Search This Blog

Nov 2, 2010

கண்டல் காட்டில் மீள்குடியேறிய முஸ்லிம் குடும்பங்கள் பலவந்தமாக வெளியேற்றம் , குடிசைகள் தீக்கிரை

திருகோணமலை மாவட்டம்கிண்ணியா கண்டல் காடு பகுதியில் மீள்குடியேறிய முஸ்லிம் மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டதுடன், அவர்களது குடிசைகள் எரிக்கப்பட்டுள்ளன.
அவர்கள் நட்டிருந்த பயிர்களும் பிடுங்கி வீசப்பட்டுள்ளன. சீருடை அணிந்திருந்த பொலிஸாரே இவற்றைச் செய்ததாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் . இது பற்றி மேலும் தெரியவருவதாவது 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் இங்கிருந்து இடம்பெயர்ந்திருந்த இந்த முஸ்லிம் மக்களின் பெயர்கள் 1990 க்கு முந்திய வாக்காளர் பட்டியல்களில் உள்ளன. அரசாங்கத்தின் மீள்குடியேற்றக் கொள்கைக்கமைய இவர்கள் மீள்குடியேற்றப்பட்துள்ளனர் -இதனால் அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்பகுதியில் சுமார் 300இற்கும் மேற்பட்ட ஆண்டுகளாகத் தாம் குடியிருந்து பயிர் செய்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் விரிவாக பார்க்க
இவ்விடயம் சம்பந்தமாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.முபாரக்கிடம் கேட்கப்ட்ட போது அவர் ‘அரசாங்க அதிபரின் அனுமதியுடனேயே இவர்கள் குடியேற்றம் செய்யப்பட்டதாகவும் அவர்களின் காணி என்பதற்கான உறுதிப் பத்திரம், தேர்தல் இடாப்பு, பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், தேசிய அடையாள அட்டை என்பனவும் கண்டாக்காடு என்ற பெயரிலேயே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை மாலை அப்பகுதிக்கு விஜயம் செய்த கிண்ணியா உதவிப்பிரதேச செயலாளர் சீ.கிருஷ்ணேந்திரன், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை பார்வையிட்துள்ளனர் . மறுநாள் வியாழக்கிழமை கிண்ணியா பொலிஸாருக்கு இந்த மீள்குடியேற்றத்தோடு தொடர்பான பல ஆவணங்கள் பிரதேச செயலகத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
News:- Lankamuslim

No comments:

Post a Comment

المشاركات الشائعة