அரசியல் மற்றும் இஸ்லாமிய துறைகளில் தகமைகளை கொண்ட ஆய்வு துறையில் அனுபவம் கொண்ட அரசியல் ஆய்வாளர் M.ஷாமில் முஹம்மட் யிடம் அரபு முஸ்லிம் பிராந்தியத்தில் இடம்பெற்று வரும் ஆர்பாட்டங்கள் தொடர்பாக எமது இணையதளத்தின் மற்றுமொரு கட்டுரையாளர் M. ரிஸ்னி முஹம்மட்அவர்கள் ஒரு நேர்காணலை செய்துள்ளார் இந்த நேர்காணலில் எமது கட்டுரையாளர் கேட்கும் கேள்விக்களுக்கு அவர் பதில்களை வழங்கியுள்ளார்.
அவை இந்த நேரத்தில் மிகவும் பொருத்தமான பயனுள்ள தகவல்களை கொண்டுள்ளது அதில் லிபியாவில் செயல்படும் இஸ்லாமிய இயக்கம் , எகிப்து, துனீசியா, லிபியா ஆகிய நாடுகளின் இஸ்லாத்தின் எதிர்காலம் நவீன இயக்கங்களான இஹ்வானுல் முஸ்லிமீன், ஹிஸ்புத் தஹ்ரீர் ஆகியவற்றின் பங்களிப்புகள் போன்ற விடையங்களை கொண்டுள்ளது அந்த நேர்காணல் இங்கு பதிவு செய்யப்படுகின்றது எமது கேள்விகளுக்கு அவர் வழங்கியுள்ள பதிகள் நேற்று வரையும் இடம்பெற்றுள்ள அரசியல் கள நகர்வுகளை அடிப்படையாக கொண்டது என்பது குறிபிடத்தக்கது
கேள்வி: கடந்த சில மாதங்களாக அரபு முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டு வரும் மக்கள் ஆர்பாட்டங்கள் பற்றி உங்களின் பார்வை அவ்வாறு அமைந்துள்ளது ? விரிவாக பார்க்க
பதில்: துனீசியா, எகிப்து , லிபியா, ஜோர்டான் , அல்ஜீரீயா, யெமன், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் மக்கள் ஆர்பாட்டங்கள் என்பது இஸ்லாத்தை ஆன்மீக பலமாக கொண்ட விடுதலை , மற்றும் சுதந்திர முழக்கம், இந்த நாடுகளில் மக்கள் தொடரான அடக்கு முறைகளை எதிர்கொண்டுள்ளார்கள் இந்த நாடுகளில் அரசாங்கத்தின் ஊழல், மக்களின் வறுமை , இஸ்லாத்தை போதிக்கும் சக்திகள் மீதான மிகவும் மோசமாக ஒடுக்குமுறை , இஸ்லாத்தின் எதிரிகளுடன் அரச அதிகாரிகளின் உறவு என்பனதான் இந்த அரபு முஸ்லிம் நாடுகளின் எழுச்சிக்கான முக்கிய காரணங்கள்
கேள்வி: ‘சுதந்திரம்’ ‘விடுதலை’ என்ற பதங்கள் அதிகம் இந்த ஆர்பாட்டங்களில் ஒலிக்கின்றது இந்த ,சுதந்திரம்’ ‘விடுதலை’ என்ற பதங்கள் எவ்வாறு மேற்கு நாடுகள் பயன்படுத்தும் ,சுதந்திரம்’ ‘விடுதலை’ என்ற பதங்களில் இருந்து வேறுபடுகின்றது ?
பதில்: மேற்குநாடுகள் சித்தரிக்கும் ‘சுதந்திரம் ‘ என்ற கண்ணோட்டத்தில் இதை பார்க்க முடியாது மேற்சொன்ன நாடுகளில் உள்ள மக்கள் சுதந்திரத்தை முதன்மையானதாக மதிக்கின்றனர் ஆனால் மேற்கு நாடுகள கூறும் சுதந்திரம் என்ற பதப் பிரயோகத்துக்கும், இந்த நாடுகில் உள்ள மக்கள் உணரும் ‘சுதந்திரம்’ ‘விடுதலை’ என்ற பதப் பிரயோகத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு இவர்கள் இரவு நேர கேளிக்கை விடுதிகளை திறப்பதற்கும், அரை, முழு நிர்வாணமாக நடமாடவும் , கடற் கரைகளில் நிர்வாணமாக சூரிய குளியலில் ஈடுபடவும், கட்டுபாடற்ற பாலியல் உறவு கொள்ளவும் கூடிய சுதந்திரத்தை கோரவில்லை
அவைகளை துனீசியா மற்றும் எகிப்து அரசாங்கங்கள் ஏற்கனேவே செய்து வைத்துள்ளது இரவு நேர களியாட்ட விடுதிகளையும் , பார்களையும், விபச்சார விடுதிகளையும் , நிர்வாண கடற் கரையையும் எகிப்தில் மேற்கு நாடுகளுக்கு நிகராக ஹுஸ்னி முபாரக் அரசு ஷாம் அல்ஷெயிக் கடற்கரை பிரதேசத்தில் பல ஆண்டுகளாக நிர்வகித்து வந்துள்ளது அந்த ஷாம் அல்ஷெயிக் கடற்கரையில் தான் பலஸ்தீனர்களை கொலை செய்துவிட்டும், அவர்களின் வீடுகளை உடைத்து தகர்த்து விட்டு வரும் இஸ்ரேலிய படை அதிகாரிகளும் , ஆப்கானிஸ்தானிலும் , ஈராக்கிலும் கற்பழிப்பு கொலை , கொள்ளை என்ற உழைத்து களைத்து வரும் அமெரிக்கா , மற்று பிரிட்டன் படை அதிகாரிகளும் ஓய்வு எடுத்து வருகின்றனர்.
அதேபோன்று துனுசியாவின் நகரங்கள் முழுவதும் பிரான்ஸ் பாரிஸ் நகருக்கு நிகரான நிர்வாண பெண்கள் நடனமாடும் விடுதிகள் , பார்கள் என்று குவிந்து இருக்கின்றது ஏன் லிபியாவிலும் இந்த நிலை கடந்த 7 வருடங்களாக தலை தூக்க தொடங்கியிருந்தது லிபியாவின் எண்ணெய் கிணருகளை கொண்டுள்ள பகுதிகளில் இந்த விடுதிகள் உருவாக்க பட்டுவருகின்றது இவற்றை இந்த நாடுகளில் ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள் பாவமாக தமது சமூக நீதிக்கு விரோதமாக பார்க்கின்றனர் இவர்கள் கோரும் சுதந்திரம் வேறு அதை மேற்கு நாடுகள் சித்தரிக்கும் விதமும் வேறு இந்த அரபு முஸ்லிம் நாடுகளில் மக்கள் ஆர்பாட்டங்கள் இந்த நாடுகளின் அரசாங்கங்களின் பொதுதன்மைக்கு எதிரானது பொதுத் தன்மையா அரசாங்கத்தின் ஊழல், மக்களின் வறுமை , இஸ்லாமிய விரோத போக்கு , மக்கள் எதிரியாக கருதும் இஸ்ரேல், அமெரிக்காவுடனான கள்ள மற்றும் பகிரங்க உறவு என்பன வற்றை குறிப்பிடலாம்.
கேள்வி : நீங்கள் உங்களில் ஒரு கட்டுரையில் ‘ஒன்றின் வீழ்ச்சி அதன் வழியில் அதன் அருகில் அதன் மாதிரிகளை கொண்டு விளங்கும் மேற்குலக சார்பு சர்வாதிகாரம் மீது சுழல் சூறாவளியாய் வீசுகின்றது’ என்று குறிபிட்டுள்ளீர்கள் இந்த சூறாவளியின் சொந்தகாரர் யார் ?
பதில்: ஒரு சொல்லில் விடை சொல்வதானால் இந்த சூறாவளியின் சொந்தக்கார சக்தி இஸ்லாம் என்றுதான் சொல்லமுடியும் , நான் மேற்சொன்ன நாடுகளில் பல இஸ்லாமிய சக்திகள் பல ஆண்டுகளா மக்கள் மத்தியில் வேலை செய்து வருகின்றது இந்த நவீன இயக்கங்களில் தோற்றத்துக்கு முன்பிருந்து இந்த பிராந்திய முஸ்லிம்களின் உள்ளங்களில் இஸ்லாம் பிரதான சக்தியாக வாழ்ந்து வருகின்றது இந்த நாடுகில் உள்ள கிராமங்கள் தோறும் இரண்டு நேரம் சாப்பிட மட்டும் முடியுமான மக்கள் ஐந்து தடைவைகள இறைவனை தொழுவதற்கு பின் நிற்பதில்லை லிபியாவில் 1913 ஆம் ஆண்டு தொடக்கம் இத்தாலிய ஆக்கிரமிப்பு படைகளுடன் உமர் முக்காதர் தலைமயிலான இஸ்லாமிய போராளிகள் படைத்த வீர காவியங்கள் லிபிய மக்கள உள்ளங்களில் இன்னும் பசுமையா இருக்கிறது அதேபோன்று மற்ற நாடுகளிலும் இந்த நிலை தொடந்து வந்துள்ளது இஸ்லாமிய இயக்கங்கள் வேலைத் திட்டங்களை நிறுவனப்படுதியுள்ளது இந்த இஸ்லாமிய இயக்கங்களுக்கு முன்பிருந்தே இந்த பிராந்திய மக்களின் உள்ளங்களை இஸ்லாம் ஆட்சி செய்து வருகின்றது என்பதுதான் உண்மை.
இந்த பிராந்தியங்களில் இஸ்லாம் என்பது அந்த பிராந்திய மக்களுடன் பிறந்து வளர்ந்து வளரும் வாழ்க்கை முறை இந்த மக்கள் மத்தியில் செயல்படும் இஸ்லாமிய நிறுவங்கள் அமைப்புகள் , இயக்கங்கள் என்பன இந்த மக்களை சரியா நெறிப்படுத்தும் வேலையை செய்துவருகின்றது இங்கு செயல்படும் குறிபிடத்தக்க சர்வதேச இஸ்லாமிய இயக்கங்களான இஹ்வானுல் முஸ்லிமீன், ஹிஸ்புத் தஹ்ரீர் போன்றவையும் பிராந்திய மற்றும் குறித்த நாடுக்கில் மட்டும் செயல்படும் இயக்கங்களான , ஸலபிகள் இயக்கம் , மாற்றத்துக்கான லிபிய இஸ்லாமிய இயக்கம் , அல் அந்நஹ்ழா துனீசியா இஸ்லாமிய இயக்கம் போன்றவகைகள் இந்த பிராந்திய எழுச்சிக்கு பின்னால் உள்ள இஸ்லாமிய இயக்கங்களாகும் இது அல்லாமல் வேறு பல இயக்கங்களுக்கும் ஆர்பட்டயங்களின் களத்தில் வேலைசெய்துள்ளது ஆக பிராந்தியத்தின் எழுச்சி என்பது இஸ்லாத்தை அரசியல் சக்தியாக கொண்டுள்ள எழுச்சி என்பதை விட ஆன்மிக சக்தியாக கொண்ட எழுச்சி என்று தான் கூறமுடியும்.
கேள்வி : லிபியாவில் நடைபெற்று வரும் எழுச்சியின் பின்னணி பற்றி சற்று விளக்கமாக கூறமுடியுமா ?
பதில்: லிபியாவை பொறுத்த வரையில் இராணுவத்தின் ஒரு சாரரும் கடாபியின் கூலி படையான ‘மக்கள் இராணுவமும்’ மக்களை கொன்று வருகின்றது கடாபி மிகவும் கொடுரமானவர் கடந்த 1996 ஆம் ஆண்டிலும் தலைநகரான திரிபோலியில் அமைந்துள்ள அபூ சலீம் சிறைச்சாலையில் ஒரு இரவில் 1200 கைதிகளை எந்தவித கருணையும் இன்றி படுகொலை செய்துள்ளார் இதுவரையுள் பல ஆயிரகணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளானர் பல ஆயிரக்கான இஸ்லாமிய புத்திஜீவிகள பல்கலை கழகங்களிலும் ஆய்வு மையங்களிலும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் மிக தெளிவான அல்லாஹ்வின் எதிரியாக லிபிய மக்கள் பார்கின்றனர் இங்கு ஆர்பாட்டங்களில் ஈடுபடும் பல இஸ்லாமிய கோத்திரங்களை இணைக்கும் இயக்கமாக ‘மாற்றத்துக்கான லிபிய இஸ்லாமிய இயக்கம்’ பார்க்க படுகின்றது. இந்த இயக்கம் சனூசி என்ற இம்மாமால் சுடான் ,மற்றும் லிபியாவில் இஸ்லாமிய அரசியல் , மற்றும் ஆன்மீக சிந்தனைகளை போதிக்க 1836 ஆம் ஆண்டு மக்காவில் உருவாக்கப்பட்டது தற்போது இயங்கும் ‘மாற்றத்துக்கான லிபிய இஸ்லாமிய இயக்கம்’ சனூசி இயக்க சிந்தனையும் தற்கால இயக்கங்களுடைய சிந்தனை போக்கையும் கொண்டுள்ளதாக பார்க்கபடுகின்றது. அன்றைய சனூசிய அமைப்பை 1836 ஆம் ஆண்டு உருவாக்கிய இமாமின் முழுப்பெயர் சயித் முஹம்மது இப்ன் அலி அஸ் சனூசி என்பதாகும்.
இந்த இஸ்லாமிய அரசியல் இயக்க பின்னணிகளை கொண்ட மாற்றத்துக்கான லிபிய இஸ்லாமிய இயக்கம் தற்போது லிபியாவில் ஆர்பாட்டங்களை வழிநடத்துவதாக அறிய முடிகின்றது சனூசி இயக்கம் இவர்கள் மேற்கின் ஆக்கிரமிப்புகளை எதிர்த்து 1902 ஆம் ஆண்டு தொடக்கம் 1913 ஆம் ஆண்டு வரை போராடியுள்ளது 1913 க்கு பின்னர் லிபியாவில் எழுச்சி பெற்ற உமர் முக்தாரின் போராட்டமும் இந்த பின்னணிகளை கொண்டுள்ளது இந்த இயக்கத்தின் வளர்ச்சி தொடர் 1969 ஆம் ஆண்டு கடாபினால் பதவி கவிழ்க்க பட்ட மன்னர் இத்ரீஸ் காலம் வரையும் நீடித்துள்ளது கடாபி இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் சுமார் 1500 பேரை சிறை பிடித்து ஒரு மூடிய சிறையினுள் வைத்து தனது கூலிப்டை மூலம் கொலை செய்யதுள்ளார் அதன் பின்னரா காலங்களில் அந்த இயக்கம் மிகவும் இரகசியமாக இயங்கி வந்ததாக ஊகிக்கப் படுகின்றது சனூசி இயக்க இறுதி ஆட்சியாளரான இத்ரீஸ் கால கொடியுடன் மக்கள் அல்லாஹு அக்பர் என்ற கோஷங்களுடன் தற்போது தமது ஆர்பாட்டங்களை மக்கள் நடத்துகின்றனர்.
இத்ரீஸ் மன்னர் லிபியாவை ஆண்ட ஒரே மன்னராகவும் ஒரு இஸ்லாமிய சிந்தை கொண்டவராகவும் பார்க்கப் படுகின்றார் லிபியாவை பொறுத்த வரை மேற்கு உலகம் கடுமையான பயத்தில் இருக்கிறது துனீசியா , எகிப்து, ஜோர்டான் ,யெமன் போன்று இங்கு அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளின் மேற்குலகிற்கு விசுவாசமான நிறுவனங்கள மிகவும் குறைவாக இருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் இதனால் துனீசியா , எகிப்து போன்ற நாடுகளின் இவர்கள் நிம்மதி பெருமூச்சு விடமுடியாது அதன் காரணமாக முழுமையா தமது உளவு நிறுவங்களின் கையில் நடவடிக்கைகளை கொடுத்து விட்டு முடிவுகளுக்காக காத்திருகின்றனர்.
இந்த நிலை மிகவும் ஆபத்தானது ஆப்கானித்தான் ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்காவின் உளவு நிறுவங்கள் செய்யும் அனைத்து அழிவு வேலைகளையும் இங்கும் இவர்கள் மேற்கொள்ள முயன்று வருவதாக தெரிகின்றது இங்கு அமைதி வழியில் ஆர்ப்பாட்டம் இயற்கைக்கு புரம்பாகதான் அமைப்பும் கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கு எதிராக சாத்விக முறைகளை பயன்படுத்தி போராடவும், ஆயுதங்கள் மூலம் போராடவும் எமது பலம் பெரும் இமாம்கள் அனுமதி அளிகின்றனர் இமாம் அபூஹனிபா போன்ற இமாம்கள் கொடுமையான முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு அவர்கள் தொழும் நிலையிலும் ஆயுதம் ஏந்தி போராட முடியும் என்று கூறியுள்ளானர்.
மற்ற இமாம்களான இமாம் ஷாபி , இமாம் மாலிக் , இமாம் அபூ ஹனிபா போன்றவர்கள் கொடுமையான முஸ்லிம் ஆட்சியாளர்ககள் தொழும் நிலையில் அவர்களுக்கு எதிராக ஆயுதம் தரிக்காமல் அனைத்து அமைதியான வழிமுறைகளையும் பயன்படுத்தி போராட முடியும் என்று தெரிவித்துள்ளனர் இங்கு களம் தான் போராட்ட வடிவத்தை தீர்மானிக்கின்றது என்பது உண்மை அனுமதிகள் உண்டு என்பதற்காக பொருத்தமற்ற வழிமுறைகளை தெரிவு செய்வதை இஸ்லாம் ஏற்று கொள்ளாது என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டும்
கேள்வி : இந்த அரபு முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டு வரும் எழுச்சிகள் புரட்சியாக மாறிவிட்டதா ?
பதில்: துனீசியா, எகிப்து , லிபியா, ஜோர்டான் , அல்ஜீரீயா, யெமன், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் துனீசியா, எகிப்து ஆகிய இரண்டு நாடுகளிலும் மக்கள் ஆர்பாட்டங்கள் இடம்பெற்று மேற்கு உலகம் சார்பான சர்வாதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளனர் ஆனால் இன்னும் எந்த புரட்சியும் அங்கு இடம்பெறவில்லை காரணம் அந்த நாடுகள் இன்னும் அமெரிக்காவினதும் , மேற்கு உலகினதும் வலுவான கட்டுபாட்டின் கீழ் தான் இன்னும் இருக்கிறது.
துனீசியாவில் பின் அலியின் அரசாங்கம் தான் தொடந்து இடைக்கால அரசாங்கத்தை கையில் வைத்துள்ளது அதேபோன்று எகிப்திலும் இராணுவம் கையில் வைத்துள்ளது இவை யாப்பு மாற்றம் சட்ட மறுசீரமிப்பு என்று நகர்ந்து செல்கின்றது இதன் மூலம் சுதந்திரமான தேர்தல் ஒன்றை விரைவில் நடத்தபோவதாக தெரிகின்றது ஆனாலும் எதிர் தரப்பில் செல்வாக்கான தலைவர்கள் மக்களால் இனம் கனப்படாத நிலையிலும் எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பும் , துனீசியாவில் அந்நஹ்ழா இஸ்லாமிய அமைப்பும் ஜனாதிபதி தேர்தலில் தாம் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என்று தெரிவித்துள்ளது இந்த நிலையில் அரசியல் களம் மேற்குலகுகிற்கு சுதந்திரமாக் திறந்து விடப்பட்டுள்ளது இதனால் மீண்டும் மேற்கின் மேலாதிக்கம் இந்த இரண்டு நாடுகளிலும் இலகுவாக அமர்ந்து கொள்ளும் அதானால் ஆர்பாட்டங்கள் மாற்றங்களை கொண்டுவருகின்றது என்றாலும் அது புரட்சி என்ற தரத்தை கொண்டு பார்க்க முடியாது உள்ளது எதிர்கால இஸ்லாமிய புரட்சி ஒன்றுக்கான வாயல்களை திறந்துள்ளது என்று கூறலாம்.
துனீசியா, எகிப்து ஆகிய இரண்டு நாடுகளிலும் மிகவும் கடுமையா இஸ்லாமிய விரோத அரசுகள் இஸ்லாம் பேசும் மக்களின் குரல் வளையை திரிகிக்கொண்டு இருகின்றன இந்த இஸ்லாமிய வாதிகள் சிறையில் அடைக்கபட்டார்கள் , கொலை செய்யப்பட்டார்கள், நாடு கடத்தப்பட்டார்கள், ஆயிரக் கணக்கான மக்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளில் வாடுகின்றனர் , பலர் காணாமல் போயுள்ளனர் எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிமீன் உட்பட பல இஸ்லாமிய இயக்கங்கள் தடைசெய்யப்பட்டது, மஸ்ஜிதுகளில் உரையாற்ற முடியாது பெரும்பாலான் புத்திஜீவிகள் தடை செய்யபட்டார்கள் நாட்டின் மஸ்ஜிதுகளின் உரைகள் கூட உள்நாட்டு அமைச்சின் கண்காணிப்பில் இருந்தது பல நூறு மஸ்ஜித் இமாம்கள் கடத்தப்பட்டு காணாமல் போனார்கள் இன்னும் பலர் சிறைகளில் இன்னும் எந்த குற்றசாட்டுகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் இன்னும் பல மனிதர்கள் முபாரக் அரசுக்கு எதிராக பேசியதிற்காக கடத்தப்பட்டு விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு கற்களை உடலில் கட்டி உயிருடன் கடலில் வீசப் பட்டார்கள் என்று தகவகள் தெரிவிக்கின்றன.
ஆகவே இந்த நாடுகளின் இஸ்லாமிய இயக்கங்கள் முதலில் இந்த அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைகின்றது அது மேற்கு சார்பான அரசாக இருந்தாலும் மக்களுக்கு முழு சுதந்திரத்தை வழங்கும் யாப்பு , அரசாங்கம் என்பனவற்றை அனுமதிக்க முற்படுகின்றது அந்த நிலை ஏற்படுத்தப் பட்டால் அது இஸ்லாத்தின் வளர்சிக்கு பெரிதும் துணை புரியும் என்று நம்புகின்றனர் ஆக தொடர்ந்தும் மேற்கு ஆசான்கள்தான் இந்த இரண்டு நாடுகளிலும் நிர்வாக ஆசனங்களில் இருக்கபோகின்றனர் இது இந்த இரண்டு நாடுகளிலுமுள்ள ஒரு ஒற்றுமை
கேள்வி : எகிப்தை பொறுத்தவரை இது உடனடியா கிலாபத் நோக்கிய இஸ்லாமிய அரசியல் எழுச்சியா வடிவம் பெறவும், தோன்ற போகும் அரசாங்கம் இஸ்லாமிய அரசாங்கமாக தோற்றுவிக்கப்பட்ட இஹ்வானுல் முஸ்லிமீன் நேரடியாக எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது இந்த அரபு முஸ்லிம் நாடுகளின் எழுச்சி இஸ்லாமிய அமைதி புரட்சி ஒன்றாக பரிமாணம் பெறுமா ?
பதில்: இந்த எழுச்சி எகிப்து, துனீசியா ஆகிய நாடுகளை பொறுத்தவரை உடனடியாக இஸ்லாமிய புரட்சி ஒன்றாக பரிமாணம் பெறாது ஆனால் விரைவாக இஸ்லாமிய புரட்சி ஒன்றை நோக்கி பரிணாம வளர்ச்சி அடையும் என்றுதான் களம் சொல்கின்றது இஸ்லாமிய இயக்கங்களை பொறுத்த வரையில் பிராந்தியத்தில் மக்கள் எழுச்சிக்காக கடுமையாக பாடுபட்டுள்ளார்கள் ஆனால் ஆர்பாட்டங்களில் பங்கு பற்றினார்கள் அவற்றை வழிநடாத்த வில்லை அதேபோன்று அந்த எழுச்சி இஸ்லாமிய புரட்சியாக மாற்றம் பெற எந்த வியூகங்களையும் அவர்கள் அமைக்கவில்லை அதற்கு காரணம் பிராந்தியத்தில் தற்போது ஒரு இஸ்லாமிய புரட்சி என்பதை அதன் பருவத்காலத்துக்கு முந்தியதாக பார்கின்றனர் இஸ்லாமிய புரட்சி ஒன்றுக்கான பருவகாலத்துக்கு இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்று கருதுகின்றனர் என்பதாக தெரிகின்றது .
கேள்வி : இந்த அரபு முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டு வரும் எழுச்சிக்கிடையான ஒற்றுமை வேற்றுமை என்ன ?
பதில்: துனீசியா ஆகிய நாடுகளை பொறுத்தவரை அனைத்து மக்களும் கந்துகொண்ட அனைத்து தரப்பினரும் ஒன்று பட்டு ஒரு இலக்குடன் மிகவும் அமைதியான முறையில் சர்வாதிகாரிகளை வெளியேற்றியுள்ளனர் அதன் பின்னரான நிலை பல மாற்றங்களுடன் மக்கள் விரும்பும் விடுதலை , சுதந்திரம் சட்டரீதியாக உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுடன் மேற்கு உலகின் வரம்பற்ற அதிகாரங்கள் ஓரளவு மட்டுபடுத்தபடுத்த நிலையில் மேற்கு மீண்டும் மேலாதிக்கம் செலுத்தும் நிலையில் இது வரை இந்த இரண்டு நாடுகளிலும் வித்தியாசங்களை காணமுடியாதுள்ளது
ஆர்பாட்டங்கள் நடைபெற்றுவரும் நாடுகளில் குறிப்பாக லிபியா தவிர்ந்த மற்றைய நாடுகளான , ஜோர்டான் , அல்ஜீரீயா, யெமன், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் எதிர் கட்சிகள் ஒத்த குரலில் நாட்டின் அதிகாரிகளை வெளியேற்றும் ஆர்பாட்டங்களில் முழுமையாக் ஈடுபடவில்லை குறிப்பாக , அல்ஜீரீயாவில் இஸ்லாமிய இயக்கங்கம் நாட்டின் அடுத்த தேர்தல் வரையும் தற்போது இருக்கும் அரசாங்கத்துக்கு அவகாசம் கொடுக்கவேண்டும் என்று கேட்டுள்ளதால் அதன் வேகம் சற்று குறைந்து வருகின்றது அதிரடியாக அல்ஜீரீயா நாட்டில் பல ஆண்டுகள் பழமை பாய்ந்த அவசரகால சட்டம் நேற்று நீக்கப்பட்டது மக்களின் பல கோரிக்கைகள் நிறைவேற்றபடும் என்று அரசாங்கள் அறிவித்துள்ளதும் அதற்கு சில இஸ்லாமிய சக்திகளின் ஆதரவு இருப்பதாலும் ,களம் இங்கு வித்தியாசப்படுகின்றது
(நன்றி: OruUmmah.org)
No comments:
Post a Comment