ஜும்மாஹ் தொழுகையின் பின்னர் எகிப்தில் “Day of Departure”. என்று அழைக்கபடும் ஆர்ப்பாட்டம் பல இலட்சம் மக்களுடன்தொடங்கியுள்ளது இன்று முபாரக் அதிகாரத்தை விட்டும் அகற்றப்படும் நாள் என ஆர்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள் நம்புவதாக அங்கிருக்கும் சர்வதேச செய்தியாளர்கள் தெரிவிகின்றனர்
முபாரக் அரசுக்கு ஆதரவாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை எந்த பகுதிலும் காணவில்லை என்று எகிப்திய செய்திகள் தெரிவிக்கின்றன அதேவேளை நான் எகிப்தின் மண்ணில்தான் மரணிப்பேன் நான் நாட்டைவிட்டும் ஓடமாட்டேன் நான் ௬௨ ஆண்டுகள் சமூகசேவையில் ஈடுபட்டுள்ளேன் எனக்கு இப்போது வெறுப்பு ஏற்பட்டுள்ளது நான் இன்று பதவி துறப்பேன் ஆனால் பெரும் கலவர் ஏற்பட்டுவிடும் விரிவாக
ஒபாமா ஒரு சிறந்த மனிதர் ஆனால் அவருக்கு எகிப்தின் இயல்பு தெரியாது நான் பதவி நீங்கினால் இஸ்லாமிய வாதிகள் -இஹ்வானுல் முஸ்லிமீன்- அதிகாரத்தை பிடித்து விடுவார்கள் என்று ABC செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார் ஆனால் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு தாம் மறு சீரமைபையும் யாப்பு ரீதியான கவ்ரவமான உரிமைகளையும் கோருவதாகவும் அதிகாரத்தை எதிர்பார்க்க வில்லை என்றும் தாம் ஜாதிபதிக்கான தேர்தலிலும் பங்குகொள்ள போவதில்லை என்றும் அறிவித்துள்ளது
அதேவேளை சற்று முன்னர் எகிப்து அல் ஜஸீரா தலமையத்துக்குல் புகுந்த கும்பல் ஒன்று அதன் உபகரணங்களை அடித்து உடைத்துள்ளது
No comments:
Post a Comment