Search This Blog

Feb 22, 2011

வெனிசுலாவுக்கு கடாபி தப்பியோட்டமா?



21/02/2011
gadafiலிபியா தலைவர் கடாபி பதவி விலக கோரி அங்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. பெங்காசியில் துவங்கிய மக்கள் எழுச்சி லிபியாவின் திரிபோலி உள்ளிட்ட இதர நகரங்களுக்கும் பரவியுள்ளது.
அரசு தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் புரட்சியாளர்கள் உள்ளே நுழைந்தனர். லிபிய அரசின் கட்டிடம் மற்றும் போலீஸ் நிலையங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
அல்ஜமாஹிரிய்யாவின் இரண்டு தொலைக்காட்சி நிலையங்கள் மற்றும் அல்ஸபாபிய்யா ரேடியோ நிலையம் ஆகியன தாக்குதலுக்கு உள்ளானதாக எ.எஃப்.பி தெரிவிக்கிறது.
சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி அமைதியான முறையில் போராடும் மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு லிபிய அரசை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் கூறுகையில், கடாபி வெனிசுலா தப்பி செல்ல முயற்சி செய்வதாக கூறினார். இதனை வெனிசுலா அரசு மறுத்துள்ளது. இதனிடையே லிபியாவில் அனைத்து தகவல் தொடர்பு சாதனங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கத்தாஃபி தலைமையிலான சர்வாதிகார அரசு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுத் தள்ளுவதாக செய்திகள் வெளியாகின. இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் இறந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அரசுத் தொலைக்காட்சி மூலம் பேட்டியளித்த கத்தாஃபியின் மகன் ஸைஃபுல் இஸ்லாம் கத்தாஃபி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது: ‘போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால் உள்நாட்டு போரை சந்திக்க வேண்டிவரும். அரசுக்கெதிராக போராட்டம் நடத்தினால் பதிலடி கடுமையாக இருக்கும். ராணுவம் எனது தந்தைக்கு(கத்தாஃபி) பூரண ஆதரவை தெரிவித்துள்ளது. போர் வாகனங்களையும், ஆயுதங்களையும் பயன்படுத்தி போராட்டத்தை அடக்கி ஒடுக்குவோம். லிபியா எகிப்தோ துனீசியாவோ அல்ல.’ என மிரட்டியுள்ள அவர் ராணுவம் சற்றுக் கடுமையை கையாண்டதை ஒப்புக்கொண்டார்.
ஆனால், ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் 14 பேர்தான் மரணித்துள்ளதாகவும், 300 பேர் மரணித்ததாக வெளியான செய்தி அடிப்படையற்றது என தெரிவித்தார்.
நாட்டை பிளவுப்படுத்த இஸ்லாமியவாதிகளும், எதிர்க்கட்சியினரும் முயல்வதாக குற்றஞ்சாட்டிய ஸைஃபுல் இஸ்லாம் வெளிநாட்டு சக்திகள் போராட்டத்தை தீவிரப்படுத்துவதாக கூறினார்.

No comments:

Post a Comment

المشاركات الشائعة