய்துகொண்டவர்கள் அந்த பிரதேசத்தில் அந்த பிரதேச மக்களுடன் வாக்களிப்பர் உதாரணமாக புத்தளத்தில் தம்மை பதிவு   செய்து  கொண்டவர்கள் புத்தளம் வாக்காளர்களாக மாறிவிட்டனர் அடுத்து  தமது சொந்த பிரதேசத்தில் மீள்குடியேறி அங்கு வாழந்து வரும் மக்கள் அங்கு தமது வாக்குகளை பயன்படுத்துவர்,    மூன்றாவது பிரிவினர் பதிவுகளை வடமாகாணத்தில் மேற்கொண்ட பின்னர் வேறு பிரதேசங்களில் வசிப்பவர்கள் இவர்கள் வாக்குகள் வடமாகாண முஸ்லிம் வாக்கு வங்கிக்குரியது என்பதும்  கொத்தணி வாக்கு சாவடிகள் இல்லாமையால்  இவர்கள் தற்போது வாழும் இடங்களில் இருந்து வாக்களிக்க பலர் 200 கி.மி, சிலர் 300 கி.மி , இன்னும்சிலர் 400 கி.மி களும் பிராயணம் செய்து வாக்களிக்க வேண்டியுள்ளது.
தற்போது இவர்கள் வாக்களிக்க வடமாகணம் செல்ல பிரயாண ஏற்பாடுகளை செய்து தருமாறு முஸ்லிம் கட்சிகள் தேர்தல் ஆணையாளரை கோரிவருகின்றது என்பதுடன் குறித்த கட்சிகள் பல வாக்குறுதிகளை வழங்கி ஆர்வமூட்டி தற்காலிகமாக இவர்களை அழைத்து செல்ல முடியும் ஆனால் அது எப்போதும் இலகுவாக அமைந்து விடாது என்பதுடன் தாமும் வாழும் பிரதேசங்களில் வாக்களிக்கும் இலகு தன்மைக்கு நிகராக அமையாது இது வாக்குகளை பயன்படுத்துவதில் மந்த நிலையை கண்டிப்பாக ஏற்படுத்தும்  கொத்தணி சாவடி முறை நடைமுறையில் இருந்த போது இலங்கையில் ஒரு தூரக் கிராமத்தில் இருக்கும் வடமாகாண  வாக்காளர் ஒருவருக்காக  இரண்டு போலீஸ் அதிகாரிகளும் ஒரு தேர்தல் வாக்கு பெட்டியும் அரசாங்கத்தால் அனுப்பப்பட்டது உதாரணமாக மாத்தளை உக்குவளை ரைத்தலாவளை கிராமத்தில் வசிக்கும் முன்னாள் யாழ்ப்பாண மாநகர சபை மேயர் அபூசாலி ஹாஜியாரின்   மனைவி 83 வயது அவர் வாக்களிக்க  இரண்டு போலீஸ் அதிகாரிகளும் ஒரு தேர்தல் வாக்கு பெட்டியும் வழங்கப் பட்டுவந்தது என்பதை தற்போதைய நிலையுடன் ஒப்பிட்டால் அவர் 83 வதில் 293 கி மீ பிரயாணம் செய்து வாக்களிக்க வேண்டும் இது நிச்சயமாக வடமாகாண முஸ்லிம் வாக்காளர்களில் உறங்கும் வாக்காளர் பிரிவு ஒன்றை உருவாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
புத்தளத்தில் வாழும் வடமாகாண முஸ்லிம் வாக்களர்கள் பலர் தம்மை புத்தள வாக்களர்களாக பதிவு செய்திருப்பது நான் மேற்சொன்னது போன்று முஸ்லிம்களுக்கு பல அனுகூலங்களை ஏற்படுத்த வழிசமைக்கும் என்பதுடன் வடமாகணத்தில் மீள் குடியேறியுள்ள முஸ்லிங்களின் வாக்கு வங்கி மீள் குடியேராது வடமாகணத்தில் தேர்தல் பதிவுவை மாட்டும் செய்துள்ள வாக்களர்களினால் பலம் பெறவில்லை இந்த வக்களர்கள் உறங்கும் வாக்காளர் நிலைக்கு வரைவாக சென்றுவிட வாய்ப்புகள் உள்ளது இவ்வாறான நிலை வடமாகாண முஸ்லிம் வாக்கு வங்கியில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் காணப்டுகின்றது இவர்கள் விரைவா முடிவுகளுக்கு வருவது வடமாகாண மற்றும் புத்தளம் முஸ்லிம் வாக்கு வங்கியின் பலத்தை அதிகரிக்க செய்ய உதவும் இந்த விடயங்கள் நிறுவனமயப்படுத்தி  சிந்து செயல்படாவிட்டால் எதிர்கால வடமாகாண முஸ்லிம் பராளுமன்ற உறுப்புரிமை கனவாகிவிடும்

No comments:

Post a Comment

المشاركات الشائعة