சர்வதேசரீதியாக ஜனரஞ்சகமாக மதங்களுகிடையிலான உறவு மற்றும் ஒப்பீட்டு ஆய்வுகள் மூலம் பிரபல்யமான பேச்சாளரான டாக்டார் சாகிர் நாயிக்கிற்கு பிரிட்டனுக்குள் நுழைவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் கடந்த வருடம் ஜூன் மாதம் தடை விதித்தது இந்த தடை நேரடியாக பிரிட்டிஷ் ‘ஹோம்’ செயலாளர் தெரஸாவினால் விதிக்கப்பட்டது இதை தொடர்ந்து அந்த தடையை சட்டரீதியாக எதிர்கொள்ள சாகிர் நாயிக் பிரிட்டனில் மிக சிறந்த சட்ட ஆலோசகர்கள் , மற்றும் சட்டத்தரணிகள் மூலம் நுழைவு தடையை நீக்க தேவையான நடவடிகளைகளை மேற்கொண்டுவருகின்றார்.
இந்த நிலையில் நேற்று வெள்ளிகிழமை சாகிர் நாயிக் ஒக்ஸ்போட் பல்கலை கழகத்தின் ஒக்ஸ்போட் யூனியன் சட்டலைட் மூலம் ஏற்பாடு செய்யதிருந்த கேள்வி பதில் நிகழ்வில் கலந்து கொண்டு பல்கலை கழக சமூகத்தினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார் இதன்போது ஒக்ஸ்போட் பல்கலை கழகத்தின் ஒக்ஸ்போட் யூனியன் தலைவருக்கு தனது நன்றிகளை தெரிவித்த Dr. சாக்கிர் நாயிக் தனது பிரிட்டிஷ் நுழைவு தடை நீக்கப் பட்டதும் நேரடியாக வந்து சந்திபதாகவும் தெரிவித்தார்
No comments:
Post a Comment